கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 22, 2012

30 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்

 

 எனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச் சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான் எப்போதும் குறை சொல்லியது கிடையாது. ஆனால், இரண்டாவதாகச் சொன்னேனே அதுதான் எப்போதும் எனது சாபங்களை அள்ளித் தின்று வளர்ந்து நிற்கும் பொல்லாத மனிதக் கண்டுபிடிப்பு! சாலைகளின் சந்திப்புகள் நிகழுகின்ற இடங்களில் மனிதன் கட்டுப்பாடுகள் வரைந்து வைக்க, அது மூன்று நிறங்களோடு நெடுக வளர்ந்து நிற்கிறது. அது நில் என்றால் நாங்கள் நிற்க வேண்டுமாம்; போ என்றால்


மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்

 

 நாகூராண்டவர் மரத்துக்குக் குஞ்சிராமன் தண்டல் விளக்கு வைத்து விட்டுப் போனவுடன், அதற்காகவே காத்திருந்தது போல்.அங்கே அது வரைக்கும் கூடி கதையடித்துக் கொண்டிருந்த வாலிபப் பசங்களில் ஐந்தாறு பேர்கள் அங்கிருந்து ஒவ்வொருத்தராக நழுவிக் கொண்டிருந்தனர்.வாலிபப் பசங்களுக்கு அந்த நாகூராண்டவர் கோயில் மரத்தடிதான், ‘ரவ்வானா’ கதைங்களக் கலாய்க்கிற இடம். தோட்டத்துல இருக்குற ஒம்போது லயத்துக்கும் போறவர்ற பாதை, நாகூராண்டவர் மரம் இருக்கிற முச்சந்தியிலர்ந்துதான் ஆரமிக்கும். மரத்துக்கு எதுத்தாப்புல கூத்துக் கொட்டாயி, அது பக்கத்துலயே குஞ்சிராமன் தண்டல் கடை. மேக்கே போனா


அறுவை சிகிச்சை

 

 மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜம்பு பழத்தின் வடிவத்திலும் பலா பழத்தின் உருவத்திலும் திணறி தொங்கியிருந்தன மார்புகள். ஏற்கனவே போதையில் தேங்கியிருந்த கண்களில் காமமும் வழியத் தொடங்கியிருந்தது. மார்புகளை இருகைகளாலும் பற்றியவாறே உதடுகளில் அழுத்தமாய் முத்தம் பதிக்கத் தொடங்கினான். கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்தான் இளன்.கைத்தொலைபேசியில் அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது. கண்ணை மூடிக் கொண்டே மெத்தை முழுவதும் கைகளால்


வனவாசம் போகும் இராமர்கள்

 

 “ஜோதி!” குசுனியிலிருந்து அம்மா கத்துவது கேட்டது. “சே! இவங்களுக்கு வேற வேலயே இல்ல”. எனக் குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. காதில் எதுவும் விழாதது போல ரூம் கதவைச் சாத்தி விட்டுப் படுக்கையில் விழுந்தேன். இந்த அம்மாவுக்குச் சமீப காலமாய் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதுவும் அவர் வேலைக் குச் செல் வதை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்ததிலிருந்துதான் ரொம்பவும் மோசம். “ஜோதி, காலையிலேயே எழுந் திருச்சிரு. ஜோதி, இன்னிக்கு நீ சமை. ஜோதி, அந்தத் துணியெல்லாம்


முன் எப்போதோ வாழ்ந்திருந்த அரசமரங்களும் ந(க)ரமாகிப்போன மண்ணும்!

 

 இன்னிக்குன்னு வானத்துல ஏராளமா நட்சத்திரக் கூட்டம். அந்தக் கோடிக்கும், இன்னொரு கோடிக்கும் கண்ணாமூச்சி ஆடுற நட்சத்திரங்க அதுக்கு அப்புறம் காணாமப் போய்க்கிட்டு இருக்குதுங்க. ஒரு நட்சத்திரம் ஓடி ஒளிஞ்ச எடத்துலருந்து நூறு நட்சத்திரங்க மொளைக்குது. எங்க பாத்தாலும் என்னமோ மல்லிகைப் பூவத் தூவி விட்டது மாதிரி ஆகாயம் முழுசும் நட்சத்திரங்களே பரவிக் கெடந்திச்சு. இப்படி இதுங்களே எடத்தப் புடிச்சிகிட்டு இருந்தா, நெலா வந்து அங்க எப்படி உட்கார முடியும். தூரத்துல, நாய்ங்க விடாமக் கொலச்சிக்கிட்டு இருக்குதுங்க. வெரட்டரதும்,


மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

 

 இரண்டாம் சுருள்: பதினெட்டாம் வயது. கடந்த ஆறு வருட கடுமையான முயற்சிக்குப் பின் அம்மாவால் எழுதவும் சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தனது வாசிப்பை அம்புலி மாமாவில் ஆரம்பித்து ராணிமுத்து, கல்கண்டில் நிறுத்திக் கொண்டவர். எப்படி முயன்றும் ‘ஹலோ’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தாண்டி முன்னேற அவரால் முடியாமற் போயிற்று. “போனால் போகட்டும், சனியன். மலாய் சொல்லிக் கொடு” என்று சொல்லி அம்மொழியில் தன் பெயரை மட்டும் எழுதக் கற்று; பேசுவதோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தோனிசியர்கள் தோட்டத்திற்குள்


முகவரியில்லா முகம்

 

 முந்தானைத் தலைப்பைத் தூக்கி முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சியாமா. சூரியன் உச்சத்துக்கு வந்து உச்ச வெப்பத்தை உமிழ்கிறானோ என்னவோ… வீட்டுக்குள்ளேயே அப்படியொரு புழுக்கம். “ஃபூ… கெழமைல சனி ஞாயிறு வரவே படாது… வேல…வேல… முடிவில்லாத வேல…” தனக்குத் தானே புறுபுறுத்தபடி அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். குளித்தால் நன்றாக இருக்கும். குளித்துத் தான் ஆக வேண்டும். சமையல் வேலைகளோடு போராடிய உடலில், உடையில் அழுக்கை அகற்றியாக வேண்டுமே… கணவரும் பிள்ளைகளும் உடுத்தி விட்டுக் களைந்த


குறுணைக் கஞ்சி!

 

 நண்பகல் தாண்டிய நேரம். குடிசை வாசலில் கால்களைப் பரக்க நீட்டியவாறு அமர்ந்திருந்தாள் குடிசைக் குரியவளான குள்ளம்மா பாட்டி. அவளின் மடியில் சாய்ந்தபடி பால்போத்தலில் ஊற்றிய வரத்தேநீரைச் சப்பிக் கொண்டிருந்தாள் கடைக்குட்டி யான மூன்று வயதுப் பேத்தி. பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து மதிய உணவாகக் குறுணைக் கஞ்சியைப் பிஞ்சு விரல்களால் குழப்பிக் கொண்டிருந்தான் ஐந்து வயது பேரன். “அம்மா! நம்மப் போல ஏழை பாளைகளுக்கு அரிசிச் சோறுதான் உசிரைப் பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கு. இப்ப அதுக்கும் பஞ்சம் வந்துடுச்சாம்.


கண்டடைதல்

 

 இளநீல நிறத்தில் படிகம் போல தெளிந்த நீர், மர்மங்கள் ஏதுமற்று ஆழ்ந்த மோனத்தில் இருப்பதாகத் தான் இருந்தது. குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்திருந்தனர். ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவரின் மீது நீரின் விளிம்பு அவ்வப்போது பாம்பு நெளிவதான தோற்றம் கொண்டது. மேலிருந்து கதிர்களாய் கசிந்த சூரியன் அலைகளுடன் விளையாடி, ஒளியும் நிழலும் கலந்த ஜால விநோதங்களாய் பரவசப்படுத்தியது. ஒரு மலாய் குழந்தை தன்னுடைய கோதுமைக் கரங்களால் எட்டிப் பிரதிபலித்த ஒளிக் கோலத்தைத் தொட முயன்ற கணத்தில் கூட அடுத்த


சிறுவியாபாரி குடும்பத்திலிருந்து ஒருவன்

 

 ஒரே நேரத்தில் சிறுவியாபாரிகளையும் வசதி படைத்த குடும்பங்களையும் பற்றிப் பேசுவதே அபத்தமானது. இங்கு நாம் மிகவும் மேலோட்டமாகப் பேசுவதைப் போலிருக்கிறது இல்லையா?. சரி, இப்படி வைத்துக் கொள்வோம். தலைமுறை தலைமுறையாக சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். எந்த முடியாட்சி யின் போது இந்தக் குடும்பம் சிறு வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருக்கும்? சொல்லவே முடியாது. எந்தெந்த சில்லறைச் சாமான்களை விற்றிருப்பார்கள்? இதையும் சொல்லிட முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. நான்