Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

குரங்கு

 

 1 அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. ப்ளூரசன்ட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடிகாரத்தின் முள்கள் சிகப்புநிற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் தோற்கும் என்று தெரிந்தும் பெரிய முள் சின்ன முள்ளை முந்திக்கொண்டு நகர்ந்தது. விஜயராஜ் பெண்தோழியுடன் படுக்கையறையை பகிர்ந்து கொண்டிருந்தான். அன்றைய தினத்தின் தோல்விகளின் வெறுப்பை அவள் மீது காட்டினான். உணர்ச்சிகளின் வெளிப்பாடான அவளின் முனகல்கள் அவனின் வசைகளில் மோதி சிதறியது. வசை, முனகல், இறுக்கம், வியர்வை, தேகத்தின் தேடல் எல்லாம் முடிந்து அறை முழுவதும்


சிகப்பு விளக்கு

 

 மியாபூர் சிக்னலை ஒட்டிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகயிருந்தது. காலைநேரம் என்பதால் பயணிகள் நிறுத்தம் பரபரப்பாக காட்சியளித்தது. பஸ் வராது ஏமாற்றமடைந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் செல்வதற்காக ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். அங்கேயும் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. ஜீன்ஸ்பேண்ட் டீ-சர்ட் அணிந்திருந்த ஆள் அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பும் ஆட்டோ ஒட்டுனரிடமிருந்து பத்து ரூபாய் வீதம் வசூல் செய்து கொண்டிருந்தான். ‘கொத்த கொடா, கொண்டபூர், ஹைய்டெக்சிட்டி, கொத்தகொடா,…….’ என்று வசூலிப்பவன் கூவிக்கொண்டிருந்தான். மன்சூரின் ஆட்டோ அந்த


நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!

 

 விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன் ஜன்னலுக்கு வெளியே சாரல் அடிப்பதை பார்த்து ரசிக்கிறான். மேசைமேல் கடிதம் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது. சாந்தியைப் பார்த்துச் சொன்னான், வீட்டிலிருந்து கடிதம் வந்திருப்பதை…. “ஆமாம்! பார்த்தேன்!” என்று பதில் சொன்னாள் சாந்தி. “கடிதத்தை அப்பாதான் எழுதியிருக்கிறார். வேண்டுமானால் எடுத்துப் படித்துப் பாரேன்” என்று விஷ்ணு சொல்லியவுடன், கட்டிலில் இருந்து எழுந்தவள் கால்களை கொஞ்சம் இழுத்து இழுத்து நடந்து


கார்ட்டூன் வரைபவனின் கதை

 

 அப்போது நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிட மௌனத்திற்குப் பின் தான் அப்பாவிடம் கூறினேன். ராஜா, அப்பாவின் தாய்மாமன். எல்லா மரணங்களும் கொடுக்கும் நிசப்தத்தை நாங்களும் கடைப்பிடித்தோம். அது அவரைப்பற்றி சில தருணங்களை அசை போடுவதற்கும் பெரிய ஓலத்திற்கான சக்தியைச் சேகரிப்பதற்கும் மரணத்தை ஏற்றுக்கொள்வதற்கும் தேவைப்பட்டது. அம்மா, அவர் விரும்பி சாப்பிடும் கீரை குழம்பு பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். அவர் ஐந்து வகையான கீரையை ஒன்றாகப் போட்டு கடைந்து சாப்பிட ஆசைப்பட்டதாகவும் இதுவரை தன்னால் மூன்று


உற்றுழி

 

 எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது. அதை துளியும் பொருட்படுத்தாது, வைதேகி மின்னல் வேகத்தில் தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை பத்து மணிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. ஆச்சரியம் இம்மட்டு அம்மட்டல்ல. இயக்குனர் மந்தாகினி சிங்கை வந்துள்ளாரா? இப்போது சிங்கப்பூரில் எந்தக் கலை நிகழ்வுமே இல்லையே! என்று இவள் யோசிக்க, அவரே விஷயத்தை விண்டுரைத்தார். அட! அவரது அண்ணா பொண்ணு சிங்கையிலிருப்பது, இப்போதுதான் இவளுக்கும் கூட நினைவுக்கு வந்தது. ஆமாம், திடீரென்று இவருக்கு எப்படி என் ஞாபகம்?


ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி

 

 ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் எல்லாருடைய வழக்கம்தானே. அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ விவரங்கெட்டுக் கிழிந்த மழையாடைகளும் உடைந்த குடைகளும்தான். அதிகப்பட்ச மக்களின் கவனம் சங்கமிக்கும் இடங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாருடைய மனமும் லயிக்காதச் சமாதிகளையே எப்போதும் விரும்பித் தொலைவது


கருப்பண்ணன்

 

 நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள் காலைக் குளிரில் சுருங்கியிருந்த கருப்பண்ணனின் தோலுக்கு மேலும் இதமாக இருந்தது. எல்லா கொட்டகைகளையும் திறந்து மாடுகள் அத்தனையும் நோக்காலம்மன் கோவிலருகே கூட்டமாக நிறுத்தினார். கருப்பண்ணனின் நாயான மைக்கல் தன் பங்குக்கு நான்கு முறை குரைத்து கூட்டத்தை மேலும் ஒழுங்குப்படுத்தியது. வேறொருவராக இருந்தால் இன்னேரம் வேர்த்து விறுவிறுத்திருக்கும். கருப்பண்ணனின் உடல் இப்போதுதான் குளித்து துவட்டியது போலிருந்தது. கடைசியாக


அவள் – நான் – அவர்கள்

 

 சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில் கைகளில் கேஸ் கட்டுகளுடன் கனத்த உடலில் ஊளைசதையும், தளர்ந்த மார்பகங்களும் குலுங்க கையைத் தூக்கி ஆட்டியவண்ணம் என்னை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறாள். ‘ஐயா ஒங்கள பார்க்கத்தான் லொங்கு லொங்குனு வர்றேன்’ நெற்றியில் விபூதி கீற்று, சின்னதாக மஞ்சள் பொட்டு, வியர்வை துளிகள். ‘ஏம்மா?’ என்றேன். ‘நம்ம வார்டுக்கு ஒரு கேஸ் வந்திருக்கு, அந்த சிடுமூஞ்சி செரினா,


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா

 

 சீன மூலம்: ஸூ ஷூயாங் | தமிழில்: ஜெயந்தி சங்கர் புதிய வாழ்க்கை நிச்சயம் பழைய வாழ்க்கையின் இடத்தில் ஏறும். ஆனால், பழமையிடம் முற்றிலும் விடை கொடுப்பது என்பது மட்டும் சிரிப்புக்கு உரிய சாதாரண விஷயமில்லை. மிகவும் மனவலியுடையது மட்டுமில்லாது சாத்தியமானதும் இல்லை. உதாரணத்திற்கு, நான் உயர்ந்த அடுக்ககத்திற்கு குடிபெயர விரும்புகிறேன். அதுவும் மிகவும் உயர்ந்த கட்டடத்தில் இருக்கும் அடுக்ககத்திற்கு குடிபெயர வேண்டும். பல குடும்பங்களுடன் பகிர்ந்து புழங்க வேண்டியிருக்கும் இந்த வளவை விட்டுப் போக நினைக்கிறேன்.


அல்ட்ராமேன்

 

 ‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக் கனத்தது. கண்கள் எரிந்தன. இப்போது குரலோசை இன்னும் வேகமாகக் கேட்டது. குரலோடு கதவு தட்டப்படும் ஒசையும் சேர்ந்து கொண்டது. மெதுவாக எழுந்து பாயில் உட்கார்ந்தான் குமார். தம்பி கால்களைக் குமாரின் தொடைகளில் போட்டபடி படுத்திருந்தான். தம்பியின் வலதுக்கை குமாரின் இடுப்பைச் சுற்றியிருந்தது. அன்னம்மா பாட்டி கதவை உடைத்து விடுவார் என பயந்து ‘வரேன் பாட்டி’ எனக்குரல்