கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 15, 2012

31 கதைகள் கிடைத்துள்ளன.

மாம்பழம் வேணும் !

 

 ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், “”எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!” என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன். “இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் அவன். நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை


குயிலின் குரல் ரகசியம் !

 

 முன்னொரு காலத்தில் ஒரு அரச குமாரனும், ஒரு குடியானவனின் மகனும் இணை பிரியா நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் படகில் ஏறி அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒரு ஜாலிடிரிப் அடிக்க தீர்மானித்தனர். குடியானவரின் மகன் வேலு புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவன். இவனின் இசையில் மயங்கித்தான் அரச குமாரன் ரவீண், இவனிடம் நட்புக் கொண்டான் என்பது உண்மை. “”டேய் வேலு! நான் படகை மெதுவாக செலுத்துவேன். நீ அதற்கு ஏற்ப, அந்த சூழலை கவரும் வண்ணம் உன்


குண்டோதரன் !

 

 குடந்தை நகரத்தில் குப்பன் என்றால் யாருக்கும் தெரியாது. குண்டோதர குப்பன் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை பிரசித்தம். குழந்தையாக இருக்கும் போதே அவன் பாட்டி செல்லமாக வயிறு புடைக்க ஊட்டிவிடுவாள். அப்போதே ஜூராசிக் பேபி ஆகிவிட்டான். வயது கூட கூட வளர்ச்சியும் அபரிதமாகக் கூடியது. தொப்பையும் தொந்தியும் வயதுக்கு மீறி குண்டானதால் எல்லாரும் அவனை குண்டோதரா என அழைத்தனர். பள்ளியிலும் எந்த விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை. அவன் தந்தை தருமன் அவனை, “தினந்தோறும் ஒருமணி நேரம்


பிறவிப்பகை நட்பாக முடியாது !

 

 ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு, கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும் வசித்து வந்தன. கீரியும், எலியும், மரத்தின் வேரின் கீழ் உள்ள வளைக்குள் தனித்தனியாக வசித்தன. பூனை, மரத்தின் அடியில் உள்ள பெரிய பொந்தில் வசித்தது. ஆந்தை, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு பொந்தில் வசித்தது. எலியின் நிலைமை தான் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. ஆந்தை, பூனை, கீரி இவற்றின் கண்களில் படாமல், எலி தினமும் இரை


நான்தான் பெஸ்ட் !

 

 ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை அனுபவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். நித்திரை செய்யும் போது சிறு குறை இருந்தாலும், அவனால் சரியாகத் தூங்க முடியாது. ஒருநாள் இவர்கள் மூவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டது. “தங்களுக்குள் உயர்ந்த ரசிகன் யார்?’ என்ற கேள்வி