கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 9, 2012

19 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்

 

 இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எனக்கும்தாம்பா கண்ணு. ஆனா எனக்கு இப்பத்தான் புதுசா பிறந்தாப்பில இருக்கு. இன்னைக்கு முதல் வேலையா காவேரிக்குப் போய் நல்லா குளிக்க போறேன். சரி போய்ட்டு வா. நா காலைல இடியாப்பமும் பாயாவும் செஞ்சு வைக்கிறேன். எங்கெங்கையோ போய் எதையோ தேடிக்கிட்டு இருந்த எனக்கு எங்க அப்பத்தா உருவத்தில கடவுள் காட்சி கொடுத்தாரு. என்ன உங்களுக்கு என் பேரு,


நன்றி சொல்லலாமா?

 

 “அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.” “இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல மூடுல இருப்பாருன்னு தெரியாது. அப்படி ஏதாவது சந்தோஷமா இருந்தாருன்னு வச்சுக்க அப்ப நைசா பேசி வாங்கித்தரேன் புரியுதா?” “என்ன அம்மாவும் பையனும் காலையிலேயே கூடிப்- பேசிக்கிட்டுருக்கீங்க.” “அது ஒன்னுமில்லீங்க. அவனுக்கு கணக்கில சந்தேகம் அடிக்கடி வருதாம். அதான் தினமும் ஸ்கூல் விட்டு வந்தவுடனே சொல்லித்தரயான்னு கேட்டான்.” என்று உண்மையை சற்று மறைத்துப் பேசினாள் மீனா. “ம்


ஒரு வாய்ப்பு வேண்டும்

 

 அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?. ஆமா காலைல எழுந்திருச்ச உடனே அண்ணன் செய்யற பந்தா தாங்க முடியல. ஏய் கவி பேசாம வாய மூடு. அவன் காதில விழுந்தா உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவான். எங்க கணேஷ் காணும். அவன சீக்கிரம் வண்டிய கிளீனா துடைக்கச் சொல்லு. ஐயோ ஆண்டவா உங்கள ஏவி ஒவ்வொரு வேலைய சொல்லறதுக்குள்ள எனக்கு வயசு ஆகிவிடும்.


தூக்கம் நிறைந்த கனவுகள்

 

 “சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் – “சார்….” “சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும்,


ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?

 

 குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க” “ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?!!” “தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”

Sirukathaigal

FREE
VIEW