கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 4, 2012

4 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த நாள்!

 

 ஒரு கோர விநாடியில் அது நிகழ்ந்துவிட்டது. ஷாட் ஓ.கே. ஆன திருப்தியில் கிரேன் மீது இருந்த நான் கேமராவிலிருந்து கண்களைச் சற்று நிதானமாக எடுக்க… ஃபைட் மாஸ்டரின் கால்குலேஷனை மீறி, டிரைவரின் ஒரு விநாடி நேரப் பிழையால் கார் 80 கி.மீ. வேகத்தில் கிரேன் மீது மோதியது. கிரேன் தடுமாற, 40 அடி உயரத்திலிருந்து நான் கீழே விழுந்தேன். ஃபைட் மாஸ்டர், இயக்குநர், ஹீரோ, யூனிட் ஆட்களின் கதறல் சத்தம்தான் எனது நினைவுகளின் கடைசி விநாடிகளில் மூளைக்குள்


கல்யாணமாம் கல்யாணம்!

 

 தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர் மட்டுமே படம் பார்க்க வந்திருக்கிறார்கள். அந்த ஏழில் ஐந்து, மனைவி பக்கம். புது மனைவி. இசையமைப்பாளர் கணவனின் முதல் படத்தைப் பார்க்க வந்திருக்கிறாள். என் பக்கம் திரும்பியவள், ”என்னங்க… கூட்டம் இவ்வளவுதானா?” என்றாள். ”ச்சீச்சீ… படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா வருவாங்க.” வர மாட்டார்கள். மேட்னி ஷோ எட்டு


பப்பி

 

 அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை. ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும் என்பது அக்காவின் எண்ணம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. அக்காவிடம் சொல்ல முடியாது. கடுப்படிப்பாள். ‘என் குழந்தை மேல எனக்கு இல்லாத அக்கறையா?’ என்பாள். அந்த ஜுரத்திலும் அக்ஷிதா வாசல் நோக்கி அடிக்கடி பார்வையைச் செலுத்தியதும் கண்களில் ஏமாற்றம் தெரிந்ததும் எனக்கு ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவள் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போல் தெரிய… உன்னிப்பாகக்


கிழித்த கோடு

 

 வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை. நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு வந்த காபியை ஸ்டூலின் மேல் வைத்து விட்டு, அவருடைய மகள் மீனாட்சி நிமிர்கிறாள். ”ராவுத்தர் வரட்டும்” – பார்வையை மாற்றா மலேயே ஆறுமுகத் தேவர் கூறுகிறார். அந்த வார்த்தைகளின் அர்த்தம் மீனாட்சிக்கு தெரியும். அவள் கொஞ்சம் படித்தவள்; நாகரிகமும் நாசூக்கும் தெரிந்தவள். அதோடு அவள் ஆண்டிபட்டியில் வாழ்க்கைப்படுவதற்கு முன்பும், வாழ்க்கைப்பட்ட பிறகு – இங்கு வந்து

Sirukathaigal

FREE
VIEW