கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

420 கதைகள் கிடைத்துள்ளன.

முதலிரவு

 

 இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம். சுருக்கமாக சொல்லியே ஏகப்பட்டக் கூட்டமாகிவிட்டது. நெருங்கிய சொந்தத்தில் என்று சொன்னால்கூட, ஒருத்தருக்குச் சொல்லி இன்னொருத்தருக்குச் சொல்லவில்லையென்றால் மனச்சடவுதான் வரும் ஊருக்குள்ளே. கல்யாணத்திற்கு வந்தவர், விஜயாவின் மாமாவை பார்த்து கேட்டார், “ ஏம்பா, வீரபாகு, பையன் கல்யணத்தை சுருக்கமா எடுக்கேனு சொல்லிப்புட்டு, தடபுடலா நடத்துறியே. நல்லதுதான் …………நடக்கடும்…..நல்லபடியா” இதற்கு மாமா பதில் எதும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே, “வணக்கம்


மயக்கமென்ன

 

 எதிர்க்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை அப்படியே நிறுத்திவிட்டு வேஸ்ட் காட்டனில் க்ரீஸ் கரங்களைத் துடைத்துக்கொண்டான் கணேசன். முதலாளியிடம் விபரம் சொல்லிவிட்டு உடனே கிளம்பியாகவேண்டும். போனவாரம்தான் கொஞ்சம் முன்பணம் வாங்கி இருந்தான். திரும்பவும் கேட்டால் கண்டபடி திட்டுவார். வேறு வழியில்லை. ஒருவழியாக தயங்கி, தயங்கி விபரத்தை சொன்னதும் அவரே உள்பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டு 500 ரூபாய் தாள்களைத் தந்தார். யூனிபார்மை மாத்திட்டுப் போடா


மழை

 

 மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், மழை பெய்து முடித்த பின் மரங்கள் கொண்டாடும் பசுமையும் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா என்ன?. வீட்டின் ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அம்மா போட்டுத் தரும் காப்பியைக் குடித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்ப்பது


நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை

 

 அது ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயும் காலப்பொழுது. பள்ளி காலங்களில் இருந்தே ஞாயிற்றுக் கிழமை மாலைப் பொழுதுகள் பிடிப்பதே இல்லை. படிக்கும் காலத்திலாவது முடிக்க வேண்டிய வீட்டுப் பாடங்கள் எரிச்சலூட்டின. ஆனால் அது வேலைக்குப் போகும் இன்றைய நாட்களிலும் தொடர்வது ஆச்சர்யமே. அதிலும் நொய்டா போன்ற வட இந்திய நகரத்தில், டிசம்பர் மாத மாலை ஒருவித இனம்புரியா பயத்தையே என்னுள் நிரப்பிச் செல்கின்றது. அன்றும் அப்படித்தான் மாலை 5 மணி ஆகியிருக்கும். ஆனால் வெளியில் ஆறரை மணி


உதயசூரியன்

 

 மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும் போது. ” ஹே… சொல்லுமா.. ” ” ……………… ” ” இல்ல இல்லடா.. கொஞ்சம் ஒரு சின்ன வேலையா இருந்தேன். அதான்.. அத கையோடு முடிச்சுட்டு உனக்குக் கால் பண்ணலாம்னு இருந்தேன்” ” ……………… ” ” அதுவும் முக்கியம் தான் மா.. இப்போ என்ன செய்யணும் நான் ?” ” ………………. ”