கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 21, 2012

20 கதைகள் கிடைத்துள்ளன.

கரப்பான் பூச்சிகள்

 

 எதையும் மதிக்காமல் வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடப்பவன், காலடியில் இருக்கும் பள்ளத்தில் தடுக்கி விழுந்து நகைப்புக்குள்ளாவான். From : Aesop Fables ‘ எண்ணிப் புள்ளி வைத்த இழைக் கோலம் மறந்து போகும். உண்ணச் சோறு எடுத்தால் உன் நினைப்பால் புரைக்கேறும் தண்ணீருக்கு உருளும் ராட்டை உன்னைப் போல் முரடாய் பேசும் துணி உலர்த்தும் கொடிக் கயிற்றில் அணி வகுக்கும் அண்டங் காக்கை உன் பெயரைச் சொல்லிக் கரையும் பாடத்தில் வரிகள் மாறி பாதியில் உன்


கவசம்

 

 “ திஸ் இஸ் டூ மச் ” என்று வீறிட்டாள் மைதிலி. கையில் இருந்த செய்திப் பத்திரிகை எகிறிப்போய் விழுந்தது. கலவரத்துடன் எட்டிப் பார்த்தாள் சாவித்ரி. ‘ அறிவு ஜீவிகள் கிளப் ’ மொத்தமும் கூடத்தில் ஆஜராகியிருந்தது. அறிவுஜீவிகள் என்றால் ஏதோ தலையில் கொம்பும், முதுகில் வாலும் முளைத்த ஆசாமிகள் அல்ல. பத்திரிகைக்காரர்கள் சித்திரம் போடுகிற மாதிரி அழுக்கு ஜீன்ஸும் கறுப்புத் தாடியுமாக உலவுகிற இளைஞர்கள் அல்ல. எல்லோரும் நடுவயதுக்காரர்கள். எம்.எஸ்ஸி., பி.எச்டி., என்று பெரிய படிப்புப்


இறகுகளும் பாறைகளும்

 

 அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும்போது உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள். அப்போது அவளுக்கு வயது எட்டு. அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன. அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான். காலை ஏழு மணி, பகல் ஒன்றரை மணி, மாலை மூன்று


ஒரு கதவு மூடிக் கொண்டபோது

 

 வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை ஆரம்பித்து வைக்கிற வேகப்பந்து வீச்சாளன். பந்தை விச ஆரம்பிப்பதற்கு முன் பன்னிரண்டு தப்படி நடந்து – அது என்ன கணக்கோ ? – பாண்டி ஆடுவதுபோல் ஓட்டுச் சில்லை வீசிப் போட்டு கல் விழுந்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்துத் திருநீறு பேல் நெற்றிக்கு இட்டுக் கொண்டு திடுதிடுவென்று ஓடி வர ஆரம்பிப்பான். முதல் பந்து


காதலின்…

 

 சொடக்குப் போட்ட விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று சொல்லி விட்டது இந்தப் பெண் ! வைத்த கண்ணை நகர்த்தாமல் வெளியில் வியப்புத் தெரியாமல் திரும்பத்திரும்ப அவளை பார்த்தேன். “ என்ன சார், பார்க்கறீங்க ? ” என்றது ஹேமா. எங்கள் ஆபீஸை அழகு, சுத்தம் என்று கொஞ்ச முடியாது. நெடுநெடு என்று நீளக் காரிடார். காரிடார் முழுக்கக் காகிதப் பரவல். இடது பக்கம் எனது அறை.