கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

420 கதைகள் கிடைத்துள்ளன.

நகர்வலம்!

 

 அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில்(வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்… எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின்


மறு

 

 கல்லூரி நாள்களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்குத் தினசரி காலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு நடந்து போய்,ஒன்பது மணி ‘ஆபீஸர்ஸ் ரெயிலை‘ப் பிடித்து டவுன் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் சாலை வழியாக மண்டபங்களை எல்லாம் தாண்டிப்போய், பத்து மணிக்குள் போய்ச் சேருவதற்குள் தினசரி அவசரந்தான். இருந்தாலும் உற்சாகமாகவே இருந்தது. மஞ்சளாக சீஸன் பாஸ் எடுத்துத் திருப்புகழ் பஜனையும் சீட்டாட்டமுமாக, அந்த வண்டியில் சன்னலோரமாக, காலரில் கைக்குட்டையைச் செருகிக்கொண்டு காவேரி வரும்போது எட்டிப் பார்ப்பதெல்லாம்


சேச்சா

 

 ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும் பாஸ்போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன். 2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு கொடுத்தால் ஒப்புக்கொள்ள மாட்டான். என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் மூன்று முறை குறுக்கிட்டன. ஸ்ரீரங்கத்தில் ஒன்றாகப் படித்தோம். நான் சௌரிராஜ ஐயங்கார் செக்ஷன். அவன் கே.என்.ஆர். செக்ஷன். அப்போதே அவனிடம் ஏழ்மையின் அடையாளங்கள் தெரிந்தன. ஒரே


நான் விரும்பிய மிகச் சிறிய கதை

 

 பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது. நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம். அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான்.


அரிசி

 

 உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக்காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்டவசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.’தேமேனு‘ சென்று கொண்டிருந்த–என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து ‘ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு‘ என்று சொன்னார். என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள்