கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 5, 2012

11 கதைகள் கிடைத்துள்ளன.

இரும்பூரான் காதல்

 

 ”ஹெ… ஹெ… ஹேய்..!” என்று கூவியபடி, காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே வாத்துகளை ஓட்டிச் செல்கி றான் அந்த வாத்துக்காரன். ”வாக்… வாக்… வாக்… வாக்…” என்று கூவிக்கொண்டு, உடலை அவலட்சணமாக அசைத்தபடி தத்தக்க பித்தக்க என்று நடக் கின்றன அந்த வாத்துகள். தரையில் வரி வரியாகத் திரிசூலம் போட்டதுபோல் பதிந்த அவற்றின் காலடிகளை யும், அவற்றின் நடையழகையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற ஒரு பையன், எதிர்ப்பக்கத் திலிருந்து கையில் ஒரு பாத்தி ரத்துடன் வந்த பெண்ணைப்


ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

 

 துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல் கொய்யாப் பழமாக வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதல். சாமி கும்பிடும்போதே சைக்கிளுக்குக் குறுக்காக வந்து, அவனைக் குப்புறத் தள்ளப்பார்த்த குருட்டு நாயைக் கெட்ட சகுனமாக நினைக்கவில்லை அவன். குடித்துவிட்டு வந்திருந்த தன் அப்பன் குப்பைக் குழியில் விழுந்திருந்ததைப் பாதி வழியில் பார்த்ததும்தான் பதறினான். போகிற காரியம் நாசமாகத்தான் போகும் என்று அப்போதே அவனுக்குத் தெரிந்துபோனது. பள்ளிக்கூடத்து


கூட்டத்தில் ஒருவன்!

 

 அந்த புதன்கிழமை வந்திருக்காவிட்டால், ரங்கா மற்றபடி ஒரு சாதாரணன். திருச்சியில் வேதியியல் படித்து, நேஷனல் கெமிக்கல் கம்பெனியின் ஆர் அண்ட் டி பிரிவில், டெல்லியிலும் மும்பையிலும் 25 வருடங்கள் குப்பை கொட்டிவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கொல்கத்தா வந்து சேர்ந்திருந்தான். காவிரிக் கரையில் வளர்ந்த மனைவி வேதவல்லி ‘ஆவோ… ஜாவோ’ என்று ஹிந்தியில் நான்கு வார்த்தைகளாவது கற்றுக்கொண்டாள். தொண்டைக் காற்று அதிகம் புரளும் பெங்காலி அவளை நான்கு சுவர்களைவிட்டு வெளியே கொண்டுவருவது இல்லை. மூத்தவன், கண்ணன். சாஃப்ட்வேர்


ஹேப்பி தீபாவலி

 

 ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாயல் டைரக்ஷனில் ‘அழகர்மலை’ ஆர்.கே.ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அப்படி இருக்கும்! ‘படையப்பா’ ரஜினி பேக்கோடு, ஃப்ரீ கக்கூஸில் இருந்து சாப்பாட்டுப் பொட்டலக் கூண்டு வரை சரக்கர்கள்… அரக்கர்கள். பெரிய பெரிய சரவணா ஸ்டோர்ஸ் பைகளுக்குக் காவல், பரோட்டா பார்சலோடு கணவனுக்கு வெயிட்டிங், மல்லிகை உதிரஉதிர மாமியாரைச் சபித்தல்… தாய்க்குலங்கள். மாலை பேப்பரை வெறிப்பது, வாட்ச் பார்த்துக் கதறுவது, அங்கும் இங்கும் ஓடி அலறுவது,


கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!

 

 எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க காற்றோடும் காட்டுக் குருவிகளோடும் உரையாடிக்கொண்டு வந்தார். குயில்களோடு சேர்ந்து பாடிக்கொண்டும் வந்தார். கடந்து வந்த ஒவ்வோர் ஊர்க் கிளிகளும், குருவி, காகங்களும் அடுத்த ஊர் எல்லை வரை உடன் வந்து, பிரிய மனம் இல்லாமல் தத்தம் எல்லைக்குத் திரும்பின. காடல்குடி மாரிச்சாமி நாயக்கர் வழி மறித்து அழைத்துப் போய் குடிக்கக் கொடுத்த இரண்டு செம்பு கம்பங்கஞ்சி,


நான் கணவன்!

 

 தட்டுத்தடுமாறி ஒருவழியா பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சு ‘எங்கூரு நாட்டரசன்பேட்டையில் முதன்முதலா டிகிரி முடிச்சது நாங்கதாம்லே!’னு மமதையில் திரிஞ்சிட்டு இருந்த காலம். 17 அரியர்ஸை முட்டி மோதி க்ளியர் பண்ணி, டிகிரியை முடிச்ச ஒரு வீரனுக்கு எவ்வளவு அசதியும் பெருமையும் இருக்கும். அதைஎல்லாம் அனுபவிக்கவிடாம, ‘நம்ம சினை மாட்டை மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போ ராசா!’ன்னு ஆரம்பிச்சாங்க வீட்ல. ஒரு பட்டதாரி மாடு மேய்ப்பதா? இல்லாத மீசை துடிக்கப் புறப்பட்டேன். வேற எங்கே… வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு! ஒண்ணாப்புல கூடப்


யானைக் கனவு

 

 விறுவிறுவென அந்த யானை காடுகளுள் மரங்களைப் புறந்தள்ளிவிட்டு நடந்தது. கீழே விழும் மரக்கொப்புகளின் ஒலிகளுள் நகர்கிறது துண்டாய் விழும் வெளிச்சம். யானையின் பிளிறல்கள் எதிரொலிக்கும் திசைகளை என்றும் கண்டது இல்லை நகரங்கள். சரசரவென நகர்ந்தபடி யானை கம்பீரமாகக் காட்டை புறந்தள்ளி முன்னேறுகிறது. இவளுக்குள் யானையின் ஒலி கேட்க, இவள் திடுமென எழுந்து உட்கார்ந்து இருந்தாள். வெயில் மெள்ள யானையின் துதிக்கையாக ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்தபடி இருந்தது. செந்தில் வந்திருப்பான். அறைக்கு வெளியே ஒரு பிரளயமே உருவாகி இருக்கும்.


‘செல்’லாத காதல்

 

 செல்போன் கடையைத் திறந்து தூசி தட்டி ஒழுங்கு செய்தான் குமார். பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்துத் தலை சீவி, கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டான். இன்று மஞ்சு கட்டாயம் வருவாள். முழுப் பெயர் மஞ்சுளாதேவி. நேற்று மாலை கடைக்கு வந்தாள். தினமும் நேரம் தவறாமல் அந்த வழியாகத்தான் ரொம்ப நாளாகப் போய்க்கொண்டு இருக்கிறாள். காதோடு ஒட்டியபடி இருக்கும் செல்போனில் கிசுகிசுத்தவாறே கடந்துவிடுவாள். நேற்று வந்தவள், ”பேசிக்கொண்டு இருக்கும்போதே லைன் கட்டாகிவிடுகிறது” என்று கையில் இருந்த செல்போனைக் காண்பித்தாள். அவன்


பேச்சியம்மை

 

 மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள் மயக்கம். வீடுகள், கோயில்கள், மண்டபங்கள் யாவும் கழுவிவிட்டது போல் ஈரத் துலக்கம். மழைத் தண்ணீர் புழுதி அரித்து ஓடி, தெரு மணல் மினுங்கக்கிடந்தது. தெருவில் பள்ளம் நோக்கி ஓடும் தண்ணீர் இரண்டு கை அள்ளிக் குடிக்கலாம் போலத் தெளிந்து ஓடியது. பெருமழையின் காரணமாக இரண்டு நாட்கள் உள்ளூர்ப் பள்ளி விடுமுறை. பகலில் வழக்கமாக காய்கறி, கீரை,


அவள் பெயர் தமிழச்சி

 

 ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவளுக்கு என்றைக்குமே அலுப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால், இன்றைக்கு அந்தக் காட்சியை அவளுடைய கண்கள் பார்த்துக்கொண்டு இருந்தாலும், மனத் திரையில் ஒட்டாமல் வழுக்கிவழுக்கி விழுந்துகொண்டு இருந்தது. உடம்புக்குள் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக வெந்நீர் ஓடுவது