கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2012

22 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்பாட்டி

 

 தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை பின்புற வெண்டிலேட்டர் வழியாக உள்ளே தள்ளி விட்டுப் பூனை போல் நடந்து காம்பௌண்ட் சுவற்றைத் தாண்டித் தெருவில் குதித்தான் பாம்பாட்டிக் குட்டன். ‘அப்பாடி… ஒரு வழியா வேலை முடிஞ்சுது… ஒரு ரூபா ரெண்டு ரூபாயா?… மொத்தமா இருபதினாயிரம்… போதும்… இந்தத் தொழிலையே விட்டுட்டு கடைகண்ணி வெச்சு… பொண்டாட்டி புள்ளைகளோட நிம்மதியாப் பொழைக்கலாம்” வீட்டை அடைந்ததும் ”டெய…ராசுக்குட்டி…


மாமனோட மனசு!

 

 எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ… அது நடந்தே விட்டது. ‘போச்சு… என் வாழ்க்கையே போச்சு… இப்படியெல்லாம் ஏடாகூடமா ஏதாச்சும் நடந்துடும்னுதான்… மூணு வருஷமா இந்தக் கிராமத்துப் பக்கமே வராம இருந்தேன்… இந்த அம்மாதான்…’பாட்டி ரொம்ப சீரியஸா இருக்குடா…உன் பேரைத்தான் ஈனஸ்வரத்துல கூட முனகிக்கிட்டிருக்கு… அநேகமா அந்த உசுரு உன்னைப் பார்க்கறதுக்காகத்தான் காத்திட்டிருக்குன்னு நினைக்கறேன்… அதனால உடனே புறப்பட்டு வந்து… உன் பாட்டியோட முகத்தைக் கடைசியா பார்த்துக்கடா…” என்று போனில் அழாக்குறையாகக் கெஞ்சி, என்னைய வரவழைச்சு…


தீதும்….நன்றும்!

 

 ‘என்ன அபிராமி… நாம சாப்பிடலாமா?” அண்ணி சகுந்தலா கேட்க, ‘இருங்க அண்ணி…அண்ணனும் வந்துடட்டும்” ‘அது செரி… உங்கண்ணன்…ஊர்ப் பெரியவங்களோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டாருன்னா அவ்வளவுதான்… நேரம் போறதே தெரியாம பேசிட்டேயிருப்பாரு… பாவம்…கொழந்தைக பசில வாடிப் போயிடுச்சுக” மெல்ல எழுந்து போய் வாசல் நடையருகே நின்று வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தாள் அபிராமி. ‘அடடே… தங்கச்சி எப்ப வந்தாப்புல?” பெரியவர் ஒருவர் அவளைப் பார்த்ததும் கேட்க, ‘என்ன ஓய் இப்படிக் கேட்டுட்டீர்?…. உமக்கு விஷயமே தெரியாதா


ஞானோதயம்

 

 ‘கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” மருத்துவமனையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த உடல் தடித்த மனிதர் தன் கருத்தை உடனிருப்பவரிடம் சொல்ல, ‘என்னத்தைப் பண்றது… இப்பத்தான் ஜனங்க புத்தியே சின்னப் புத்தியாவல்ல போச்சு…” அவர்களது பேச்சை அலட்சியம் செய்தபடி நடந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தார் டாக்டர் பரமசிவம். வேகமாக வந்த நர்ஸிடம் ‘என்னம்மா… என்ன கேசு!” ‘கார் கதவு லாக் ஆகி… உள்ளார சிக்கி … மூச்சுத்


அப்பா அறிவாளிதான்!

 

 அருண் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது மணி 6.30. ஏனோ வீட்டிற்குப் போவதற்கே வெறுப்பாயிருந்தது. அப்பாவை நினைக்கும் போது கொஞ்சம் கோபமாகவும் நிறைய குழப்பமாகவும் இருந்தது. ‘ஏன் அப்பா திடீர்ன்னு இப்படி மாறிட்டார்?… மூணு மாசம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தானே இருந்தார்… இப்ப என்ன ஆச்சு?… கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா வேலை கெடைக்காம… தண்டச் சோறு தின்னுட்டிருந்தேன்… அப்பெல்லாம் கூட இப்படிக் கோபப்பட மாட்டார் … இவ்வளவு கேவலமாப் பேச மாட்டார் … இப்ப, இந்த மூணு

Sirukathaigal

FREE
VIEW