கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

418 கதைகள் கிடைத்துள்ளன.

வாக்குமூலம்

 

 அன்புள்ள மகனுக்கு, பொலபொலவென வடித்த சாதத்தின் நிர்மலத்துடன் புலர்ந்திருக்கும் காலைப் பொழுதின் நிரம்பிய சந்தோஷங்கள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. பால் கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன. இந்த நிமிஷம் நீ ஸ்கூலுக்குக் கிளம்பிக்கொண்டு இருப்பாய். நீ முதல் நாள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றது ஞாபகமிருக்கிறதா? அது வரைக்கும் ஸ்கூல் பேக், பென்சில் டப்பா, தண்ணீர் பாட்டில் என்று சந்தோஷமாய் வாங்கிக்கொண்ட உனக்கு, ஸ்கூல்


துர்கா

 

  மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆர் யூ ஆல்ரைட் திவாகர்?” என்று தாராப்பூர்வாலா கேட்டார். “ஐ டோண்ட் ஃபீல் வெல்!” மற்ற ரொட்டீன் மேட்டர்களை அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தன் மேசைக்கு வந்தார். ஒரு காகிதத்தை எடுத்து எழுதினார். எது சரி? 1. கொடுத்துக்கொண்டே இருப்பது. 2. கொல்வது. 3. சொல்வது. – என்று எழுதி, கொல்வதை அடித்துவிட்டு யோசித்தார். பிறகு, கொடுத்துக்கொண்டே


பட்டர் பிஸ்கட்

 

 பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள். துருப்பிடித்த மூடிகள் கொண்ட கண்ணாடி ஜாடிகளில் இருக்கும் பட்டர் பிஸ்கட், கடலை உருண்டை, கலர் மிட்டாய்கள், சூயிங்கம், முறுக்கு போன்ற அயிட்டங்களுக்கு மாணவர்களிடையே ஏகப்பட்ட கிராக்கி. குறிப்பாக பட்டர் பிஸ்கட்டுகளுக்கு பயங்கர டிமாண்டு! பள்ளி இடைவேளையில், பிள்ளை கள் கூட்டமாகத் தன் கடையை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தாலே, தாத்தாவுக்கு படு குஷியாகிவிடும். தாத்தாவைத் தங்களுக்குச்


என்னவளே… அடி என்னவளே!

 

 மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து, என் மனதில் இனம் புரியாத குற்ற உணர்வை உண்டாக்கியது. தலையைக் கையில் பிடித்தபடி எழுந்த போது, நேற்று இரவு நடந்ததெல்லாம் ஃப்ளாஷ் பேக்காக ஓடியது. நேற்று காலை ஆபீசுக்குக் கிளம்பியபோது, இனிமேல் குடிக்கமாட்டேன் என்று வழக்கம்போல் என் மனைவி மாலதியிடம் சத்தியம் செய்துவிட்டுத் தான் கிளம்பினேன். நான் குடியை விடுவதைக் கடவுளே விரும்பவில்லை போல! நேற்றுப்


அது மட்டும்..?

 

 பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார் இருபது மாணவ, மாணவிகள் பெயர் தந்திருந்தனர். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக ஆங்கில ஆசிரியர் மைக்கேல், தமிழ் ஆசிரியர் பரசு இருவரையும் நியமித்திருந்தார் தலைமை ஆசிரியர். மாணவர் ஒவ்வொருவராக மேடை ஏறிப் பேசப் பேச, இருவரும் தங்கள் கையிலிருந்த பேப்பரில் மார்க் போட்டுக்கொண்டு இருந்தார்கள். சில மாணவர்கள் பொளந்து கட்டினார்கள். சிலர் கொஞ்சம் தடுமாறினார்கள். குரல் வளம்,


ஒரு ஊசி… ஒரு ஆயின்மென்ட்!

 

 டாக்டர் கஜேந்திரன் & டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார். சண்முகத்துக்குத் தலையில் லேசான சிராய்ப்புதான். காலையில் பாத்ரூமில் விழுந்தவர், தலையில் அடி என்றதும் பதறிப் போய் வந்திருக்கிறார். கொஞ்சம் மருந்து தடவி, ஒரு இன்ஜெக்ஷன் போட்டால் சரியாகிவிடும். ஆனால், ஸ்கேன் எடுக்கச் சொன்னால் எடுத்துக் கொள்வார். பசையுள்ள ஆசாமிதான். ஸ்கேன் செய்யும் லேபுக்கும் கஜேந்திரனுக்கும் இருந்த ஏற்பாட்டின்படி, ஒரு கணிசமான தொகை கிடைக்கும். பெரிய


இன்றைய தலைப்புச் செய்தி!

 

 ‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’ பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார் மருதமுத்து. ‘‘தேர்தல் நெருங்கிருச்சு இல்லே, மூச்சு விட நேரமில்லே..!’’ என்றவரிடம், தான் கேள்விப்பட்ட விஷயங்களை எடுத்துவிட்டார் நிருபர். மருதமுத்துவின் முகம் கறுத்தது. ‘‘வேகமா ஓட்டுய்யா!’’ என்று டிரைவரிடம் கடுகடுத்தார். ‘‘என்னைப் பத்தி அப்படியெல்லாம் சொல்றாங்களா…’’ என்றவர் பொங்கிப் பொங்கிப் பேசியவற்றையெல்லாம், கார் ஓட்டத்தில் கிறுக்கலாகக் குறித்துக் கொண்டார் நிருபர். ‘‘தலைவரோட நிழல்லே வளர்ந்தவன் நான்… அவருக்குத்


காலமாற்றம்

 

 ‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது. ஏதாச்சும் செய்தாகணுமே என்று உந்துகிற லௌகீக வாழ்க்கை. பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானம். வரிசையாக வேப்ப மரங்கள். இடையிடையே கட்சிக் கொடிக் கம்பங்களின் சிமென்ட்டுத் திண்ணைகள். நிழல் முழுக்க ஆட்கள். பஸ் ஏற வந்தவர்கள்… பஸ் பார்க்க வந்தவர்கள்… எந்த வேலையும், ஜோலியும் இல்லா மல் ஆடு புலி ஆட்டம் ஆடி, பொழுதைக் கழிப்பவர்கள்…


சில நேரங்களில் சில விஷயங்கள்!

 

 சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்து விடுகின்றன. அன்றைக்கு, நான் செல்ல வேண்டிய பஸ் காலியாக வந்தது. உட்கார இடம் கிடைத்தது. பத்து ரூபாயை நீட்டி நான்கு ரூபாய் டிக்கெட் போக, மீதி ஆறு ரூபாயை, மூன்று இரண்டு ரூபாய் நாணயங்களாகப் பெற்றுக்கொண்டேன். அதில் ஒரு நாணயம் நசுங்கி, நெளிந்திருந்தது. கண்டக்டரிடம் மாற்றிக் கேட்கக் கூச்சமாக இருந்தது. கேட்டாலும் என்ன சொல்வார்… ‘நான் என்ன வீட்ல செஞ்சா கொண்டு வரேன்? உங்களை மாதிரி பாசஞ்சர்


நரிக்குறவி அம்மையாருக்கு செல்…

 

 கல்யாண வீட்டில் சகல பேர்களும் செல்போன் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கல்யா ணப் பெண், மாப்பிள்ளைப் பையன், நடத்திவைக்கிற சாஸ்திரிகள், தலைமை நாகஸ்வரக்காரர், ஜால்ரா இளைஞன், சத்திரத்து வாட்ச்மேன்… பட்டியல் நீளம்! அழுதுகொண்டு இருந்த ஒரு ஆறு மாசக் குழந்தையின் கையில் அதன் அம்மா செல்லைக் கொடுத்ததும், அதன் அழுகை நின்றுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாண வீட்டில் ‘சீர் வரிசையைப் பார்க்கிறது’ என்று ஒரு வழக்கம் உண்டல்லவா? அப்படி, விலை உயர்ந்த வெள்ளிப் பாத்திரங்களிலிருந்து டவுன் கந்தசாமி