கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 10, 2012

19 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் ஒரு தொடர்கதை!

 

 நந்தினி பால்கனி கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெருக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும். ஜன்னல் கர்ட்டன்களைக்கூட விலக்கி வைக்கவில்லை. எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம் வரை மழை பெய்துகொண்டு இருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலை மேல் பூக்கள் சிதறிக்கிடந்தன.


என் ராஜா

 

 ‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள். சதா அடுப்படியில் வேலை செய்து ஒடுங்கிய அவளின் உருவமும், விதவைக் கோலமும் ராஜாவின் மனத்தை வருத்தின. ”நாளைக்கு எங்க ஸ்கூல்ல கண்காட்சிக்கு அழைத்துக்கொண்டு போறாங்கம்மா! நானும் போகட்டுமா?” ”நமக்கு எதுக்குடா அதெல்லாம்..?” ”காசு கூட வேண்டாம்மா. நடந்துதாம்மா போகப்போறோம்.” ”சரி, சரி… நாளைக்குதானே?” அம்மா அடுப்பைக் கவனிக்க ஆரம்பித்தாள். கண்காட்சியில் ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்வதாக


அமைச்சரின் அழைப்பு!

 

 செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12. அழைத்தது சீனியர் அமைச்சரின் பி.ஏ. என்று உணர்ந்ததும் பவ்யமானார். ”யெஸ் சார்!” ”மினிஸ்டர் உங்களை உடனே கெஸ்ட்ஹவுஸூக்கு வரச் சொல்றார்!” ”இதோ!” டி.ஐ.ஜி-யின் உடம்புக்குள் சின்ன பதற் றம்.’இத்தனை அவசரமாக எதற்கு அர்த்த ராத்திரி அழைப்பு?’ யூனிஃபார்ம் தவிர்த்து பரபரப்பாகப் புறப்பட்டார். அவர் அறையில் விளக்கெரிந்ததுமே செக்யூரிட்டிகள் அவர் அவசரம் உணர்ந்து விறைப்பானார்கள். ”ஏங்க டீ


வாத்தியார்

 

 ”அம்மாடியோ!” என்று அலறினான் அவன். சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ”இன்னாடா சவுண்டு விடுறே?” என்றபடி அவன் வயிற்றில் ஓங்கி உதைத்தான் ஓர் ஆள். சின்னக் கடைத் தெருவும் ஆணிக்காரன் தெருவும் இணையும் இடத்தில் ஒரு திடல். பக்கத்திலேயே வேலுமணி வாத்தியார் வீடு. வீட்டு எதிரில் ஒரு பெரிய கீற்றுக் கொட்டகை. அதன் முகப்பில் ‘வேலு சிலம்பக் கூடம்’ என்ற பெயர்ப் பலகை, பெயின்ட் மங்கிய எழுத்துக்களுடன் தொங்கியது. கர்லாக்கட்டை, டம்பிள்ஸ், வெயிட் லிஃப்டிங், கராத்தேயுடன்


தூசி

 

 ”என்னம்மா, குழந்தை! ஏன் அப்படிப் பார்க்கிறே?” செம்பட்டை மாறாத தலையில் எண்ணெய் தடவிய கோலம். ஆறு வயதுதான் மதிக்கலாம். கவுனில் ஈர மண் படிந்த அழுக்கு. கருவிழிகள் குறுகுறுக்க, செப்புவாய் வியப்பிலே சற்றே அகன்றிருக்க, குழந்தை அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே பார்த்துக்கொண்டு இருந்தாள். ”என்னம்மா? இங்கே யாரேனும் உன்னைப் போல் விளையாட இருக்கிறார்களா என்று பார்க்கிறாயா? ஒருவரும் இல்லையே?” ”நீங்க மட்டும்தான் இருக்கிறேளா, மாமி?” ”எங்க வீட்டு மாமா ஆபீஸ் போய் விட்டார். சாயங்காலம் வருவார்…”

Sirukathaigal

FREE
VIEW