Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

கூலி

 

 அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ‘நான்காவது பிலோர் 4-பி’ என்று பதறத்துடன் குறிப்பெடுத்ததை மீண்டும் ஒருதரம் நினைத்து சரி பார்த்துக்கொண்டான். நிச்சயம் அவ்வறை அழுகை சூழ்ந்து இருக்கும். அம்மாதான் அதிகம் அழுதிருப்பாள். அம்மாவுக்கு அழுவதற்குப் பெரிய காரணங்கள் வேண்டாம். சாதாரணமாக மேசையின் கால்கள் உடைந்துவிட்டாலே அம்மேசையை அப்பா வாங்குவதற்கு உழைத்த உழைப்பையும் பிடித்த சிக்கனத்தையும் சொல்லி அன்று முழுதும் அழுது தீர்த்துவிடுவாள். அண்ணனுக்கு விபத்து நடந்தது


எதைத்தான் தொலைப்பது?

 

 எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா? நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச் சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டதோ, அதேபோல கற்பைத் தொலைப்பதுகூட ஒரு சாதாரண நிகழ்வாயப் போய்விடுமோ என்ற அச்சத்தோடு தங்கள் சொந்த மண்ணில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்ற அனாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நண்பன் ஓடி வந்து இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போடுவான் என்று நான் நினைக்கவில்லை. திடீரென நண்பன் தனது ஊருக்குப் போவதாகவும் என்னையும் தன்னுடன் துணைக்கு


விரல்

 

 தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ? பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப்போகிறாள்? கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரிய கரண்டியால் கலக்கிவிட்டு, ஒருசொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப்பார்த்தான் பாவாடை. உப்பு கொஞ்சம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றவே, அரக்கப்பரக்க இரண்டு உருளைக்கிழங்கை வெட்டி சுத்தம்செய்து, கொஞ்சம் பொடிசாக வெட்டி சாம்பாரில் போட்டான். இடைப்பட்ட நேரத்தில் பெரட்டி வைத்திருந்த கோபிஸ்கீரையை, டப்பர்வேரில் போட்டு மூடினான்.


விட்டாச்சு லீவு

 

 “ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு இழூ……த்து எதிருல இருந்த என்னோட குண்டைக் குறி பாத்து அடிச்சான் செல்வா. சில்லுப்பேந்து போச்சு என்குண்டுக்கு. குழிக்குண்டு வெளயாடிக்கிட்டிருந்தோம். செல்வாவுக்கு “ர” வஆ(ரா)து. சில்லுப்பேந்த குண்ட கையில எடுத்தேன். ”டேய்.. அனங்கிருச்சு… அங்கிருச்சு”ன்னு சொல்லி சண்ட ஆரம்பிச்சிடுச்சி. பரிட்சலீவு விட்டாப்போதும், இந்தக்குண்டு வெளயாட்டுதான். செல்வா, முத்துராசு, மயிலு (வாகனன்), பெரபாகரு, நான், அப்புறம் எப்பவாவது பத்து


அமென்

 

 மேரியின் சொந்த ஊர் குருவாயூர். பள்ளிப்படிப்பைக் கான்வெண்ட் ஒன்றில் படித்தாள். கான்வெண்ட் குருவாயூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்ததாள் கான்வெண்ட் ஹாஸ்டலில் தங்கிபடித்தாள். கான்வெண்ட் நடத்தி வந்தவர்கள் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள். பெண்கள் மட்டும் படிக்கும் கான்வெண்ட் அது. ஆண்கள் என்று பார்த்தால் சர்ச்சில் இருக்கும் பாதர். அவரும் பிரார்த்தனை நேரம் மட்டும் கான்வெண்டினுள் இருப்பார். மேரி வாரவிடுமுறை நாட்களில் அவள் வீட்டிற்கு வருவாள். மேரிக்கு அப்பா என்றால் மிகவும் இஷ்டம். அவள் ஊருக்கு வரும் தினத்தன்று வீட்டிலுள்ள


அப்பாவின் தண்டனைகள்

 

 அப்பாவின் தண்டனைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான். நிர்ப்பந்தங்களும் அத்துமீறல்களும் தலைதூக்கி அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அப்பாவின் தண்டனைகளைத்தான் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது. நாகரிகம் அமைத்துக் கொடுக்கின்ற வேறு வகையான தண்டனைகள் மீது அவனுக்கு அத்துணைப் பிடிப்பில்லை.வீட்டில்,பணியிடத்தில், நண்பர்களோடு கலாய்த்திருக்கும்போது இப்படியான சந்தர்ப்பங்கள் சூழ்ந்துவரும்போதெல்லாம் அப்பாவின் முகம் மாறி மாறித் தோன்றுகிறது. போதைக்கு முன், சாந்த சொரூபியாகத் தோன்றுகிற அப்பாவின் பிம்பம் அதற்குப் பின் அப்படியே உடைந்து பல இராட்சஸர்களைத் தம்முள் இறக்குமதி செய்திருக்கும். இப்படியொரு பிசாசைப் பார்த்திருக்கவே முடியாது என்பது போல


சிற்றறிவு

 

 தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். அவளது ஆளுமையின் கீழாக பல நூறு சிறுதீவுகள் இருந்தன. ராணி திருணம் செய்து கொள்ளாதவள். மிகுந்த முன்கோபி என்று பெயர் எடுத்திருந்தாள். குறிப்பாக அவளுக்குக் கடல்வழியாக வந்திறங்கி வணிகம் செய்யும் விதேசிகளைப் பிடிக்கவேயில்லை. அந்த நாட்களில் போர்த்துகீசிய அரசு புகழ்பெற்ற கடற்பயணியான ஆல்பர்டோ ஒலிவாராவை அனுப்பி இழந்து போன தங்கள் கடல் வணிகத்தைப் புதுப்பித்துக் கொள்ள


தங்கராசு

 

 தங்கராசு மூச்சிறைக்க ஓடிவந்தான். உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு, “இன்னாடா தங்கராசு… இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு வரே சீமான் வூட்டூப்புள்ளமாதிரி கண் ரண்டும் பளபளக்குது?’ என்று கேட்டாள். மேல்மூச்சு வாங்க தங்கராசு தன் நிஜாரின் பட்டியை சரசெய்தபடி, “அம்மா உனக்கு விஷயமே தெரியாதா? குடிசைய விட்டு வெளில வாம்மா…. வானத்தப்பாரு… வா! வா!” என்றான் உரத்தகுரலில் மகிழ்ச்சி கொப்பளிக்க. “தங்கராசு…. வானம்பாத்தபூமியா நம்ம ஊருதான் பலவருஷமா கிடக்குதே… இதுல நான் வேற அதப்


சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

 

 1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப் பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும். “செவன் இலவன் எங்காது இருக்குமா?” எதிரில் யாரும் இல்லை. கேட்டு விடவேண்டுமென்பதில்


பெல்ஜியம் கண்ணாடி

 

 ‘ஐயா இங்கயே இறக்கி வெச்சிரட்டுங்களா?’ என்று கேட்டவாறு அந்தப்பழைய கால ஃப்ரேம் போட்ட ஒரு தாத்தாவின் படத்தை இறக்கினார். நான் அதை முன்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய வீடு காலி பண்ணி சொந்தமாகக் கட்டிய வீட்டில் குடிபுக அன்று அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. நல்ல வேலைப்பாடு கொண்ட ஃப்ரேம்… வளைவு வளைவுகளாக… அதில் யானைகள் துதிக்கையைத் தூக்கியவண்ணம் நடை போட்டுக்கொண்டிருந்தன. ஒரு புறம் சேடியர் புடை சூழ ராஜபவனி. நாலு இஞ்ச் ஃப்ரேமிற்குள் இத்தனை வேலைப்பாடுகளும்.