கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 8, 2012

24 கதைகள் கிடைத்துள்ளன.

நிராகரிக்கப்பட்டவன்

 

 கண்களில் பயத்தோடு ஈட்டன் ஹவுஸ் அகதிகள் நிலையத்தில் அவன் நின்றுகொண்டு இருந்தான். அகதிகள் எப்போதும் பயத்துக்கு உரியவர்கள்தான். டோக்கன் நம்பர் கொடுத்து இருந்தார்கள். கையில் இருக்கும் நீல நிறத் துண்டில் இலக்கம் 14 என்று அச்சிடப்பட்டு இருந்தது. அவனுக்குச் சிரிப்பு வந்தது. 14-ம் திகதிதான் அவனது பிறந்த திகதியும். வாழ்க்கையில் 14-ம் திகதி, அவனுக்கு எந்த சுபிட்சத்தையும் கொண்டுவரவில்லை. வலது பக்கம் ஒரு செக்யூரிட்டி இருந்தார். அவர் ஆப்பிரிக்க நாட்டுக்காரர். இடது பக்கச் சுவரில், ‘நீங்கள் உங்கள்


வெளிய

 

 முள் தோப்பு எங்கும் மல நாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மாதான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மணிக்கு எல்லாம் விழிப்பு வந்துவிடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே, பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும்.’பறவை கள் சத்தம் கேட்டால் பூச்சி, பொட்டெல்லாம் போய்விடும்’னு பெரியம்மா சொல்லும். தோட்டத்துக் கதவைத் திறந்து, முதல் ஆளாக பெரியம்மா, குப்பைப் பள்ளத்துக்குப் போகும். குப்பைப் பள்ளத்துக்கு முன்னாடியே உட்கார்ந்துவிடும். பெரியம்மா போன உடனே அடுத்தடுத்து


மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…

 

 சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோஷங்கள் இருந்தன. ஒன்று, சுந்தரி. இன்னொன்று, நைட் ஷிஃப்ட் வேலை. முகத்தில் படிந்து இருந்த மழை நீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அவள் சிரித்த பின்புதான் கம்பெனிக்குள் நுழைந்தான். அவளின் சிரித்த முகம் மனதில் நிழல் ஆடிக்கொண்டு


சட்லெஜ் நதி அமைதியாக ஓடியது

 

 ”பைத்தியக்காரக் கிழட்டு முண்டமே, இரண்டு நாட்களாக உன் தொல்லை தாங்க முடியவில்லை!” என்று கடுங் கோபத்துடன் சீறி விழுந்தான் இன்ஸ்பெக்டர். தனது மேஜை யின் மீது இருந்த நீளமான பிரம்பை எடுத்து, அந்த வயதான பெண்ணை அடிப்பதுபோலக் கை ஓங்கினான். அடுத்த நொடியே, தனது செயலால் வெட்கித் தலை கவிழ்ந்து, அந்தப் பிரம்பைத் தூக்கித் தூர எறிந்தான். காவல் நிலையத்தில் இருந்த பிற போலீஸார் தங்க ளின் பணிகளை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். இன்ஸ்பெக்டர் தனது எதிரில் நின்ற மூதாட்டியின் கண்களைக் காணச் சக்தியற்று,


காமூஷியாவும் கருணாகரனும்

 

 ‘எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக கதை வேறு எழுத வேண்டுமா? என யோசித்து இத்தனை காலம்வரை ஒரு கதைகூட எழுதாமல் போய்விட்டேன். இப்போது எழுதி யார் சாபத்துக்கு ஆளாகப்போகிறேனோ?’- கருணாகரனுக்கு அவ்வப்போது இம் மாதிரி எண்ணங்கள் வருவது உண்டு. எதைச் செய்தாலும் அதைச் செய்வதற்கு முன்பே நூத்தி எட்டு முன் அபிப்ராயம் வந்துவிடும். அந்த அபிப்ராயத்துக்கு அவனே மரியாதை தராததுதான் இதில் விசேஷம். சமீப காலங்களில் அவனுக்கு ஒரு காதல் வந்து, அந்தக் காதல் அவனை