கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 18, 2012

6 கதைகள் கிடைத்துள்ளன.

சாலையோரத்து மரம்

 

 அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும் சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு. இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர்


பள்ளிப்படை

 

 அரவிந்தனோ அல்லது அவன் நண்பன் மணியோ வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்கள் இல்லை. இருவரும் கணினி பொறியாளர்கள்… காதில் குண்டலம் போல எந்நேரமும் செல் ஸ்பீக்கரை மாட்டிக் கொண்டு , ,நுனி நாக்கில் ஆங்கிலத்தை மென்று மென்று துப்பி, பெண் சிநேகிதிகளுடன் ஊர் சுற்றி, சிஸ்லர், பிட்சா, பர்கர், கேஎஃப்சீ பக்கெட் சிக்கன், போர்க் என்று எல்லா அசைவ வகையறாக்களையும்,தின்றுத் தின்று, பியர், குடிச்சி இளவயசிலேயே தொப்பை போட்டுவிட்ட, சென்னை வாழ், கணினியைக் கையாளும், இளைஞர்கள்..


ஒப்பனை

 

 சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. பாவப்பட்ட ஜென்மம்.. அவள் புருஷன் ஒரு மொடாக்குடியன். தினந்தினம் அவர்களுக்குள் ஓயாமல் சண்டை நடக்கும். உச்சக் கட்டத்தில் தம்திம் என்று அடி விழும். கொடுப்பது யாராகவும் இருக்கலாம்.. இவள் கை ஓங்கியிருந்தால் அப்புறம் மூன்று நாட்களுக்கு அவன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். அறுத்துக் கொண்டு ஓடிய மாடு எப்போது பட்டி


பிரளயகாலம்

 

 ”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல்


சுணக்கம்

 

 வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும். ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறார்,அறையில் ஃபேன் ஓடிக்கிட்டிருக்கு. “ வாய்யா! எவர் லேட் ஏகாம்பரம்.”—இது ஏ4 ன் நக்கல். “டிராஃபிக்ஜாம்யா.” “இது வழக்கமா சொல்றது. எதையாவது புதுசா சொல்லப்பா.நாங்க 8-30க்கே ஆஜர் தெரியுமில்லே?.” “ அதிசயம்தான் சரீ

Sirukathaigal

FREE
VIEW