கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 3, 2012

7 கதைகள் கிடைத்துள்ளன.

முடியாத கதை!

 

 ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய 700 பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக்கொண்டு நின்றான். அவனே எரிந்துகொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. இந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதோ, அங்கே எரியும் ஒவ்வோர் எழுத்தும் அவன் உதிரத்தில் பிறந்தது. அவனுக்கே சொந்தமானது. அவனுக்கே மட்டும் புரியக்கூடிய புனிதமான அந்தரங்கம். இலக்கிய உலகம் அவன் எழுத்தைப் புரிந்துகொள்ள


சாக்கடை நீரில் கார வீட்டு நிழல்

 

 சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி அவர் செய்த காரியம்! எங்க ஊரிலேயே பெரிய வீடு சரவணன் மாமாவுடையது. காரவீட்டு சரவணன்னுதான் எல்லாரும் அவரைச் சொல்வாங்க. அவரோட சின்ன வயசுலயே அவங்கப்பா தவறிப் போயிட்டாரு. ஆனாலும், கம்பீரமா நிமிர்ந்து நின்ன மோட்டு ஓடு போட்ட வீட்டில் இருந்துக்கிட்டு கஞ்சியும் களியுமா ஊத்தி, காரவீட்டு ஆச்சி சரவணன் மாமாவை வளர்த்துச்சு. நான் ஆறாங் கிளாஸ்


சூது நகரம்

 

 நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ, பஸ்ஸில் ஏறியோ, தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந் தான். யாரையேனும் தன் மீது கவனம் செலுத்த வைப்பதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப் பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக் குள் மிக மெதுவாக நுழைந்தான்… வேலை பார்த்த எந்த இடத்திலும் அவனை யாரும் மரியாதையாக நடத்தியது இல்லை.


எங்கிருந்தோ வந்தாள்

 

 “ஹலோ… ஏ 9840071…. ஹேனா?” என்கிற பெண்ணின் கரகர குரல், சற்றே பதற்றத்தோடு, ஹிந்தியில் பேசியது. யாராக இருக்கும் என்று கேட்க ஆவலாக இருந்தாலும், ஆபீஸ் மீட்டிங்கில் இருந்ததால், பதில் எதுவும் பேசாமல் போனை கட் செய்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று கால்கள் அதே நம்பரில் இருந்து. மீட்டிங் முடிந்து, அன்றைய மண்டகப்படியை வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும், மிஸ்டு கால் நம்பருக்கு டயல் செய்தேன். ”ஹலோ…” “யாரு சார்..?” “சார்… இந்த நம்பர்லேர்ந்து மிஸ்டு


‘செல்’லாதவன்

 

 நடிகர் மாதவனை எனக்குப் பிடிக்காது. அந்த அலட்சிய வார்த்தைகளும் முகபாவமும்! இத்தனைக்கும் என் தோழிகளை ‘அலைபாயுதே’ மாதவன் மடக்கிவிட்டதைப் புரிந்துகொண்டு ‘நானும் மேடி மாதிரி இருக்கேனா?” என்று மீசையை எடுத்திருக்கிறேன். ‘அன்பே சிவம்’ கமலின் கன்னத்தில் அறைந்த மாதவனைக் கோபித்துக்கொண்ட என் நண்பன் தாஸிடம் ”மாதவன் என்னப்பா செய்வாரு, அவர் கேரக்டர் அப்படி…” என்று மாதவனுக்காகப் பரிந்து பேசியிருக்கிறேன். இப்போதுதான் நிலைமை மாறிவிட்டது. மாதவன் மட்டும் என்றாவது ஜெராக்ஸ் எடுக்கவோ, ஸ்பைரல் பைண்டிங் செய்யவோ, லேமினேஷன் பண்ணவோ


காத்திருந்து… காத்திருந்து…

 

 ‘ஹா’ என்று இதயம் அதிர்ந்தது – கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து. ”மீனா!” என்றபடி அருகில் வந்தவனை வியப்புடன் பார்த்தாள் அவள். ”நான் மீனா இல்ல அங்கிள். என் பேரு ராதா. மீனா என் அம்மா. அவியளை ஒங்களுக்குத் தெரியுமா?” உறைந்து நின்றான் மோகன். அச்சு அசலாக அப்படியே… மீனாவின் மகளா! அப்படியானால்..? ”மீனாவா… பரமக்குடி மீனாவா? அப்ப, உன் அப்பா..?” – தழுதழுத்த குரலில் கேட்டான். ”என்


முதல் மனைவி

 

 கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக்