கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 17, 2012

31 கதைகள் கிடைத்துள்ளன.

ஜீன்கள்

 

 காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் டாக்டர்.இளமாறன்.?. அவங்கப்பா தமிழ் வாத்தியா இருந்திருக்கணும்..இளமாறன் தான் .. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனெட்டிக் ரிசர்ச் அண்டு அனலைஸஸ் என்கிற எங்கள் துறையின் தலைவர்.. .நிறைய மூளை,நிறைய படிப்ஸ்.—மாலிக்யூலர் பயாலஜியில் போஸ்ட் கிராஜுவேட், ப்ளஸ் கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில், ஜீன் ம்யூட்டேஷனில் நான்கு வருட ஆராய்ச்சி டாக்டரேட். அதைவிட நிறைய முன்கோபம், கொஞ்சம்


குப்பை அல்லது ஊர் கூடி…

 

 குப்பை…குப்பை..,.தெருவோரங்களில்,காலிமனைகளில்,முச்சந்திகளில், எங்கும்..எங்கும் குப்பைகள்.. நம்ம மக்களுக்கும் பொது நல சிந்தனைகளோ,போராட்டகுணங்களோ அறவே கிடையாது .. குப்பைகளை நடுத்– தெருவிலா கொண்டு வந்துக் கொட்டுவார்கள்?கெட்டுப் போன உணவுகள்,அழுகிப்போன காய்கறிகளும், ,பழ்ங்களும், ஊசிப்போன பிரியாணிப் பொட்டலங்கள்,, எலும்புத்துண்டுகள்,செத்த எலி,பிளாஸ்டிக் குப்பைகள்,பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட குழந்தைகளின் மலங்கள்,இன்னும் சொல்லக் கூசும் எல்லாக் கழிவுகளும் வீதியோரங்களில். கொட்டப்படுகின்றன. தெருவே நாறுகிறது. நாலு தூறல் போட்டுவிட்டதோ குப்பென்று கிளம்பும் கவிச்சை வாடையில் உவ்வே ! குடலைப் புரட்டும். இதுதான் எட்டாம் வார்டில் வசிக்கும் மக்களின்


பேசாதவன்

 

 அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான்


என்ன சொல்லி என்ன செய்ய…!

 

 மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது. “ஒரு சாண் வயித்த நெப்புறதுக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு?” என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். வெறும் சோறும் பச்சை மிளகாயும், வெறும் சோறும் வெங்காயமும் என்றும் நீரில் கலந்த, நீரில் கரைத்த சோறு என்றும் குடிபடைகள் பிழிந்து பிழிந்து உண்டு ஜீவிதம் கழிப்பதை உணர்ந்துதான் இருக்கிறோம். இதற்கு ஒரு படி மேலே


பிசிறு

 

 தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள். பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு பறந்து

Sirukathaigal

FREE
VIEW