கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்பின் கால்

 

 அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை. அவன் இடம் மூலை. மூலையின் இடதுபுறம் டெஸ்பாட்ச், அவன் நிறம் கொண்டு வந்து சேர்ந்த இடம். கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள். கவுண்ட்டரில் போட வேண்டாம் என்று மேனேஜர் சொல்லியிருந்தார். அதனால் சேவிங்ஸ் பாங்க், ரெகரிங் டிபாசிட் , பில்ஸ் , கரண்ட் அக்கவுண்ட் என்ற அந்த வழவழப்பான கவுண்ட்டரில் புடவைப் பூக்கள் சிரித்தான். இரண்டிரண்டு பேராய்ச்


அலங்காரம்

 

 அலங்காரம் பிரமாதமாக இருந்தது.கூடம் முழுவதும் மாக்கோலம்.நிலையில் எல்லாம் பூச்சரம்.தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுக்காகவும் காவிப் பட்டை.ஓரமாய் ஒரு மேடை.மேலே பட்டுக் கம்பளம்.பூண் பிடித்த ரோஸ்வுட் மண்டபத்தில் சரஸ்வதி.சற்றே காலை மடக்கி, கையில் வீணை ஏந்தி, தலை நிமிர்ந்த சரஸ்வதி.அருகில் ஆளுயரத்திற்கு மினுமினுவென்று இரண்டு குத்து விளக்குகள்.விளக்கின் தலையில் அன்னப் பட்சி.மேடைக்கு இரண்டு புறமும் தொம்பை, துதிக்கை போல் தொங்கும் காற்றுப் பை.சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் என்று வர்ணமிழைத்த பட்டுப் பை.அலங்காரம் பிரமாதமாகத்தான் இருந்தது. விழியைச்


வெற்றி

 

 சுப்ரமணிக்கு ‘கொச்சு முதலாளி’ என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், அவனுடைய அப்பா அல்ல. அதற்கான முழுப் பொறுப்பு தகழி சிவசங்கரன் பிள்ளையை சாரும். அந்த சிறந்த மாலையாள எழுத்தாளரின் ‘செம்மீன்’ அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது.முதல் வருடப் பரீட்சையை எழுதிவிட்டு மொத்த வகுப்பும் தியேட்டரில் வந்து உட்கார்ந்திருந்தது. கருப்பாக, சற்றே பூசினாற்போன்ற மேனியும், வெள்ளைச் சட்டையும், அழுந்த சீவிய தலை அலங்காரமுமாக மது அந்தப் படித்தில் சின்ன முதலாளியாகத் தோன்றியபோது அந்த உருவத்தைப்


இதெல்லாம் யாருடைய தப்பு?

 

 பதினைந்து வயதில் எனக்கு அந்தக் காதல் ஏற்பட்டது.தமிழ் மீது காதல். தமிழ் மீதா, தமிழாசிரியர் மீதா என்று என் சக மாணவிகள் கிண்டலடித்ததுண்டு. ஆனால் எனக்குக் குழப்பம் இருந்ததில்லை. காதலுக்குக் காரணம் சந்தேகமில்லாமல் தமிழ் ஆசிரியர் முருகேசன்தான். ஆனால் காதல் அவர் மீதில்லை. அவர் சொன்ன கவிதை மீது. அது இட்டுச் சென்ற உலகங்கள் மீது. அந்தத் தினம் இப்போதும் நினைவிருக்கிறது.சாதாரணமாகவே ‘தமிழ்’ முருகேசனுக்குக் கனத்த குரல்.கோபம் வந்தால் பேச்சு சரளமாக வரும்.அன்று வகுப்பிற்கு வரும்போதே விசையேறியவராக,


அறம்

 

 ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக் கொண்டு ஆறுமாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அறம் அவர்கூடவே வந்தவன்.பத்து வருடமாகப் பக்கத்திலேயே இருந்து வருகிறான். தில்லியில் பேராசிரியர், அலகாபாத்தில் துணைவேந்தர், அசாமில் கவர்னர் என்று அவர் இடம் மாறிப் போனபோதெல்லாம் உடன் போன நிழல். கடைசியாக அவர் கங்கைக்கரையில் இருந்து இங்கே காலடி எடுத்து வைத்தபோது குடும்பம் என்று எதையும் பெரியதாய்க் கூட்டிவரவில்லை. அறம் மட்டும்