கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 21, 2012

3 கதைகள் கிடைத்துள்ளன.

தெருநாயும் போலிஸ்நாயும்

 

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே முடங்கி கிடைக்கையில், பாவம்……. தெருநாயால் என்ன செய்ய இயலும்? வேலிகாத்தான் புதர்கள் மட்டுமே அங்காங்கே பசுமையாய் காட்சி அளித்தது. அப்படியான ஒரு புதரின் அடியில் சிறிய குழியைத் தோண்டி தனது தற்காலிக வீட்டின் குளிர்ச்சியில் அந்த நாய் பகல் முழுவதும் உறங்கி கிடந்தது. ஆனால் புதிய ரயில் தண்டவாளங்களைப் போடுவதற்கு குழந்தைக் குட்டிகளுடன் ஆண்கள், பெண்கள்


வதம்

 

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த சிஎன்சி மிஷின் லேசான அதிர்வோடு நின்றுவிட, பதற்றத்தோடு ஓடி வந்தான் கல்யாணசுந்தரம். இயந்திரத்தின் மேனி பெரும் கொதிப்பெடுத்துச் சூடாய் இருந்தது. உற்பத்தியாகி வெளித் தள்ளப் பட்டிருந்த குவியலைப் பார்த்தான். பேனல் போர்டுக்கு ஓடினான். ஏகத்துக்கும் சிவப்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. “அடடா. என்னமோ ஆயிடுச்சு மிஷினுக்கு. என்னான்னு தெரியலையே” என்று பயத்தோடும், பதற்றத்தோடும் அங்கும் இங்கும்


மலைச்சாமியோட மயான காண்டம்

 

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு விட்டு ஒன்னு பதமா எரிஞ்சிக்கிட்டிருக்க ஒத்த கொட்டி மத்தர‌ம் வெறகு, எருவாட்டியோட‌ வெறிச்சோடி கெடந்திச்சு. யாருக்காண்டியோ! அங்கனயே கரண்ட்டு அடுப்புலயும் பொணம் பொசுக்குறாங்க. ஒரே நேரத்தில‌ ரெண்டு அடுப்புல பொணம் எரிக்கலாம். ஒத்த அடுப்புல பொணம் எரிஞ்சி, கூண்டு வழியாகப் பொகையை கக்க‌, எதிர்த்தக்கூடி இருந்த ரேடியா செட்ல ‘சமரசம் உலாவும் இடமே’ பாட்டு படிச்சிக்கிட்டிருந்திச்சு.