கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 15, 2012

3 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புக் கணக்கு

 

 தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி. கேட்டே ஆகவேண்டிய கேள்வி. தன்னுடைய கணக்கு சரியா, தவறா? ஜனனி மீண்டும் ஒரு முறை அந்தப் பரிட்சை பேப்பரை எடுத்துப்பார்த்தாள். கணக்கின் குறுக்கே ஒரு சிவப்புக்கோடு போட்டிருந்தது. மார்ஜினில் ஒரு பெரிய பூஜ்யம் போட்டிருந்தது. ஜீரோ போட்டால் தப்பு என்று ஜனனியின் நான்கு வயது மூளைக்குத் தெரியும். ஆனால் ஏழு இண்ட்டு இரண்டு, பதினாலு எப்படித்தப்பு?.


பொட்டலம்

 

 அழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த குழம்பைக் கிண்டுவதில் மும்முரமானாள் சீதா. “என்னா இன்னிக்கு எவங்கிட்டே மாட்டுனே? ஆம்புளப் புள்ளன்னா கொஞ்சமாவது அடாவடியா நிக்கத் தெரியணுமடா! வெளையாடப் போற இடத்தில இப்படியா தெனசரி அடி வாங்கிட்டு வருவே?” வழக்கமாய் வந்ததும் வராததுமாய் பையை ஒரு மூலையில் வீசி விட்டு தன் காலை கட்டியபடி அன்றைய நிகழ்வுகளை சந்தோஷமானதோ சங்கடமானதோ ஓடி வந்து சொல்லும்


இன்னொரு வசந்தா

 

 “சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி. திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில். “ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன். அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள்