கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2012

60 கதைகள் கிடைத்துள்ளன.

கீறல்

 

 கை தவறியதோ என்னவோ தெரியவில்லை… மற்ற இசைத்தட்டுகள் அப்படியே இருக்க, பித்தனின் இசைத்தட்டு மட்டும் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. பதறிவிட்டது மணவாளனுக்கு. காக்கையின் இரு சிறகுகள் போல் இருந்த அந்த இசைத்தட்டுத்துண்டுகளைக் கையில் எடுத்தான். பித்தனுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்என்கிற கிலி அவனைப் பற்றிக்கொண்டது. வெளியே வந்தான். சிற்றுண்டியும் தேநீரும் பரிமாறப்படும் அந்த நீண்ட கூடத்தில்,மணவாளனின் அப்பாவின் மேற்பார்வையில் ஆயத்த வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. நகரத்தின் பிரதான வீதியிலிருந்து விலகி, அடுத்த கட்டடங்களின் தொடர்பே இல்லாமல்,


ஆபரேஷன் தருமன்

 

 ‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்… சரியா பதினோரு மணிக்கு இங்கே வந்துடறதாச் சொன்னாங்க!’’ ‘….’ ‘‘என்ன சார் யோசிக்கிறீங்க?’’ ‘‘ஒ… ஒண்ணுமில்லே…’’ ‘‘புரியுது சார். சங்கடப்படாதீங்க. அவனவன் பொண்டாட்டிக்கு ஒட்டியாணமும் சின்ன வீட்டுக்கு நெக்லஸ§ம் செய்து போடறதுக்கு லஞ்சம் வாங்கறான். நீங்க ஒரு உயிரைக் காப்பாத்தத்தானே வாங்கறீங்க? தப்பில்லை சார்!’’ ‘‘சொந்தப் பொண்டாட்டியின் உயிரைக் காப்பாத்தன்னு சொல்லு!’’ ‘‘அதனால என்ன சார்… உங்களையே


ஒரு சின்ன தவறு!

 

 சற்றே பெரிய சிறுகதை சின்ன தவறு-தான். செய்தது, திரு–வாளர் நீலகண்டன் சுப்ரமணியன். ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது. ஆறு டிஜிட் டாலர் சம்பளம் கொடுத்தும், அவனுடைய வக்கீ-லால் ஜெயிக்க முடியவில்லை. பத்து மாதங்களுக்கு முன்னால்… கலிபோர்னியாவில், பெரும் பணக்கார ஹாலிவுட் நட்சத்-திரங்கள் வசிக்கும் ‘பெல் ஏர்’ என்கிற இடத்தில் இருக்கிறது அந்த மாளிகை. ஒரு நாள் மாலை ஐந்து மணி சுமாருக்கு, நந்தினி & அதாவது, திருமதி நீலகண்டன் சுப்ர-மணியன் &இரண்டரை மில்லியன்


லோன் வாங்கலியோ… லோன்!

 

 ‘‘ஹலோ… வி.ஆர்.எஸ். பேங்க், வில்லிவாக்கம் பிராஞ்ச்சுங்களா?’’ ‘‘ஆமா, யார் பேசறீங்க? உங்க அக்கௌன்ட் நம்பர் என்ன?’’ ‘‘என் பேரு சீதாராமன்…’’ ‘‘யெஸ் மிஸ்டர் சீதாராமன், முதல்ல உங்க அக்கௌன்ட் நம்பரைச் சொல்லுங்க…’’ ‘‘623801117484.’’ ‘‘ஒன் மினிட்… ஓ.கே! டாலி ஆயிடுச்சு! மிஸ்டர் சீதாராமன், உங்களுக்கு 2 லட்ச ரூபாய் லோன் சாங்ஷன் ஆகியிருக்கு. நாளைக்கே வந்து செக்கை கலெக்ட் பண்ணிட்டுப் போங்க. அதுக்கு முன்-னாடி கொஞ்சம் வெரிபி-கேஷன் பண்ண வேண்டி-இருக்கு.’’ ‘‘நான் சொல்றதைக் கேளுங்க மேடம்…’’ ‘‘ஒன்


செல்…செல்… செல்லல்லா!

 

 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்திருந்தது. என் மொபைல் கிடைத்துவிட்டதாம். வந்து வாங்கிக்-கொண்டு போகச் சொன்-னார்கள். இந்த மொபைல் தொலைந்து திரும்பக் கிடைப்பது இது ஐந்தாவது முறை. இப்போதெல்லாம் இதற்கு நான் ஆச்சர்யப்படுவதில்லை. முதல் முறை தொலைந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எங்கள் கம்பெனியிலேயே உரக் கிடங்கு இன்சார்ஜின் ரூமில் சார்ஜ் போட்டுவிட்டு அக்கவுன்ட்ஸ் பார்க்க ஆரம்பித்தேன். சாப்பிட்டு விட்டுப் போய்ப் பார்த்தால், சார்ஜர் மட்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. பக் என்று இருந்தது. ஐயாயிரத்து ஐந்நூறு ரூபாய்


கனவுகளைத் துரத்தியவன்

 

 சற்றே பெரிய சிறுகதை குமாரராஜாவின் அப்பா, நள்ளிரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி போனில் பேசியபோதுதான், அவர் சொல்ல வந்த விஷயத்தின் தீவிரம் எனக்குப் புரிந்தது. ‘‘சத்யா! ராஜா உன்னிடம் பேசியிருப்பான்னு நினைக்கிறேன். அவன் மறுபடியும் கனவு கினவுன்னு ஆரம்பிக்காம பார்த்துக்கோ. நாலஞ்சு நாளா அவன்கிட்டே பேச முயற்சி பண்றேன்… எந்த ரெஸ்பான்சும் இல்லை. எங்கே இருக்கான்னே தெரியலை. எதற்கும் ஒரு எட்டு பிட்ஸ்பர்க் போய் ராஜாவைப் பார்த்துட்டு வந்துடேன்!’’ ‘‘ஓ.கே. சார்!’’ என்று போனை வைத்துவிட்டுக்


பெரிய இடத்து உத்தரவு!

 

 ‘‘என்னங்க… இப்படிஇடிஞ்சு போய், பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருந்தா எப்படி? உங்க ஆபீஸ் பிரச்னை எப்பத்தான் தீரும், சொல்லுங்க? எப்போ என்கொயரி முடியுமாம்? இன்னும் எவ்வளவு நாளைக்குதான் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருப்பாங்-களாம்?’’ மாலதிக்கு என்ன பதில் சொல்-வது என்று தெரிய-வில்லை. மொத்தத்தில் என் நேரம் சரி-யில்லை; அவ்வளவுதான்! எங்கள் கம்பெனி சரக்கை தினமும் வேனில் எடுத்துச் சென்று விற்று வரும் சேல்ஸ் மேன் ராமு, கலெக்ஷனில் கை வைத்து-விட்டான். அதை ஆடிட்டில் கண்டு-பிடித்துவிட்டார்கள். நான்தான் தினமும்


தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

 

 அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள். அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்–தான் ஆச்சு! ‘இங்கேதானே வழக்கமாக வைப்பீங்க..?’ என்று அனுதாபத்தோடு, நமது தேடும் முயற்சிக்கு உதவுவார்கள். அல்லது, உதவுவது போல நடிக்கவாவது செய்வார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில், முக்கியமாக பெண்கள் டி.வி. சீரியலில் மூழ்கியிருக்கும்போது தேடும் படலத்துக்கு


அக்கா ஆடிய பல்லாங்குழி!

 

 ‘‘அடடே! வாப்பா சந்தோஷ். எப்படி இருக்கே?’’ என்று உற்சாகமாக வரவேற்றார் அக்காவின் மாமனார். ‘‘நல்லா இருக்கேங்க’’ என்றான். ‘‘அப்பா, அம்மா, பாட்டி எல்லாம்..?’’ ‘‘நல்லா இருக்காங்க. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?’’ ‘‘எங்களுக்கு என்னப்பா… உன் அக்கா வந்ததுல இருந்து எந்தக் குறையும் இல்ல. ஏன் நின்னுட்டே இருக்கே… சொன்னாதான் உட்காரு வியா?’’ ‘‘சேச்சே! அக்காவைப் பார்க்க-லாம்னு…’’ என்றபடி அவரருகே அமர்ந் தேன். ‘‘காட்டாமலா போயிடு-வோம். சந்தியா… சந்தியா…’’ என்று குரல் கொடுத்தார். ‘‘வந்துட்டேன் மாமா’’ என்று


வைத்தியனின் கடைசி எருமை

 

 ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற ஓங்காளியம்மன், சின்ன கண்ணாடிச் சட்டத்துக்குள் அழகாக நின்றாள். ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டு இருந்த கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மாதான். இப்படி ஒரு குலதெய்வத்தின் கொடித் தடமாக வேரோடிக்கிடந்த ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மா மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை; சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை! ஓங்காளியப்பன் வேண்டிக்கொண் டான்…