கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 1, 2012

43 கதைகள் கிடைத்துள்ளன.

என் பெயர் வசந்தம்

 

 வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு ‘வசந்தம்’ என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார். வாய் நிறைய ‘வசந்தம்! வசந்தம்!’ என்று என் அம்மா அழைக்க, அதைக் கேட்டு மகிழும் பேறினை நான் ஒருவயதிலேயே இழந்துவிட்டேன். வசந்தம்! எத்தனை அழகான பெயர்! அம்மாவிற்கு இந்தப்பெயர் வைக்க எப்படித்தோன்றியது? பிற்காலத்தில் தன் பெண் இந்தப்பெயரை மிகவும் நேசிப்பாள் என்று அம்மாவுக்கு அப்போதே தெரிந்திருக்குமோ? எத்தனைபேருக்கு அவர்களின் பெயர்கள் பிடிக்கும்? என்னுடன் படித்த பல பெண்களுக்கு


காலத்தை தைப்பவனின் கிழிசல்

 

 உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து ஏகாதசி நாளில் சேவிக்க பண்டரிபுராவுக்கு யாத்திரை போகும் பண்டை வழக்கம் தற்காலத்திற்கேற்றாற்போல் மாறுதலடைந்திருக்கும் விதம்- காசுபணம் கைகுளிரச் செழித்து காலநேரம் கூடித்திரளுமானால், சப்பாத்தியும் தக்காளித் தொக்கும் நிரம்பியப் பையோடு ஷோலாப்பூருக்கு ரயிலேறி அங்கிருந்து இரண்டுமணித்தியால பஸ் பிரயாணத்தில் பண்டரிபுராவுக்கு போய், சத்திரங்களில் தங்கி, மராட்டியத்திலிருந்து கோவிலுக்கு வரும் தங்கள் தொப்புள்கொடி சொந்தங்களை அளவளாவித் திரும்புதல்- கை


சொல்லவே முடியாத கதைகளின் கதை

 

 என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு. இதுல அடுத்தாளு கதையைக் கேக்க யாருக்கு ஏலும்…? அதனால தான் யாரும் யார்க்கிட்டயும் எதையும் சொல்றதில்ல. உப்பரிகை மஞ்சத்துல ஒய்யாரமா படுத்திருந்தது, அண்டரண்ட பட்சிக்கிட்ட அளவளாவிக் கிடந்தது, அகிலும் சந்தனமும் பூசி அரண்மனைத் தடாகத்துல நீராடினது, தாதியும் சேடியும் தங்கக் கிண்ணத்துல சோறூட்டினதுன்னு பெருமையா சொல்றதுக்கு நாம என்ன ராசகுமாரியா? மந்திரிமகளா…? கோடுகொடுமையா கெடக்குற பொழப்புல


விரகமல்ல தனிமை

 

 அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி பிதுங்கிருச்சு. அன்னிக்கு ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளின லாட்ஜ்ல ரூம் கிடைச்சது. பக்கத்து ரூம்ல, உடம்பு முழுக்க மாட்டிக்கிட்டு ஆட்டுற மாதிரி வளையல் கிணுகிணுப்பு. ஓயாத சிணுங்கல். விரசமான பேச்சு. கெக்கக்கேன்னு


வஞ்சம்

 

 மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது. காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த தாகம் ஈரம் பட்டதும் இளஞ்சூடா கரையுது காத்தில். சாரையும் நாகமும் விரியனும் மிலுமிலுக்கும் வயக்காடுன்னு தாத்தாவும் தருமனும் சொன்னது நெசந்தான். சீத்துசீத்துனு சீறிக்கிட்டு எலி விரட்டி அலையும் சத்தம். ஆள் பொழக்காட்டம் அருகின


ஆறுவதற்குள் காபியைக் குடி

 

 சுண்டக்கா கால்பணம் சுமைக்கூலி முக்காப்பணம். பத்துரூபாய் கடன் வாங்குவதற்குள் வெத்தாளாய் ஆக்கிவிடுவார்கள் வங்கிகளில். அதற்கும் அசையும் சொத்து அசையாச் சொத்து என்ன இருக்கிறது ஜாமீனுக்கென்று குடாய்ந்துவிடுவார்கள். அய்யா துரைமாரே அப்படி எந்த சொத்துபத்தும் இல்லாததால்தான் இப்படி லோனுக்கு லோல்படுகிறேன் என்றால், வெடிக்காத துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் செக்யூரிட்டி கார்டுக்கு வேலையும் வீரமும் ஒருங்கே வந்துவிடும். நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுத்தான் அவர் மறுவேலை பார்ப்பார். வங்கியில் நடக்கவிருந்த பெருங்கொள்ளையைத் தடுத்த பெருமிதத்தோடு அவர்


சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும்

 

 தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும் தப்பி கள்ளத்தோணி ஏறிவந்த அகதியின் இதயத்துடிப்பென படபட ஓசை. தட்டுமோசையின் அதிர்வலைகள் ஊடாகவே மனவோட்டத்தை இலக்கிற்கு கடத்தும் பதற்றம். வான்தாவ றெக்கைகளை விசிறியாட்டும் பெயரறியா பறவையொலி மசங்கல் நினைவில் பொடக்கென விழுகிறது விதியைப் போல. திருட்டுப் பருக்கை பொறுக்க விரையும் காகத்தின் கரைவு போலுமுள்ளது. கீல்களும் நாதாங்கியும் பெரிதாய் அதிர, முனகவும் தெம்பற்ற கிழக்கதவு, வலிதாளாது


புரியும் சரிதம்

 

 போக்குவரத்து விதிகள் ஒழுங்கு செய்யப்படாத நகரின் பிரதான சாலையொன்றில் தேர்க்கால் ஏறிச்செத்த கன்றுக்கு நியாயம் கேட்டு கோட்டைகள்தோறும் பசுக்களால் மறிபட்டது. கழுத்துமணியின் கிங்கிணியை மீறி ஹோவென எழும்பியது ஆராய்ச்சி மணியொலி. பஞ்சபூதங்களின் பாகமெங்கும் கலந்து நிரவிய மணியோசை குறும்பியால் காதடையுண்டிருந்த மன்னர்களுக்கு மரணத்தின் பேரழைப்பாய் கேட்க, நீதிவழுவா நேர்மையாளன் எனும் கீர்த்திக்கு இரையாகி தேரேற்றிக் கொன்றனர் மகன்களை. இளவரசர் சாவுகளில் திருப்திகொண்ட பசுவும் கன்றுமாகிய பெருங்கூட்டம் மன்னர்களை எதிர்த்தடக்கிய மகுடம் தரித்து வேலியையும் சேர்த்தே மேய்ந்து வயிறு


பொங்காரம்

 

 நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும். இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம் லச்சணமா


மார்க்ஸை மருட்டிய ரயில்

 

 ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான் எரிக்கும்போது நீங்கள் தேவையற்ற பதட்டத்திற்கு ஆளாக நேரிடும். அதோ கேட்கும் அந்த ஹாரன் சத்தம் ஒரு ரயிலுக்குரியதான கம்பீரத்தோடும் நளினத்தோடும் ஒலிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். காசில்லாத தாயிடம் கம்மர்கட் கேட்டு அடிவாங்கிய சிறுபிள்ளை விசித்து அழுவதுபோல் கூவிக்கொண்டு வருகிறது அந்த ரயில். அந்த அழுகுரலும் கூட மனதை நெகிழ்த்தி இரக்கத்தைத் தூண்டுவதாக இல்லாமல் எரிச்சலூட்டுவதாயும்