கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012

246 கதைகள் கிடைத்துள்ளன.

அதுவும் ஒரு மழைக்காலம்

 

 1980 ஜூலை. “மழையும் அதுவுமா பால்கனியில என்ன பண்ணிட்டு இருக்கே கமலா?” “உஷ்… சத்தம் போடாதீங்க. சென்னையில மழையே அபூர்வம். அதைவிட அதிசயம், தண்ணி கொடகொடன்னு கொட்டாம சில்லுனு சாரலை மட்டும் முகத்துல தெளிக்கிற இந்த பால்கனி. வாங்க, நீங்களும் வந்து கொஞ்சம் நில்லுங்களேன் தியாகு.” “சரிதான், உங்க அம்மா சொன்ன மாதிரி… நீ சரியான மழைப் பைத்தியம்தான். ஆனா, நீ பெத்ததைப் பாரு. ஒரு மூலையில மூஞ்சியைத் தூக்கிவெச்சிட்டு உட்கார்ந்திருக்கு.” கணவன் சொன்னதும்தான் தலையை மட்டும்


சதாசிவம்

 

 சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை. அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று இரவு தன்னுடன் சுந்தரி செல்போனில் பேசியதை அவன் நினைத்தபடி இருந்தான். அவள் டெல்லியில் இருந்து வரவில்லை. ஒரு வருடமாக இதய நோயோடு இருந்த அத்தை சுப்புத்தாய் நேற்று இரவு இறந்துபோனாள். அவள் சதாவைப் பார்க்க வேண்டும் என்று முருகமூர்த்தியிடம் கேட்டு இருக்கிறாள். சதாவின் செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. தொடர்ந்து அவர்


கலைஞர்களும் திருடர்களும்

 

 எது பருவம் தப்பினாலும், இந்த ஆடி மாதக் காற்று மட்டும் தப்புவதே இல்லை. நெடிதுயர்ந்த பனை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டே இருந்தன. விழுவதற்குத் தயாராக மரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த காய்ந்த பனை மட்டைகள் எழுப்பும் ஓசை மட்டுமே ஓடை முழுக்கக் கேட்டது. ராசதுரை தண்ணீரில் இருந்து எழுந்து வெளியே வர மனம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்த ஊற்று நீர் ஓடையில் குளித்தபடியே சத்தம் போட்டுக் கத்தினான். அவனது ஒவ்வொரு சொல்லும் சுற்றியிருந்த மலையில் பட்டு


நிரூபணம்

 

 வந்த பில்லை கல்லாவில் வாங்கிப் போட்டார் செல்லப்பா, “அம்பது காஸ் சில்ற இருக்கா?” சட்டை பையையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய வாடிக்கையாளர் – கல்லாவின் மீது இருந்த வறுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். வழக்கம்போல சில்லறைக்கு மிட்டாய் கொடுத்துக் கணக்கை முடித்தார் செல்லப்பா. “எல்லாக் கடைலயும் முட்டாய் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. ஒரு நாளைக்கு மொத்தமாச் சேத்து, பில்லுக்கு துட்டுக்குப் பதிலா முட்டாயத் தரப்போறேம் பாருங்க” – வாடிக்கையாளர் சிரித்தபடி வெளியேறினார். ராமனாதன் உட்காரவில்லை. மனசுக்குள் அலை


கெட்ட வார்த்தை

 

 எனக்குக்கூட இப்படித்தான் சொல்லணுமா? எரிச்சலில் மொட்டை மாடியில் இருந்து தலைகுப்புறக் குதித்துவிட வேண்டும்போல இருந்தது. கையில் இருந்த சிகரெட்டை வேகமாகத் தரையில் அடிக்க, அது தீப்பொறிகளைச் சிதறலாகப் பரப்பி அணையாமல் புகைந்தது. அவன் எப்போதும் சொல்லும் அந்த கெட்ட வார்த்தையை அப்போதும் சொன்னான். அது, பட்டாசுச் சத்தங்களோடு கலைந்து, அலை அலையாக வீரியம் இழந்து, காற்றில் கரைந்து மறைந்தது. விடிந்தால் தீபாவளி. மாதக் கடைசியில் வரும் கேவலமான, யாருமே விரும்பாத தீபாவளி. த்தூ… சொந்த ஊருக்குப் போக