கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

244 கதைகள் கிடைத்துள்ளன.

மதகதப்பு

 

 அருஞ்சுனைக்குள் ஒரு சூன்ய உணர்வு. யாரையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிற ஏக்க வேதனை. ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிறார், தெருக்கோடியின் கிழக்கு நுனியை. ராவுத்தர் வருவதாக இருந்தால், இந்தப் பாதையில்தான் வருவார். கிழக்கு முக்கு திரும்புகிறபோதே அவரது சைக்கிள் அடையாளம் தெரிந்துவிடும். கோடிக்கணக்கான சைக்கிள் மணிகளிலும் ராவுத்தர் சைக்கிள் மணியின் ஒலியைத் துல்லியமாக அடையாளம் கண்டுபிடித்துவிடுவார், அருஞ்சுனை. சைக்கிள் மணியின் விசையை அவர் கட்டைவிரல் அழுத்துகிற விதம், ‘மணிக்கு வலிக்குமோ’ என்ற பதைப்பில் பூப்போல அழுத்துகிறவிதம். அந்த வித்தியாசமான


கறுப்பனின் காதலி!

 

 ”இந்தக் கிராம வாழ்க்கையே எனக்கு அலுத்துப் போச்சு. பக்கத் திலே ஏதாவது டவுனுக்குப் போய் வாழணும் போல இருக்கு” என்று தனது நீண்ட நாளைய ஆவலைத் தன் காதலன் கறுப்பனிடம் தெரி வித்தது பழுப்பி. ”நாம ரெண்டு பேரும் செங்கல் பட்டு ஜங்ஷனுக்குப் போய் அங்கேயே தங்கிடலாமே!” என்றது கறுப்பன். ”செங்கல்பட்டு ஜங்ஷனா? எனக்குக்கூட ரயில் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு. அங்கே பெரிய பெரிய ரயில் எல்லாம் வருமா?” ”ஆமாம். திருவனந்தபுரம் எக்ஸ் பிரஸ், போட் மெயில்,


அவளை நீங்களும் அறிவீர்கள்!

 

 நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத்தில் இருந்து புலி உறுமுவது போன்று தற்காலிகமாகக் காணாம்புற்களில் வேய்ந்த குடிசையில் இருந்து குறட்டை ஒலி. தூக்கம் காணாத முத்து அருளானந்தப்பிள்ளை, தனக்கு அருகில் புளித்த கள்ளின் போதையில்கிடக்கும் ஸ்மித்தைப் பார்த்தார். வெள்ளைக்காரனை அதட்ட முடியாத இயலாமையைத் தனக்குள் கடிந்துகொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்தார். ராமநாத சமஸ்தானத்துக் காவலர்கள் குடிசையின் முன் கணந்து


ஒ மைனா ….ஒ மைனா!

 

 இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு. அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள். பல சமயம் அவள் சொல்ல நினைப்பது பலருக்குப் புரியாது. சில சமயம் அவள் என்னதான் நினைக்கிறாள் என்று அவள் நைனாவிற்கே கூடத் தெரியாது. அவளது மூளை அசாதாரணமாகச் சிந்திக்கும். சிறுமி ‘சிந்தனைச் செல்வி’ மைனாவிற்கு தன் தந்தை தன்னைப் பார்த்து பெருமை பட வேண்டும், என் அன்பு மகள் போல உண்டா!!! என ஆனந்தப் பட வைக்க வேண்டும் என்ற தணியாத


ஓடி வந்தவர்கள்…

 

 சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது… “எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?”. சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே ‘நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை’ என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத்

Sirukathaigal

FREE
VIEW