கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 18, 2012

6 கதைகள் கிடைத்துள்ளன.

அங்காடித் தெரு அனுபவங்கள்

 

 மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை. சுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free


ஆராவமுதனும் அவசர விளக்கும்

 

 அந்தக்காலத்தில் அலாவுதீனுக்கு ஓர் அற்புதவிளக்கு கிடைச்சமாதிரி நம் ஆராவமுதனுக்கும் அவசரவிளக்கு ஒன்று கிடைத்தது. ஆராவமுதன் தனது ஆபீஸுக்கு வந்து ஸ்டைலாக இங்கிலீஷ் பேசிய ஒரு ‘டை’மனிதனின் பேச்சுக்கு மயங்கி ‘ஐயோஐயையோ’ ( IOIIO ) பேங்கின் கடனட்டைக்காக அப்ளை செய்தான். அந்த கடன்கார அட்டையும் ( அட கிரெடிட்கார்டுங்கோ) ஒரே வாரத்தில் ஆராவமுதனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. தலைகால் புரியாமல் அந்த கடன்கார அட்டையை முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்தான் ஆராவமுதன். தன் மனைவி வடிவாம்பாள் எனும் வடிவுடன்


தூமகேது

 

 தூமகேது பகுதி ஒன்று. கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது. அரைத்தூக்கத்தில் தனது படுக்கையைக் கையால் தடவிய இந்திராணி அருகில் தத்தா இல்லாததை உணர்ந்தாள். விடை அவள் அறிந்தது தான். ‘’ ஹூம்… மீண்டும் அந்த மாயக்காரியுடன் கொஞ்சி விளையாட மொட்டை மாடிக்குப் போய்விட்டாரா..? போனவர் கதவைச்சாத்திக்கிட்டு போகனும்னு தோணலையே .. ‘’ அலுத்துக்கொண்டாள் இந்திராணி. தன் கணவன் மேல் எரிச்சலான புகாரை அவள் வாய்


என்னை விட்டுப்போகாதே

 

 ‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’ ‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என் விருப்பத்திலா பிரிகிறேன்..? விதி. நம்மைப் பிரிக்கிறது.’’ ‘’ விதி என்றெல்லாம் பழிபோட்டு நம் பிரிவை நியாயப்படுத்தாதே. கொஞ்சம் யோசித்துப் பார். நாம் எத்தனைகாலம் ஒன்றாகவே ஒட்டி ஒற்றுமையுடன் இருந்தோம்.. ஹூம்.. ‘’ ‘’ புரியுது. நீ நான் பூவாயிருந்த பொழுதில் இருந்தே என்னுடன் ஒட்டி உறவாடி என் எல்லா கஷ்டத்திலும் காற்று மழையிலும் ஒன்னா இருந்தே..


பாவத்தை அனுபவிப்பாய்

 

 பகுதி – 1 ராமநாதனும் தேவதாஸும் நண்பர்கள். இருவருமே ஏழை என்றாலும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்துவந்தார்கள்.ஏழ்மையைப் பங்கிட்டுக்கொண்டு கண்ணீரைப்பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இரு குடும்பங்களும் வாழ்ந்துவந்தாலும் இருவரது வியாபாரமுமே மிக மோசமாகப் படுத்துவிட்டதால் அடுத்த வேளைச் சோற்றுக்கு வழி என்ன என்பதை அறியாமல் தவித்த வேளையில் அஹமத் நகரில் துணி ஆலை ஒன்றில் கூலிப்பணிக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கும் இங்கும் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு இருவரும் ரயிலேறினார்கள். மனைவிகள் முடிந்த வேலையைச் செய்து சில நாட்கள்


பிளாக் அண்ட் ஒயிட் அம்மா

 

 அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை. ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இது?அவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள். ”ஏய் அம்மா..!அம்மா…!”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள். ஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை