கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2012
‘காலம்’ எனும் மலைப்பாம்பு
அவனுக்கு மேலாளர் மீதான கோபம் பீறிட்டு எழுந்தது. நேற்று அவர் பேசியது இவன் உடலில் அனல்கொட்டிவிட்டது போல் தகித்துக்கொண்டிருந்தது. அவரைத் தாக்கி தாடை சிதறும் அளவுக்கு நையப்-புடைத்துவிடலாம் என்றெல்லாம் எண்ணிப்பார்த்தான். சற்று பயமும்,அடக்கமும் சேர்ந்துகொண்டதால் மனதினுள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவரை கிழித்து திருப்தி அடைந்துகொண்டான். அன்றைய தின சாயங்காலப்-பொழுது.காற்றின் உரசல்களில் இலைகள் உதிர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கும் நேரம். குளிர்ந்த இரவுக்குப் பழகிவிட்ட அனைத்து பொருட்களும் தங்களை அந்த சூழலுக்குத் தயார்படுத்திக்-கொண்டிருக்கும். நரம்புக்-கிளைகளினூடே பரவிய ஒளி சிறிது
பாவமா? பாடமா?
அந்த அதிபர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் திடுக்கிட்டு விட்டேன். “இருங்கோ, நீங்க தானே மதுமிதாவுடைய அப்பா?” அந்தக் குரல் எனக்குப் பரிச்சயமானது. பத்து வருடங்களிற்கு முன்பு என் காதுக்குள் சிணுங்கலாய், செல்லமாய்த், தேனாய் இனித்துக்கொண்டு என் உள்ளத்தை நனைத்த அந்தக் குரலை, அந்தக் கண்களை, அந்தப் பார்வையை, சட்டென்று நான் அடையாளம் கண்டுகொண்டேன். என் லாவண்யா. பிரபல பாடசாலையொன்றில் எனது மகள் மதுமிதாவினுடைய தரம் 06 க்கான அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தேன். அது தொடர்பாக அதிபருடன் கதைப்பதற்குச் சென்றிருந்தேன். ஆனால்