கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 22, 2012

14 கதைகள் கிடைத்துள்ளன.

உன் பாதை…

 

 வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.நான் இன்று எப்படியும் எங்களுடைய வீட்டை பார்க்க வேணும் எண்டு அம்மாவிடம் விடாப்பிடியாக காலையில் சொல்லி விட்டேன் . பொம்பர் அடிக்காத நேரம் பார்த்து போய்ப் பார்த்து விட்டு வாட என்று அம்மாவும் அனுமதி தந்து விட்டா.. பகல் நேரத்தில் அதிகமாக கெலியும் பொம்பரும் வந்து சுடுவதும் குண்டு போடுவதுமாக


மண் சுவர்

 

 ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு. நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.கேக்குறியா நீ? யேட்டி!யேட்டியோவ்…வாணி… ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்? இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா? அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதான்”னு பக்கத்து வீடு வாணியிடம்


ஒரு நாள் ஒரு கனவு….!

 

 நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், இண்டெர்நெட்டில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மற்றும் சிரிப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது. “அம்மா, தம்பியைப் பாருங்கம்மா, தூங்கவிடாம தொந்தரவு பண்றான்..”, என்று பெரியவன் அம்மாவிடம் சொன்னான். அதற்கு, “டேய், விளையாடாமா சீக்கிரம் தூங்கு, இல்லேனா உங்கப்பன கூப்பிட்டு அடிக்க சொல்வேண்டா…..”, என்று என் மனைவியும் சிறிய மகனை மிரட்டினாள். சிறிய மகன் அம்மாவுக்கு அடங்காத அஞ்சா நெஞ்சன்,


சங்கரு

 

 சிறிது கலைத்தே நடந்து வந்தான் ஷங்கர். தலை கலைந்திருந்தது. காலில் இருந்த ரப்பர் செருப்பு பணக்காரர்கள் ரொட்டியில் தடவும் வெண்ணையை போல மெலிதாகி இருந்தன. ஒரு தோளில் துணிப்பையும் மற்றொரு கையில் காகித பொட்டலத்துடன் நடந்தான். தெரு முனையை தொடுகையிலே அம்மா வெளியே காத்திருப்பது தெரிந்தது. தானாக கால்கள் வேகம் எடுத்ததை அவன் உணரவில்லை. “வா சங்கரு” என்று பையையும் பொட்டலத்தையும் வாங்கியவளை முகம் முழுக்க கேள்வியுடன் பார்த்தான். ஏன் அம்மாவிற்கு “ஷ” வும் “ர்” உம்


ஆடுகள்

 

 ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி இப்படி கையை காலை அசைக்க முடியாது. பர்மாவிலிருந்து புகலிடம் தேடி, தாய் மண்ணுக்கு ஓடி வந்த அகதிகளுக்கென்று உருவான பஜார், இன்று பிஸியான பர்மாபஜார். இங்கே ஊசி முதற்கொண்டு எல்லாமே கிடைக்கும். கப்பல், ப்ளேனைத் தவிர. அதைக் கூட நிறுத்த இடமிருந்தால் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.. வெளிநாட்டு தயாரிப்பு விலாசத்துடன் இருக்கும் பொருட்கள் செலாவணியாகுமிடம்..


நான் பார்த்தசாரதியின் வேழம்

 

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்தீர்களென்றால் என்னை பார்க்காமல் செல்ல இயலாது.இங்கு வாழும் தென்கலையர்கள் எல்லோருக்கும் என்னைத்தெரியும்.ஏனோ தெரியவில்லை என்னை இந்த கோவிலின் முன் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.எனக்கு தெரிந்தவரை என்னால் ஆன பயனென்று எதுவுமில்லை.கடந்த பத்து ஆண்டுகளாக இதோ இந்த சன்னதியின் முன்புதான் நின்றுகொண்டிருக்கிறேன். இந்து மதத்தில்தான் கடவுளுக்கும் மனிதர்களாகிய உங்களுக்குமான தூரம் மிகக்குறைவு.இந்த பார்த்தசாரதி கூட ஒருவகையில் திருவல்லிக்கேணி வாசிதான்.ஏறக்குறைய மனிதர்களுக்கு இருக்கும் எல்லா சம்பிரதாயங்களும் இவருக்கும் இருக்கிறது.பிறந்தநாள் தொடங்கி,திருமணம் வரை ஏகப்பட்ட விசேஷங்கள் அதனையொட்டியே திருவிழாக்கள்.கடவுள் என்பதால்


ஒரு வீடும் சில மனிதர்களும்

 

 தெருவிலே சில கரை வேட்டி கட்டிய கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் இருந்தன. ஜமுனாவின் வீட்டுக்கு அவர்கள் வந்த போது அவர் துணி துவைத்துக்கொண்டிருந்தார். இடுப்பில் சொருகியிருந்த சேலையை எடுத்து விட்டு சரி செய்து கொண்டு கட்சி காரர் கொடுத்த நோட்டீஸை வாங்கிக்கொண்டார். வயது ஐம்பதுகளில் இருக்கலாம். கட்சிக்காரர்களுடன் வந்தவர்களில் ஏழுமலையும் இருந்தார். அவரை பார்த்தவுடன் வாண்ணா.. உள்ள வா.. என்றார் ஜமுனா. கட்சிக்காரர்கள் அடுத்த வீடுகளுக்கு போனார்கள்.


சுஷ்மா ஸிண்ட்ரோம்

 

 ”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா அப்படியா?.இப்பவே பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி இவன்க வாயில் விழுந்திட்டதுன்னு ஒவ்வொருத்தனுக்கும் நெனைப்பு. அப்ப சுஷ்மா ருசி கண்ட பூனையா?.வெரிகுட்…..வெரிகுட்…சுலுவாய் அமுக்கிடலாம் அந்த நொடி முதலே அவளை வீழ்த்துவதற்கான வியூகங்கள் ஒவ்வொருத்தனுக்குள்ளும் ஓட ஆரம்பித்தன. அது கனிமவள சர்வே டிபார்ட்மெண்ட்டின் துணை இயக்குநர் அலுவலகம்,ஹெட் ஆபீஸ் மும்பையில் இருக்கிறது. இங்கே எம்ப்ளாயிஸ்


பொய்க்கால் கழுதைகள்

 

 தலைவருக்கு வயது தொண்ணூறு. தளதளவென்று பரங்கிப் பழம்போல் முகம். இட்ட அடி நோக இருவர் தாங்கி பிடித்துக் கொள்ள, மெல்ல நடந்து வந்தார். திண்டில் மடங்கிச் சாந்தார். பேட்டிக்கு நோட்டைப் பிரித்துக் கொண்டேன். “ வாழ்த்துக்கள் ! உங்களுக்குத் தொண்ணூறு வயது இன்று. ” ஆசீர்வாதத்திற்குக் கையை உயர்த்தினார். “ எழுதிக் கொள்ளுங்கள். ஆளும் கட்சியின் அராஜகம் நாளுக்கு நாள் … ” என்ற வழக்கமான அரசியல் வார்த்தைகளில் ஆரம்பித்தார். “ மன்னிக்க வேண்டும். ” என்ன


அடிமைகள்

 

 அறைக்குள் நுழைந்தபோது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் – முன்பின் அறிந்திராத நபர்கள், நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி. உட்கார்ந்திருக்கும்போதே உயரம் தெரிந்தது. தாடை இறுகிய சதுர முகம். தணல் போல் சிவப்பு, விழியோரம். அனந்த் வந்ததும் எழுந்தார்கள், வணக்கம் சொன்னார்கள். “ நான் ஜகன்னாதன் ” – ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், அவர்களில் ஒருவர். “ அட்வகேட் ” என்று தொழிலைச் சொன்னார் அருகில் இருந்தவர். “ சந்தித்ததில் சந்தோஷம்