கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

418 கதைகள் கிடைத்துள்ளன.

கூடு

 

 ‘‘நீங்க செய்யச் சொல்றது ரொம்பப் பெரிய பாவம்கிறது உங்களுக்குத் தெரியாதா?’’ கண்களை அரை நிமிடம் மூடி, தன் இடக்காது மடலை விரல்களால் மெல்ல இழுத்துவிட்டபடி, எதிரே அமர்ந்திருந்த மருதநாயகத்தையே உற்றுப் பார்த்தபடி கேட்டார் சங்குண்ணி மாந்திரீகர். சங்குண்ணிக்கு வயது சுமார் ஐம்பது இருக்கலாம். ஒல்லியான தேகம். கூர்மையான நாசி. வேட்டி உடுத்தி, வெற்று மார்பில் ஏராளமாகச் சந்தனம் பூசியிருந்தார். நெற்றியில் பெரிய கருநிறப் பொட்டு. மலையாள நெடி கலந்த தமிழில் பேசினார். மருதநாயகம் கோயமுத்தூரில் பெரும் தொழிலதிபர்.


ஒரு குழந்தை டீச்சர் ஆகிறது!

 

 ‘‘சார், உங்களுக்கு போன்!’’ எழுந்து போய் ரிசீவரை எடுத்து, ‘ஹலோ’ என்றேன். ‘‘அப்பா… நான் காயத்ரி பேசறேன்…’’ ‘‘சொல்லுடா கண்ணா..!’’ ‘‘இன்னிக்கு ஸ்கூல் ஆண்டு விழாவுல, என்னோட டான்ஸ் புரொகிராம் இருக்குன்னு சொன்னேனே… கிளம்பி வர்றீங்களாப்பா?’’ அடடா… பிஸியான வேலையில அது மறந்தேபோச்சு! ‘‘எத்தனையாவது ‘அயிட்டம்’ உன்னோடது?’’ ‘‘அஞ்சாவது!’’ ‘‘சரிம்மா! பர்மிஷன் சொல்லிட்டு வந்துடறேன்!’’ ரிசீவரை வைத்துவிட்டு வந்து, என் டேபிளை ஒழுங்குபடுத்திவிட்டு, பேனாவை மூடி பையில் வைத்துக்கொண்டே, மேனேஜரிடம் போய் விஷயத்தைச் சொல்லி பர்மிஷன் கேட்டு


தீராக் காதல்

 

 கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன். ஏரியைக் கடந்து, அப்சர்வேட்டரி ரோடுக்குச் செல்லும் மேட்டில் ஏறினேன். மரங்கள், சாலையை நோக்கி வளைந்து ஒரு குடை போல மூடி இருந்தன. ஈரத் தரையெங்கும் மஞ்சள் பூக்கள். மெலிதான சாரலில் நனைந்தபடி, உற்சாகமாக


என் கணவரின் கனவுக் கன்னி!

 

 ‘‘உட்கார்ந்து, உட்கார்ந்து காலெல்லாம் வலிக்குது. கடை வீதி வரைக்கும் ஒரு நடை போயிட்டு வந்துடறேன், பானு!’’ என் கணவர் இப்படிச் சொன்னதும், கேலிச் சிரிப்புடன் மறுப்பாகத் தலை அசைத்தேன். ‘‘உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? சிகரெட் பிடிக்க ஏதுடா வழின்னு பார்க்கறீங்க. அதெல் லாம் எங்கேயும் நகரக் கூடாது!’’ இவரின் மாமா பேத்தி திருமணத்துக் காக வந்திருக்கிறோம். இன்று மாப்பிள்ளை அழைப்பு. சத்திரத்தில் சுமாரான கூட்டம். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர். அதுவே கிட்டத்தட்ட எண்பது பேர்


ஹலோ மிஸ்டர், உங்களைத்தான்..!

 

 ஹலோ மிஸ்டர் ஹானரபிள்… உங்களைத்தான்… நில்லுங்கள். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் உலகத்தைப் பார்த்து இப்போதெல்லாம் அடிக்கடி என்ன சொல்வீர்கள்? ‘எல்லாம் போச்சு! காலம் கெட்டுப்போச்சு. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம்போச்சு!’ என்பீர்கள். (கடைசி இரண்டு வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாது.) பாண்டி பஜார் பக்கம் மாலை வேளையில் போவீர்கள். நடைபாதையில் விதவிதமான இளசுகளைப் பார்ப்பீர்கள். ஒவ்வொன்றின் டிரஸ்ஸ§ம் உங்கள் நெஞ்சில் திக்திக் கொடுக்கும். எதிரே வரும் நான்கு இளசுகளைக் கண்டு வலப் பக்கம்


ஒரு நாள்… மறு நாள்!

 

 என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸ§டன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்… திடீரென்று டயர் தேயும் ‘கிரீச்’ சத்தம். வேகமாக வந்து


வெறி

 

 ‘‘டாக்டர், நான் ரகு பேசறேன்… நீங்க இப்பவே என் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்ப அவசரம், ப்ளீஸ்!’’ ‘‘என்ன ரகு… ஏதாவது எமர்ஜென்சியா? உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?’’ ‘‘எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர்! ஆனா, நான் சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே, அந்த செக்ஸ் வெறி பிடிச்சவ, இப்போ என் கண் முன்னால் எவன்கூடவோ சல்லாபம் பண்ணிட்டு இருக்கா. இப்படி ஒரு கொடுமை என் எதிரிக்குக்கூட ஏற்படக் கூடாது டாக்டர். நான் போன மாசமே உங்ககிட்ட சொன்னேன்…


குவா… குவா!

 

 பூந்தமல்லி வரதர் கோயில் தாயார் சந்நிதி பின்னால், ‘பிள்ளையார் பந்து’ ஆட்டத்தின் சுண்டல் இடைவேளையின்போது தான் ரங்கன் அந்த எக்குத்தப்பான கேள்வியைக் கேட்டான்… ‘‘டேய் சீனு, கொழந்தைங்க எப்பிடிடா பொறக்குது?’’ எல்லாம் தெரிந்தவன்போல், சீனு சட்டென்று பதில் சொன்னான்… ‘‘இது தெரியாதா? ஆகாசத்திலேர்ந்து தொப்புனு விழும்டா!’’ ‘‘ஆ…ஆ… கதை… கதை உட்றே! ஆகாசத்திலேர்ந்து மழைதாண்டா விழும்!’’ வாசலில், பெருமாள் புறப்பாட்டை அறிவிக்க அதிர்வேட்டு போடத் தொடங்கிவிட்டார்கள். ‘சர்ர்ர்ர்ர்ர்ர்… ட-மா-ல்!’ ‘‘ரங்கா, சரியாத் தெரியலேடா! ஆனா ஒண்ணு… எல்லாக்


ஐம்பது பைசா

 

 ஒரு கையில் சூட்கேசும், மறு கையில் கிஃப்ட் பார்சலுமாக, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனது தோழிக்கு நாளை ராசிபுரத்தில் திருமணம். அதற்காகத்தான் போய்க்கொண்டு இருக்கிறேன். புதிய பேருந்து நிலையம் செல்லும் டவுன் பஸ் வர, அதில் ஏறிக் கொண்டேன். கூடவே ஏறிய இளைஞன் தெரிந்த முகம்தான். சற்று முன், ஒரு கடையில் நான் தலைவலி மாத்திரை வாங்க, மீதி ஐம்பது பைசா சில்லரை இல்லை என்று ஒரு சாக்லெட்டை என் கையில் திணித்தார் கடைக்காரர்.


நம்பிக்கை

 

 “கடவுளும் இல்லை, ஒண்ணும் இல்லை! எல்லாம் சுத்தப் பொய். நீ என்னடான்னா, நெத்தியில பட்டை பட்டையா விபூதி பூசிக்கிட்டு வந்த தோடில்லாம, கடவுளைப் பத்தி என் கிட்டயே புகழாரம் வேற பாடிக்கிட்டு இருக்கே! போடா போ, நீங்களும் உங்க மூட நம்பிக்கையும்!” – அக்கௌன்டன்ட் ராமசாமியைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னான் கிளார்க் கோவிந்தன். “காலங்கார்த்தால இப்படி வாய்க்கு வந்தபடி பேசாதடா! ஹ¨ம்… உன்னை யெல்லாம் அந்தஆண்டவன்தான் மன்னிக்கணும்..!” – தலையில் அடித்துக்கொண்டு சொன்னான் ராமசாமி. “ஏண்டா, நான்