கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

420 கதைகள் கிடைத்துள்ளன.

சாவித்திரி

 

 பௌர்ணமி கழிந்த இரண்டாம் நாள், ஆற்றங்கரையில் அரூபமாய் காய்ந்து கொண்டிருந்தது நிலா,பிசிறு பிசிறாய் மேகங்கள் நிலவின் முன்னும் பின்னும் ஒழிய இடம் தேடி கிடைக்காமல் வேக வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தன .மழை வருவதற்கான அறிகுறி மண் வாசம் பூமியைப் பிளந்து எழுந்து திண்ணைகளில் மடக்கு கட்டில்களில் தூங்கிய கிழடு கட்டைகளின் மூக்கில் குளிர் நிரப்பிப் பாய்ந்தது மார்கழிக் கூதல் மந்தைப் புளியமரத்தை உருவிக் கொண்டு மெல்லிய புகையாய் கசிந்து கசிந்து ஆற்றை ஒட்டியே இருந்த ஷண்முகக் கோனார்


ரயிலோடு போன கதைகள்

 

 ரயிலுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பெரிய சிநேகிதமில்லை;கல்யாணத்திற்குப் பிறகு தான் இரண்டே இரண்டு முறை ரயில் பயணம் செய்ய நேர்ந்தது ,ரயிலோடு சிநேகிதமில்லாவிட்டாலும் ரயிலைப் பற்றிச் சொல்ல சில கதைகள் எனக்கும் இருக்கக் கூடுமில்லையா?! முதன்முதலாக ரயிலை எப்போது தெரியும் எனக்கு? மூன்றாம் வகுப்போ நான்காம் வகுப்போ படிக்கையில் ஊர்ப் பொங்கலுக்கு இரவில் ஊர் மடத்தில் திரை கட்டிப் படம் போட்டார்கள்,தங்க மலை ரகசியம்,கர்ணன்,அப்புறம் கிழக்கே போகும் ரயில்.நல்ல வேளை கிழக்கே போகும் ரயில் அப்போதைக்கு புது படம்


அஃறிணை

 

 விசும்பலாகவும் இல்லை அரற்றலாகவும் இல்லை தீனஸ்வரத்தில் லயம் தப்பாத தொடர் அழுகை இடையிடையே யாரோ குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார் போல் திணறித் திணறி வேகம் குறைவதைப் போல தோன்றச் செய்து மறுபடி நிதானித்து வேகமெடுக்கும் சன்னமான அழுகை . யார் அழுகிறார்கள் இந்த நேரத்தில் ?! அபர்ணாவுக்கு கொஞ்ச நாட்களாகவே ராத்திரிகளில் மட்டும் இந்த அழுகைச் சத்தம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது. படுக்க ஆயத்தம் செய்யும் போதெல்லாம் வழக்கப் படி கேட்கும் ஓசைகள் தவிர வேறெதுவும் காதில்


ஒரு காதலும் மூன்று கல்யாணங்களும்

 

 போலீஸ் வேலைக்குச் சேர விண்ணப்பித்திருந்தான் மகேந்திரன். எல்லாம் சத்யவதிக்காகத் தான். மகேந்திரனுக்கு ஊரில் புஞ்சைக் காடு உண்டு, மக்காச்சோளமோ, பருத்தியோ விதைப்பார்கள். அவன் டிகிரி படித்திருந்தாலும் கூட ஊருக்குள் தீப்பெட்டி ஆபிஸ் போர்மேனாக இருந்து கொண்டு விவசாயம் பார்த்து பொழுதை ஓட்டுவதில் தான் தன்னிறைவாக உணர்ந்தான். அவனுக்குச் சொந்தமாக தீப்பெட்டி ஆபிஸ் எதுவும் இல்லை, சத்தியின் அப்பா வேலப்ப நாயக்கருக்கு ஊருக்குள் ஒரு தீப்பெட்டி ஆபிசும், ஒன்பது குழி புஞ்சைக்காடும், ரெண்டு குழி நஞ்சைக் காடும் இருந்தது.


ஊஞ்சல் விதி

 

 அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் மைனா அமர்ந்திருப்பதைக் கண்டனர். மாலைநேரத்தில் வீடு திரும்பும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பனைமரத்திற்குப் பின்னாலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வெயில் குறைந்த மாலைநேரத்திலும் ஆட்களின் நடமாட்டம் இருந்தது. மேடான பாதையிலிருந்து பால்காரன் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு வருவதையும், அவனைத் தொடர்ந்து இரண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் பச்சைநிற சைக்கிள்களை ஒன்றன்பின்பாக உருட்டிக்கொண்டு வருவதையும் அவர்கள் பார்த்தார்கள். செம்மணல் ஒற்றையடிப்பாதையில் அவர்கள் இருவரும் சைக்கிள்களுக்கு வழிவிட்டு நின்று கொண்டனர். பார்க்கும் இடம் முழுவதும்