கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

418 கதைகள் கிடைத்துள்ளன.

லஞ்சம்… வஞ்சம்!

 

 சாரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்… ‘‘சொல்லும்மா, என்ன பிரச்னை?’’ ‘‘அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய அஞ்சு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை லஞ்சமா கேக்கறாரு அந்தாளு. அப்படிக் கொடுக்கலேன்னா பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்னு மிரட்டினாரு. கூடிய சீக்கிரம் கடையை ரெய்டு பண்ணு வேன்னு கோடி காமிச்சாரு.


அணையா நெருப்பு

 

  வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை. “விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்” என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர். “ஆம்! இது பூமி பார்த்த பூமி” என்றேன். “சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். “பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.” “சரி, கதைக்கு ஒரு துப்பு


பிரிந்தோம்… சந்தித்தோம்!

 

 என்னோட பேரு சாரங்கபாணிங்க. காமதேனு அப்பார்ட்மென்ட்ல ஃப்ளாட் ஷி&1–ல குடியிருக்கேன். வயசு அம்பத்தி ரண்டு. ஸ்டேட் பேங்க்ல ஒர்க் பண் றேன். சம்சாரம் பேரு விமலா… ஹவுஸ் ஒய்ஃப். ஒரே பொண்ணு… பேரு காயத்ரி. எம்.பி.பி.எஸ். ரெண்டாவது வருஷம் படிக்கிறா. எனக்குக் கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷமா வாடகை வீட்லதான் குடியிருந்தேன். இப்ப இருக்கிற இந்த ஃப்ளாட் சொந்தமா வாங்கினது. ஒரு ஃப்ளாட் வாங்க ணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை, போன மாசம்தான் நிறைவேறுச்சு.


வறுப்பு!

 

 சில கடைகளுக்கு போர்டே தேவையில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பட்டாணிக் கடலைக் கடை. ஆனாலும், கடை திறந்த புதிதில் ‘வருகடலை வருத்தகம்’ எனக் கோணாமாணா வென்று, முதலாளியே தனக்குத் தெரிந்த ‘ர’கர ‘ற’கரங்களைப் பிரயோகித்து, பெயின்ட்டால் எழுதியிருந்தார். பின்னர், வருத்தகத்தில் ‘க’ உதிர்ந்து வருகடலை வருத்தம் என்றானது. தலையில் அழுக்குத் துண்டும், முண்டா பனியனுமாக, காய்ந்து போன தென்னை ஓலையைப் போல ஒரு எலும்புக்கூடு மனிதன், கடையின் கர்ப்பக்கிரகத்தில் பட்டாணியையோ வேர்க்கடலையையோ விளக்குமாற்றின் அடிக்கட்டையால் வறுத்துக்கொண்டு


‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’

 

 ‘‘அடுத்து என்ன நடந்திருக்கணும்னா…’’ நந்தகுமாரை ஏதாவது பத்திரிகையிலிருந்து அந்தரங்க சர்வேக்காக அணுகலாம். முதல் அனுபவம் எந்த வயதில் கிடைத்தது? சிநேகிதிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை எத்தனை பேருடன் நெருக்கம்? போன்ற கேள்விகளுக்கு அவனால் ஆராய்ச்சியாளர்களைத் திடுக்கிடவைக்க முடியும். ‘‘இன்பம், பரவசம், சந்தோஷம்… இந்த வார்த்தைகளுக்கெல்லாம் உதாரணம் காட்ட கடவுள் கஷ்டமே படலை. ஃபிகர்களைப் படைச்சுட்டு ஒதுங்கிட்டான். ஹார்மோன்கள் தங்கள் கடமையைச் செய்யும் போது தடுக்கிறதுக்கு நாம யாருடா?’’ என்பான். அப்படிப்பட்ட நந்து என்னிடம் அந்தரங்கமாகப் பேசியதில் அதிர்ச்சியடைந்


வொர்க்கிங் கப்பிள்

 

 ‘‘கஸ்தூரி.. விடிஞ்சிடுச்சு பாரு, எழுந்து டீ போடேன்..!’’ & கிருஷ்ணனின் காலை அலாரம். கஸ்தூரி உடம்பை முறித்துக் கொண்டு எழுந்தாள். ‘‘உடம்பெல்லாம் ஒரே வலிங்க. நீங்கதான் ஒரு நாளைக்கு டீ போடறது! குறைஞ்சா போயிருவீங்க’’ என்று சிணுங் கினாள். ‘‘கல்யாணம் முடிஞ்சு முழுசா முப்பது நாள்கூட ஆகலே. நான் இன்னும் புது மாப்பிள்ளை, தெரியுமில்லே? வேலைக்கு நேரமாயிடும். டீ போடும்மா செல்லம்’’ & கிருஷ்ணனின் தாஜா! ‘‘ம்க்கும்… நானும்தான் புதுப் பொண்ணு! நானும்தான் வேலைக்குப் போறேன். காதலிச்சுதானே


நாய் பட்ட பாடு

 

 ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? அவரே சொன்னது போல, ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்!’ அனுபவப்பட்ட எனக்குத்தானே அதிலுள்ள சிரமம் தெரியும்! ‘மிகப் பெரிய சிந்தனைகள் எல்லாம், எதிர்பாராத நேரத்தில் ஒரு சிறு நொடித் துளியில் உருவாவதுதான்’ என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார் இல்லையா? அந்த மாதிரி, நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர்க் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு இருந்தபோது,


இது கதையல்ல!

 

 மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்… ‘‘ஒரு ஊர்ல, ஒரு நிலா…’’ ‘‘ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!’’ -கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா. ‘‘சரி… அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்…’’ ‘ப்ப்ர்ர்ர்…’ என்று சிரித்தாள் இலக்கியா. ‘‘நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி அங்கே அடுப்பு எரிக்க முடியும், வடை சுட


ஒக்காண்டே தூங்கலாம்!

 

 உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்… ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’ பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும். உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம். உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது. இட நெருக்கடி காரணமாக விஸ்தாரமான பரப்பில் வீடுகள், பங்களாக்கள் அருகி வருகின்ற ஒரு கால


தேறுதல் மந்திரவாதி!

 

 படம்: முத்து வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை அழைத்துக் கொண்டுபோக எஸ்கார்ட்டாக வந்து நின்றது போன்ற பிரமை! ‘‘இன்னிக்கு ராவுலே அண்ணே! சுடுகாட்டுக்குக் கௌக்காலே ஒரு பாளடைஞ்ச ஊடு இருக்கே…அங்கே தான்! நடு ஜாமம் பன்னன்டு மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கேன். வந்து அளைச்சுட்டுப் போறேன். ஊட்ல அம்மாவும் வருவாங்களா?’’ ‘‘வேணாம்டா! சுடுகாட்ல இருக்கிற பிசாசுங்க அவளைப் பார்த்துபயந்துக் கும். நாம போவோம்.