கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 28, 2012

20 கதைகள் கிடைத்துள்ளன.

நிழலாட்டம்

 

 நடந்து கொண்டிருந்தவன் காலில் ஏதோ இடறக் குனிந்து பார்த்தான். தடுக்கிய கல்லை ஓரமாய்த் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவனின் கண்களில் தெரிந்த காட்சி அவனைப் பதறச் செய்தது. அவன் அங்கேயே நின்றிருக்க அவனது நிழல் மட்டும் முன்னேறிப் போய்க் கொண்டிருந்தது. நிழல் 3 வசதியான அந்த உணவு விடுதியின் ஓரத்து மேசையில் அவர்கள் அமர்ந்து இருந்தனர். அவன் பேசத் துவங்கினான். என்னுடைய மிகப்பெரிய பிரச்சினையே நான்தான். என்னுடைய இருப்பு அல்லது நான் யார் என்கிற கேள்வி வெகுகாலமாய் துரத்தி


பஸ் ஸ்டாண்ட்

 

 அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே மறந்து போய்விட்டது. சிலர் அவனை கோழி என்பார்கள். சாப்பாட்டை கொத்திக் கொத்தி தின்பதால் அப்பெயரை வைத்து அழைத்தார்கள். இதை தவிர மண்டை, டவுசர், தண்ணிப் பாம்பு முதலியன வேறு பெயர்களும் அவனுக்கு உள்ளன. முதலாளி எப்போதும். ‘கோழிப்பய’ என்று செல்லமாக அழைப்பார். திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை பெரிய ஊரா? அணைக்கு


புறாக்காரர் வீடு

 

 புறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல வருடங்களாக தன் உயில் போல் வளர்த்து வருகிறார். எங்கள் வீடு சொந்த வீடு என்பதாலும், நாங்கள் நிறைய வருடங்களாய் அங்கேயே வசிப்பதாலும் யாரும் புறா பற்றிய புகார்களை அப்பாவிடம் தெரிவிப்பதில்லை, சொன்னாலும் அதை அவர் பெரிதாய் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். “போங்கடா வெளக்கெண்ணைகளா” என்று புறாக்களுக்கு இரை போடப் போய்விடுவார். புறாக்களுக்கென்றே மொட்டை மாடியில்


குளத்தில் பதுங்கியிருக்கும் கடல்

 

 அது தனக்கு மட்டுமே சொந்தமான குளம்தானாவென்கிற சந்தேகம் வரத் தொடங்கிய நாளிலிருந்து, இவன் குளத்தில் இறங்கி மூழ்குவதைத் தவிர்த்துக் கரையில் நின்றவாறே, யார் யாரெல்லாம் இறங்குகிறார்களென கண்காணிக்கத் தொடங்கியிருந்தான். இவன் நிற்கும்வரை யாருடைய நிழலின் பிரதியும் கரைகளில் விழாதிருக்க, சலனமற்ற நீரில் விரிந்திருக்கும் மவுனத்தைக் கவனித்தவாறே, கடை மூடுவதற்குள் போக வேண்டுமென விரைவாய் நடந்தபடி இருப்பான். இப்போதெல்லாம் கண்களின் சிவப்பு மாறாத வண்ணம் தாக வெறியுடன் மீண்டும் மீண்டும் கடைக்குச் செல்பவன் திரும்பிவரும்போது தெரு முழுவதும் குளத்தின்


பொய் முகம்

 

 ”நீ சரக்கடிப்பியா?” ‘ம்.. எப்பவாச்சும்.. வெளியூர் போனா மட்டும்’ “வெளியூரில் தான இருக்கோம். அப்ப இன்னிக்கு நைட்டுக்கு நாம் சேர்நது சரக்குப்போடுவோம்.. ரூம்முக்கு வந்துடு” என்று கோமதிசங்கர் தான் என்னை அழைத்தார். பொதுவாகவே நான் தண்ணியடிப்பதை விட்டு, பல வருடங்களாகிவிட்டன. பள்ளி இறுதியில் தொடங்கிய பழக்கம், கல்லூரி முழுவதும் கூடவே வந்தது. வேலை தேடிக்கொண்டிருந்த போதும் தண்ணியடித்துக் கொண்டு தான் இருந்தேன். அறை நண்பர்களில் யாராவது ஒருத்தன் தண்ணியடிக்க அழைத்துச்சென்று விடுவான். தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பி, தண்ணியடிக்க


படர்க்கை

 

 பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன். ‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். ‘இதான் உன்னோட அத்த’ ‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’ ‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான்.


தொலைந்த நதி

 

 பதினாறு வருடங்கள் கடந்தும், நீ தந்து சென்ற நினைவுகள் என்னும் நதி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில் ‘மகாநதி’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை பொங்கியது. காவிரிக்கரையில் வாழ்ந்த ஒரு எளிய மனிதன் கூவம் நதிக்கரையில் நின்று கலங்குவதைப் பார்த்து அழுதேனா! அல்லது ‘இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது’ என்று மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு, பெருந்துயரத்துடன் ஒலித்த கமலின் குரல் கேட்டு அழுதேனா! நதிகளை நேசிக்கும் உன் நினைவுகள் தந்த வலியினாலும்


நபும்சகங்கள்

 

 மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும், கயிற்றுக்கட்டில்களும், அழுகிய நாற்றமடிக்கும் காய்கறிகளின் தோல்களும், குப்பைக்கூளங்களும், பெண்கள் போல் உடையணிந்திருந்தாலும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியவர்களான மனிதர்களும் நிறைந்து ததும்பும் கிராமம். எங்காவது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் மேளங்களும், சலங்கைகளும் முழங்க நபும்சகங்கள்கள் அங்கு விரைவதுண்டு. அந்தக் குழந்தை நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாகவும் வளர அவர்கள் அங்கு நடனம் புரிவர். அந்த வீட்டின் உரிமையாளர்,


பெயரில் என்ன இருக்கிறது

 

 பனிக்கொட்டோ கொட்டு எனக் கொட்டிக்கொண்டிருந்தது, இத்தாலிதானே, நம்ம கோயம்புத்தூர் தட்பவெப்பம்தான் சமாளித்துக்கொள்ளலாம் என இந்த துணைத் தலைவர் ரங்கநாதனின் பேச்சைக் கேட்டு கைக்காப்புறைகள், கனமான மேலாடைகள் என எதுவுமே எடுத்து வராததில் , மீன்கடைகளில் விறைத்துப்போய் கிடக்கும் மீன்களைப்போல கைவிரல்களும் காது மடல்களும் உணர்ச்சியற்றுப்போயின. எனது பெயர் கார்த்திக் ராமச்சந்திரன், பெயரில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா… திரைவிரும்பிகளின் குடும்பத்தில் பிறந்த எனக்கு, இந்தப் பெயர்தான் குறை சாதியினர் நுழைய முடியாத, நிறுவனத்தில் மேலாளப்பொறுப்பில் இடம் கிடைக்க உதவியது.


சீத மகன்

 

 திண்டுக்கல் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ஆதரவாளரும் கொல்லப்பட்டார்….. நேற்று அதிகாலை…….. சீத மகனா? என்னத்தா சொல்றே? அவந்தான் மச்சினி! கணேசன். கடசிப் பய. இப்பந்தான் செயபால் கடைல நின்னு, சண்டியர்ட்ட வேல பாக்க பையன் சொல்லீட்ருந்தான். கோவக்காரந்தான். ஆனா, போட்டுத் தள்ளியிருக்க மாட்டான்த்தா. சும்மா ரெண்டு அட! கிறுக்கு மூதேவி! என்னத்துக்குத் தான் இந்தக் காரியம் பண்ணுனானோ? சீதைக்கு, பெத்த வயிறு பத்தி எரியுமே…… இந்தப் பாட்டுப் பதியுத கட என்னிக்கு தெருவுக்குள்ள நொழைஞ்சதோ, அன்னைலருந்து