கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 26, 2012

27 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தம்

 

 மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி அப்பொழுது நள்ளிரவு மணி பன்னிரெண்டு. மித்யா குல்டாராவ் உற்சாகமான முகத்துடனும் கலைந்த கேசத்துடனும் தன் பெற்றோரின் அடுக்குமாடி வீட்டில் நுழைந்து எல்லா அறைகளுக்கும் துரிதமாய் ஓடினான். அவனது பெற்றோர் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவனது சகோதரி படுக்கையில் நாவலின் கடைசி பக்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். பள்ளியில் பயிலும் அவனது சகோதர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். “நீ எங்கிருந்து வர்ற?” அவனது பெற்றோர் திகைத்தனர். “என்ன விசயம்?” “ ஓ..


மோப்பம்

 

 நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். உடலின் மையம் கால் பாதத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதைப் போல கால்களில் வெறும் அவசரம் மட்டுமே. எங்கிருந்து எங்கு நகர எத்தனை அடிகள் வைத்தால் போதும் என்ற அளவிற்கு துல்லியமாக நடப்பேன். அது கண் தெரியாதவர்களின் கணக்கு.


வசனம்

 

 நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன். ரெலிபோன் கதைச்சது ரதி. அவள் என்ர மச்சாள். கதைச்சதை விட கூட நேரம் ஒப்பாரி வைச்சு அழுதாள்.


மேம்பாலம்

 

 துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு. “கேக்குதா? லோரி…” மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது.


சீனக் கிழவன்

 

 எம்.குமாரனின் அதிகம் பேசப்பட்ட கதை இது. மலேசியச் சிறுகதைகள் குறித்து பேசும்போது இக்கதையையும் ‘முக்கியமான’ வரிசையில் வைக்கிறார்கள். எம்.குமாரனை இறுதியாகச் சந்திக்கச் சென்ற போது அவர் நாவல் குறித்து மட்டுமே பேச முடிந்தது. இலக்கியத்துடன் இடைவெளி விட்டிருக்கும் ஒருவரிடம் அவர் படைப்பின் பலவீனத்தை சடாரென முன் வைப்பது சரியில்லை என அச்சிறுகதை குறித்து பேசாமல் இருந்துவிட்டேன். எனக்கு உவப்பான நாவல் குறித்து மட்டுமே பேசினேன். இன்றும் நான் சந்திக்கும் பல நண்பர்கள் சீனர் தோற்றத்தில் உள்ளனர். அவர்களின்


குளியல்

 

 1 துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும். நான்சுவர் இல்லாமல்,


தமிழ்க்கதை

 

 ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத்தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பத்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது. முத்தமிழையும் கரைத்துக்குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர் கருணாநிதிக்கு பின்பாகப் பெயர்


கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

 

 காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. எல்லாமும் காலத்தை உறிஞ்சி தனக்குள் நகரவிடாமல் தடுத்து வைத்துக்கொள்கின்றன. இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து


பூமராங்

 

 கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். அணுவளவேனும் வெளிச்சமற்ற ஓர் அமாவாசை இரவில் அவளைத் தனியே நிற்கவைத்து, ஊசித் தும்பிகளின் சிறகடிப்பினைப் போல அடிக்கடி அடித்துக் கொள்ளும் இமைகளை மூடிக் கொள்ளும்படியும், சிரிப்பில் மின்னும் வெள்ளைப் பற்களைக் காட்டக் கூடாதெனவும் கட்டளையிட்டால்,


ஒட்டிக் கொண்டது…

 

 அது அவளோடு எப்பொதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம் அவளுக்கு ஞாபகமே இல்லை. இத்தனை நாட்கள் அது ஒட்டியிருந்ததை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போதுதான் அது அவளோடு ஒட்டியிருக்கிறது என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. வெளியில் வந்த பிறகு எங்கு ஒட்டியிருக்கிறது என்று தேடிப் பார்த்தாள். எதுவும் பிடி கிடைக்கவில்லை. ஆளுயரக் கண்ணாடி முன் பிறந்த மேனியாக