கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 7, 2012

5 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிவோம்… சந்திப்போம்..!

 

 வண்டியை காரிடாரில் நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்ததும், தனிமை என்னை அப்பிக்கொண்டது. இந்த பாழாய் போன பணத்திற்காக என் உயிரின் பாதியாய் வந்தவளை பிரிந்து எங்கோ தூர தேசத்தில் இருக்கிறேன் என்ற உண்மை சுடும் போது பணத்தின் மேல் கோபமாய் வரும்.. என்ன செய்வது.. பாசத்தை பகிர்ந்து கொள்ள கூட பணம் தேவை படுகிறதே… தூக்கத்தை விட்டு விழித்தவுடன் அடுத்த நிமிடமே எதற்கெடுத்தாலும் பணம் தேவைப் படுகிறதே. “ அம்மா மூணு வருஷம் போய்ட்டு வந்துடறேன்.. ப்ரியா, கல்யாணத்தை


காசியில் பிடிச்சத விடணும்!

 

 தன் அப்பா ஸ்ரீதரின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் அரவணைப்பில் இருந்த ராஜஸ்ரீ வலது கையில் நூலில் பறந்து கொண்டிருந்த ஹீலியம் பலூன் இருக்க, இடதுகை கட்டை விரலை சூப்பிக்கொண்டிருந்தாள். அவர்கள் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர் அவளது அம்மா ராஜலக்ஷ்மியும் அண்ணன் பிரபுவும். பிரபுவின் வலது கையிலும் ஹீலியம் பலூன் ஒன்று பறக்க இடது கையால் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான். ராஜலக்ஷ்மி நடக்க வாகாகத் தன் புடவைக் கொசுவத்தை சிறிது தூக்கிப் பிடித்துக்


நான் கதை சொன்னால் கேட்காது

 

 மிகச் சிறிய குழந்தை, குழந்தை என்று கூட சொல்ல முடியவில்லை. சிசுபோலத் தெரிந்தது. விஞ்ஞான – உடற்கூற்றியல் விரிவுரைகளின் போது காண்பிக்கப்படுகின்ற ஒளிப்படங்கள், காணொளிகளில் இருப்பது போல தலைபெரிதாகத் தெரிந்தது. முழுமையாக வளர்ச்சியடையாதது போலத் தெரிந்த உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்த அந்தக் குழந்தையின் கால்களை கத்தரிக்கோல் போல இருந்த பெரிய ஆயுதமொன்றால் யாரோ நறுக்கினார்கள். குழந்தை வேதனையில் துடிப்பது தெரிந்தது. அவர்களிடம் எந்த சலனமும் இல்லை. தங்கள் காரியத்தில் கண்ணாக சாம்பாருக்கு கத்தரிக்காய் நறுக்குவது போல அனாயாசமாக


சூனியக்காரனின் பூனை

 

 கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின் தொடக்கம் தெரியும். முதன் முதலில் அங்கு வந்து குடிசை போட்டவன் யார் என்று இன்று யாருக்கும் தெரியாது. அது பழங்கதை. படிப்படியாக சுமார் ஐம்பது அறுபது குடும்பங்கள் நிரந்தரமாக அங்கே வசிக்க ஆரம்பித்து விட்டன. சின்னதும் பெரியதுமாக வீடுகள்… குடிசைகள்… இஷ்டப்பட்ட திசையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தன. மின்சாரமும் குழாய் நீரும் முழுமையாகக் கம்பத்தை இன்னும்


பைரவன்

 

 காலை மெதுவாகப் புலர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் ஒவ்வொன்றாக விழித்துக் கொண்டு சங்கீதமாகக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தன. அந்தச் சப்தத்தோடு சற்றும் சுருதி கூடாமல் நாராசமாய் இரைந்தவாறே பால்காரனின் மொபெட் வண்டி தெருவிற்குள் நுழைந்தது. தெருவின் கடைசியில் பரணியின் வீடு இருக்கிறது. பால்காரன் வழக்கம் போல சீட்டியடித்துக் கொண்டே பரணியின் வீட்டுக் கதவில் தொங்க விடப்பட்டிருந்த பையில் பாக்கெட்டுகளைத் திணித்தான். அப்போது கூட அவன் அது அங்கிருந்ததைக் கவனிக்கவில்லை. லேசாக மிதித்தும் விட்டான். அடுத்த சில நிமிடங்களில் சுகுணா