கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 29, 2012

2 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாஞ்சியும் ஆளொண்டாப் பிறவியும்

 

 India 1.அம்மாஞ்சி ‘சீ… நானா இப்படி நடந்தேன்?‘ என்மீது எனக்கே வெறுப்பாக இருந்தது. எனக்கும் இவ்வளவு கோபம் வரும் என்பது முப்பதாண்டுகளாக எனக்கேத் தெரியாது. “உன் சிரிப்புத்தாண்டா அழகு“ என்பது அம்மா, அப்பா தொடங்கி சொந்தபந்தம் நண்பர்கள் என அனைவரும் நேரடியாகவே எப்போதும் சொல்லும் வசனம். எவ்வளவு கோபமாக வருபவர்களும்கூட எனது சாந்தமான சிரித்த முகத்தைப் பார்த்தால் தங்களது கோபத்தின் மீது தாங்களே வருத்தப்பட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சாந்த சொரூபி நான். எந்தப் பிரச்சனையானாலும் அலட்டிக்


அஞ்சலை

 

 இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு, அஞ்சலை அந்த நேரத்தில் வந்தது ஆச்சரியமாக இருந்தது. வீட்டு வேலைகளை முடித்து மதியவாக்கில் போனால் அடுத்தநாள் காலைதான் வருவாள். அஞ்சலையின் முகத்தில் பதட்டம் தெளிவாக தெரிந்தது. ”என்ன அஞ்சலை இந்த நேரத்தில”… ”காமாட்சி இங்க வந்தாளாம்மா”… ”இல்லையே, எதுக்கு காமாட்சியை தேடுற”.. அஞ்சலையின் அடிவயிற்றிலிருந்து வந்த ஒரு கேவல் பெரும் அழுகையாக மாறியது. ”முதல்ல உள்ளே