Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2012

44 கதைகள் கிடைத்துள்ளன.

பசி

 

 பசி எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பசி என்றால், அடுப்பில் மனைவி சாதத்தை வடித்துக் கொண்டிருக்கும்போதே ‘பசிக் கிறது, பசிக்கிறது’ என்று கத்து வோமே அந்தப் பசியையோ, அல்லது ஹோட்டலில் ‘ஸ்பெ ஷல்’ சாப்பாட்டுக்காக டிக்கட் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு, மேஜையைச் சுத்தம் செய்யும்வரை தாள முடியாமல் ஒரு கையால் வயிற்றைப் பிடித் துக்கொண்டு மறு கையால் மேஜையில் சிந்திக் கிடக்கும் சாம்பார் ஈரத்தில் டிக்கட்டை வைத்துக்கொண்டு நிற்போமே அந்தப் பசியையோ குறிப்பிட வில்லை.


அன்பும் அரையணாவும்

 

 எனக்கு அப்போது பத்து அல்லது பதி-னொன்று வயது இருக்கும். கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு தெருவில் குடியிருந்தோம். சைனா பஜாரி லிருந்த பச்சையப்பன் கல்லூரி ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். தினம் காலையில் ஸ்கூலுக்குப் போகும்போது என்கூட என் நண் பர்களான கோபுவும் பாலு-வும் வருவார்கள். அமிஞ்சிக்கரையிலிருந்து பாரீஸ் கார்னர் செல் லும் பஸ்ஸில்தான் தினம் காலை 9-15 மணிக் குப் போவோம். சில நாட்கள் நாங்கள் மூவரும் அவரவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி ஒன்று சேர்ந்து


தாயாரம்மா

 

 சொர்ணசேரி வானொலி நிலையம். இயக்குநர் மைதிலியின் எதிரில் அமர்ந்திருந்தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ராஜகீர்த்தி. “மிஸ்டர் கீர்த்தி! அகில இந்திய வானொலி நாடக விழாவில் ஒரு சிறப்பான நாடகத்தைத் தயாரிச்சு வழங்கணும். ஸ்கிரிப்ட் ஏதாவது ரெடியா இருக்கா?” கீர்த்தி உதடு பிதுக்கினான். “பொதுவாகவே வானொலிக்கு நாடகங்கள் எழுதுற வங்க எண்ணிக்கை ரொம்பக் குறைஞ்சுபோச்சு மேடம். என்கிட்ட 20-க்கும் மேற் பட்ட ஸ்கிரிப்ட்கள் இருக்கு. பெரும்பாலானவை டாகுமென்ட்டரி தரம். பிரசார நெடி அதிகம். நாடக அம்சமே இல்லை.” “இப்படிச் சொன்னா


மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்

 

 ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்., கிரீமைத் தடவி தலை வாரிக்கொண்டிருந்தார். கண்ணாடியில் தெரிந்த அவரது முகத்தைப் பார்க்க அவருக்கே திருப்தியாக இருந்தது. முன்னைவிட இப்போது சற்று சிவந்து விட்டிருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. ரஷ்யாவிற்குப் போய் ஒரு வருஷம் தங்கினால், இன்னும் நன்றாகச் சிவந்து விடலாம் என்று அவர் எண்ணினார். ரஷ்யா என்று எண்ணியதும், அவர் பார்வை கண்ணாடியிலிருந்து நகர்ந்து, சுவரின் நடுவில் மாட்டப்பட்டிருந்த காலண்டரின் பக்கம் பாய்ந்தது. ஏப்ரல் 24. அந்தத் தேதியைக் கண்டதும், அவரு டைய கலெக்டர் அந்தஸ்தையும்


யார் அது அழுவது?

 

 பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது அந்த ஒலி. ஒரு பெண் அழும் சத்தம். சின்னதாக விசும்பல், கொஞ்சம் மௌனம், பின்னர் என்னமோ சொல்லி அரற்றல், மறுபடி அழுகை. பின்னிரவின் மௌனத்தில் அந்தச் சத்தம் என்னை ஆட்கொண்டு அதுவரை நிச்சலனமாக இருந்த உணர்வில் கரைந்து மன வருத்தத்தை அதிகரித்தது. பால்கனியில் நின்று பின் இரவின் நிசப்தத்தில் சிகரெட் புகைக்கும் 10 நிமிடங்கள்தான் குடும்பம், அலுவலகம்,


உம்மாச்சி

 

 விடி விளக்கு குழறிற்று. சன்ன லைத் திறந்தால் விளக்கு அவிந்துவிடும். வெளியே அத்தனை பேய்க் காற்று! மாடிக் குடித்தனக்காரர் சன்னலை அறைந்து மூடினார். அவரது சகதர்மிணியின் குரல் சன்னலை அறைந்து கொண்டு பாய்ந்து வந்தது. அந்த அம் மாளின் கோபத்துக்குக் காரணமாக விளங்கிய கைக்குழந்தை தனது முழு பலத்தையும் பிரயோகித்து, ‘வராட், வராட்’ என்று அலறிற்று. வெளியே புயலோடு மழையும் கை கோத்துக்கொண்டுவிடவே, எங்கள் இருப்பிடமான இரண்டு மாடிக் கட்டடமே ஆடுவது போலிருந்தது. அதி லிருந்த ஏழு


அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!

 

 - கோவிண்ட்! என்றார் மேனேஜர். – யெஸ் சார்! என்றேன். – நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும். – யெஸ் சார்! – குணரத்னம் வர்றார். அடிஷனல் ஜாயின்ட் செக்ரெட்டரி! ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி! பெரிய புள்ளி! – யெஸ் சார்! – நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார். – யெஸ் சார்! – ‘ஏ’ கிளாஸ் வசதி கொடுக்கணும்! வால்யூம் குறைத்து – யெஸ் சார்! என்றேன். – என்ன, சுருதி இறங்குது? – சார்! என்னைக்


கைக்கிளை

 

 உண்மையில் இது ஒரு பேய்க் கதை என்றபோதும், 40 வயதாகிற நாவலிஸ்ட் ஒருத்தன் கடைசி வாய்ப்பாகக் காதலுற்ற கதை என்பதாகவும் இதைச் சொல்லலாம். சனியன் 40 வயசு வரைக்குமா காதலித்துத் தொலைக்கவில்லை என்று கேட்கிற அவசரக்குடுக்கைகள் சற்று வாளா விருங்கள். நல்ல தமிழ் வாத்தியார் வாய்த்திருந்தால், இந்தக் கதையின் தலைப்பே உங்களுக்கு அவனுடைய முந்தைய காதல் கதைகளின் லட்சணத்தை விளக்கியிருக்கும். மற்றவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். கைக்கிளை என்பதாக தமிழ் இலக்கியத்தில் ஒரு திணையே உண்டு. (திணை


இரும்பூரான் காதல்

 

 ”ஹெ… ஹெ… ஹேய்..!” என்று கூவியபடி, காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே வாத்துகளை ஓட்டிச் செல்கி றான் அந்த வாத்துக்காரன். ”வாக்… வாக்… வாக்… வாக்…” என்று கூவிக்கொண்டு, உடலை அவலட்சணமாக அசைத்தபடி தத்தக்க பித்தக்க என்று நடக் கின்றன அந்த வாத்துகள். தரையில் வரி வரியாகத் திரிசூலம் போட்டதுபோல் பதிந்த அவற்றின் காலடிகளை யும், அவற்றின் நடையழகையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற ஒரு பையன், எதிர்ப்பக்கத் திலிருந்து கையில் ஒரு பாத்தி ரத்துடன் வந்த பெண்ணைப்


ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

 

 துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல் கொய்யாப் பழமாக வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதல். சாமி கும்பிடும்போதே சைக்கிளுக்குக் குறுக்காக வந்து, அவனைக் குப்புறத் தள்ளப்பார்த்த குருட்டு நாயைக் கெட்ட சகுனமாக நினைக்கவில்லை அவன். குடித்துவிட்டு வந்திருந்த தன் அப்பன் குப்பைக் குழியில் விழுந்திருந்ததைப் பாதி வழியில் பார்த்ததும்தான் பதறினான். போகிற காரியம் நாசமாகத்தான் போகும் என்று அப்போதே அவனுக்குத் தெரிந்துபோனது. பள்ளிக்கூடத்து