கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

45 கதைகள் கிடைத்துள்ளன.

பொண்ணு செஞ்சா குத்தம்… அம்மா செஞ்சா?!

 

 வாஷிங்மெஷின் துவைத்து முடித்த துணிகளை இப்போது அலசத் துவங்கியதால், அதன் குரல் மாறி இருந்தது. தோசையை மடக்கி எடுத்து வந்த ரத்னா, தட்டில் இருந்த தோசையை அனு இன்னும் சாப்பிட்டு முடிக்காததைப் பார்த்து, ”ஏய்… எங்கடி யோசனை?” என்றாள். ”எனக்குப் போதும்மா…” ”என்ன போதும்? ரெண்டு தோசைதான் சாப்புடுவியா?” ”போதும்னா விடேன்.” ”எப்பவும் நாலு சாப்புடுவியே? ஏன் பசிக்கலையா?” பதில் சொல்லாமல் அனு எழுந்து கை கழுவி வர… எதிரே நின்றாள் ரத்னா. ”என்னாச்சு உனக்கு? ஒரு


காதல் பாப்பா!

 

 ‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா நல்ல உள்ளங்களோட அட்வைஸ்! அதே போல, சென்னை காலேஜை செலெக்ட் பண்ணி, பயபக்தியா குலசாமியைக் கும்பிட்டு, முதல் நாள் காலேஜுக்குப் போனேன். கிளாஸ்ல என்டரானதுமே சிரிச்ச முகமா ஒரு பொண்ணு ”ஹலோ”ன்னுச்சு. ”ஹாய்”னு நான் சொன்னதும், ”ம்… ப்ரீத்தி சொல்லு”ன்னா. நானும் எல்.கே.ஜி-யில ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனதுல இருந்து, இப்ப எலெக்ட்ரிக் டிரெய்ன்ல வந்தது வரை


தாத்தாப் பூ..

 

 சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன் கால்களைத் தண்ணிக்குள்விட்டு ‘சளக் புளக்’ என்று உழப்பிக்கொண்டு ஒரு முக்கியமான வேலை யில் இருந்தான். நாலு வயசுப் பையனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை என்று நீங்கள் கேட்கலாம். பெரியவர்கள் என்று சொல்லப்படுகிற முற்றிய மனிதர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் என்ன தெரியும்? உங்களுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போய்விட்டன. குறிப்பாக, சந்தோஷம் தருகிற விஷயங்கள் எல்லாவற்றையும்


விருப்பமுள்ள திருப்பங்கள்!

 

 ”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண மண்டபம் முழுக்கச் சுற்றமும் நட்பும் கூடிக் குலாவிக்கொண்டு இருந்தது. ”கடமையை முடிச்சிட்டோம்ல… மல்லிகா” தன் பக்கத்தில் பூரிப்புடன் நின்றுகொண்டு இருந்த தன் மனைவியிடம் கேட்டார் பரமசிவம். அவரின் கையை அழுத்தினாள் மல்லிகா. அந்த அழுத்தத்தில் இருந்தது ஓராயிரம் வார்த்தைகளின் திருவிழா! கண்களின் கடைக்கோடியில் திரண்ட கண்ணீர்த் துளிகளைத் துடைத்தபடியே பரமசிவம் மணமேடையில் இருந்து இறங்கி, மண்டபத்தின்


பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்

 

 புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18 வருடங்கள் ஓடிவிட்டதை நினைக்கவே சிவசண்முகத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. எப்பவாவது ஊர் நினைப்பு வரும். நடேசமூர்த்தி சைக்கிளை ஓசி வாங்கி, அதில் பல்டி முதல் கைவிட்டு ஓட்டுவது வரை அநேக வித்தைகள் பழகியது… நடேசமூர்த்தியே பயந்துவிட்டான். சைக்கிள் உயரம்கூட இல்லாமல், ஆளே சராசரிக்குக் கொஞ்சம் கட்டைகுட்டை யாக உருண்ட தேகம், எப்படி சைக்கிளில் வித்தைகள் பழகினான் தைரியமாக!