Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 10, 2012

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஜிம்மி

 

 எங்கள் லோக​நா​தன் காலனி பயப்​ப​டும் ஒரே விஷ​யம் ஜிம்​மி​தான்.​ வங்​கி​யில் வேலை ​பார்க்​கும் சோமு​வின் வீட்டு நாய்​தான் இந்த ஜிம்மி.​ மருத்​து​வ​ம​னையை ஒட்​டி​யுள்ள வீட்​டில்​தான் சோமு குடி​யி​ருந்​தான்.​ மருத்​து​வ​ம​னைக்கு தினம்​தோ​றும் பத்து நோயா​ளி​க​ளை​யா​வது கூடு​த​லாக அனுப்பி வைப்​பதை ஜிம்மி ஒரு சேவை​யா​கவே பொறுப்​பு​டன் செய்து வந்​தது.​ இத்​த​னைக்​கும் ஜிம்மி நாட்​டு​நாய்​தான்.​ ஆனா​லும் சோமு வீட்​டார் அதைக் கொஞ்​சும்​போது பார்க்க வேண்​டுமே,​​ உல​கத்​தி​லேயே உயர்ந்த ஜாதி நாய்​களை வைத்​தி​ருப்​போர் கூட இப்​ப​டிக் கொஞ்​ச​மாட்​டார்​கள்.​ கால​னி​யின் மத்​தி​யில் உள்ள தெரு​வா​கப்


தாத்தா

 

 இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும். வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது,கேட்டது,பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை அமுல்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாநில அரசுகளின் நிலையில்தான் நானுமிருந்தேன். அப்பா, சீக்கிரமா வரீங்களா இல்லியா,என கூப்பாடு போட்ட கையோடு, இந்த அப்பா ரொம்ப மோசம், வரவர ரொம்பத்தான் பிகு பண்றாரு என்ற


நேற்று என்பது வெற்று வார்த்தையல்ல

 

 ’அறிவிக்கப்படாத’ நெருக்கடிநிலைப் பற்றி எதிர்கட்சிகள் புலம்பித்தீர்க்கும் காலமிது. ஆனால் நான் சொல்லப்போகும் காலகட்டமோ ’அறிவிக்கப்பட்ட’ நெருக்கடிநிலை கோலோச்சிய காலம். சட்டப்பூர்வமாகவே, இந்திய அரசியலமைப்பு விதி 352-ன் படி நெருக்கடிநிலையை பிரதமர் இந்திராகாந்தி, குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் மூலம் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி அறிவித்தார்.இது 21 மாதங்கள் அமுலில் இருந்தது, அதாவது 1977, மார்ச், 21-ஆம் தேதி வரை. எனக்கு அப்போது பதினான்கு வயது. நாடுமுழுவதும் நெருக்கடி நிலை தீவிரமாக


நெருடல்

 

 வெளிக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மின்சாரம் இல்லாதது சங்கருக்கு நினைவுக்கு வந்தது. வெளியே வந்துபார்த்தால், சேகர் தனது மகனுடன் வந்திருந்தான். அவர்கள் வந்த கார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. பார்த்து எத்தனை ஆண்டுகளாகி விட்டது. ’’வாங்க..வாங்க. சரத் நீயும் வாப்பா’’ என உள்ளே அழைத்தான். வீட்டில் யாருமில்லை.ஊருக்குப் போயிருந்தனர். ”ஏது இவ்வளவு தூரம், உடல்நிலை எல்லாம் சுகம்தானே, வீட்டில் உனது துணைவியார், மகள் அனைவரும் நலம்தானே.”.. ”அனைவரும் நலம். எனது உடல்நிலையும் நன்றாக உள்ளது.” ’’நீ


வாசிப்பே சுவாசமாய்!

 

 தாம்பரத்தில் செங்கல்பட்டுக்கான மின்தொடர் வண்டியில் ஏறி தோதான இடத்தில் உட்கார்ந்தவுடன் சிவராமன் முதல் வேலையாக புத்தகத்தைப் பிரித்தவன், கொளவா ஏரியில் குளித்து கரையேறும் சில்லென்ற காற்று முகத்தில் மோதிய பிறகுதான் மூடிவைத்தான். சிவராமனின் தினசரி பழக்கமிது. தாம்பரத்தில் துவங்கும் அவனது வாசிப்பு கொளவா ஏரியில் தற்காலிகமாக முடிந்து, செங்கல்பட்டில் நரசிம்மவிலாஸ் பேருந்திலேறி தான் பணியாற்றும் அலுவலகம் உள்ள சாலவாக்கத்திற்கு பயணசீட்டை வாக்கியவுடன் மறுபடியும் துவங்கிவிடும். சாலவாக்கத்தில் இறங்கி தனது அலுவலகம் செல்லும் போதும் படித்துக் கொண்டே செல்வான்.


இரயில்வே கேட்

 

 இரயில்வே கேட் காலப்போக்கில் எங்கள் ஊருக்கு பெரிய சாபக்கேடாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட தொல்லைகள் சொல்லிமாளாது. மனிதர்களும், கால்நடைகளும் ரயிலில் மோதி சாவதை அது தடுத்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால், ஆளில்லாத லெவல்கிராஸிங்கை மாற்றி, ரயில்விபத்தை தடுக்க இங்கே கேட் போடப்படவேண்டும் என்று எழுபது ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக போராட்டம் நடத்தப்பட்டதின் பின்ணணியில்தான் இந்த கேட்டே போடப்பட்டது. எங்கள் காலத்திலோ அதுவே அன்றாட வாழ்வை பாதிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அந்த வழியாக மோட்டார்சைக்கிள், பேருந்து, மாட்டுவண்டி