கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

ஞாபகங்களை உண்ணும் மீன்கள்

 

 நீ ஆற்றில் குளித்துக் கரையேறிய பகல் பொழுதை என்னால் மறக்க முடியாது செண்பகா. உனது நீள் கூந்தலும் வெளிர் நிறத்தில் மினுங்கும் சருமமும் விஷம் தடவிய குறு வாளைப் போல என்னைப் பய முறுத்துகிறது செண்பகா. உன்னுடன் ஒருமுறை கூடிவிட்டால் போதும் செண்பகா. இனி நெஞ்சை நிமிர்த்தி ஈட்டிகாணச் செல்வேன். மரண பயம் எனக்கில்லை. இந்த ஜமீனுக்கு என்னைவிடத் தைரியமான பட்டயக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்குப் பின் ஒருவராக வந்துகொண்டே இருப்பார்கள். வாளேந்துவார்கள். குதிரையில் காடு, கரை, வனம்,


திரும்பிச் செல்லும் வழி

 

 பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண முடியாதபடி இருள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தது. பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. கண்கள் இருட்டுக்குப் பழகியதும் ஆளுயரத்துக்கு மேலிருந்த திறந்த சாளரத்திலிருந்து புகை போல் மங்கிய வெளிச்சம் புலப்பட்டது. எங்கும் தெளிவான அமைதி நிலவியது. அவருடைய மகன் நகரத்தின் ஓரத்தில் குடியிருக்கும்


நடனம்

 

 வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை உடலுக்கு அன்னியமாக இருந்தது. உடம்பு படுக்கையிலிருந்து வழுக்கிக்கொண்டு போய்விடும் என்று பயந்தான். நேற்றைய முன் தினம் யூட்டா மாநிலத்தில் ஏதோவொரு நகரத்தில் ஒரு நெடுஞ் சாலைப் பாலத்திற்கு அடியில் குளிர் உடலைப் புரட்டியெடுக்கப் படுத்திருந்தான். அவனுடைய பத்தாண்டுக் கால அலைச்சலில் பல கந்தல் துணிகளைச் சேகரித்துவைத்திருந்தான். அத்தனையும் உடல் மேல் போர்த்தி அதற்கும் மேலே ஒரு


ஒரு கோடி டொலர்கள்

 

 தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி: அனைத்துலகச் சுரங்க ஆபத்துதவிக் குழுவினர் இன்றைக்குச் சுலபத் தீவில் தொழிலாளிகள் சிலர் இன்னும் இருக்கும் இடத்தை அடையப் பனிரெண்டு மீட்டர்கள் இருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கையுடன் துளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை மீட்கப்பட்ட உடல்களில் இதுவரை அடையாளம் அறிய இயலாத வெளிநாட்டவர் ஒருவர், சிங்கப்பூரர் என்பது அடையாள அட்டை மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஜூன் 12 சனிக்கிழமை 2010 காலை மணி


செந்தமிழ் நகர்

 

 வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத்தன்மைகளின் விழுக்காடு குறைவாகவே இருந்தது. பெரிய அதிர்ச்சிகள் எவையுமில்லையென்றாலும் ஒருவிதமான பதற்றமும் வியப்பும் சேர்ந்த கலவை நெஞ்சில் கொப்பளித்தது. மனத்தில் அதுநாள் வரை வளர்த்துக்கொண்ட கற்பனைக்கு வடிவம் கொடுத்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெல்ல நடந்து பெயர்ப் பலகையைத் தொட்டுப்பார்த்து அப்படியேதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான்கடிக்கு இரண்டடி அளவிலிருந்த பலகையில் அக்ரிலிக்

Sirukathaigal

FREE
VIEW