கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

பூச்சிக்கிழவி

 

 ”இந்தா வாரேன்…. பிள்ளைகளா…. பெசாசுக, ஒங்காத்தாமாரு ஒங்கள எந்த நேரத்துல பெத்தாளுக” உட்கார்ந்த இடத்திலிருந்து கையை அரை வட்டமடித்துத் தடவி ஊனுகம்பைத் தரையில் தட் தட் என்று பலங்கொண்ட மட்டும் அறைந்தாள். இருந்த நாலைந்து பேரும் கலைந்து ஓட்டிவிட்டார்கள். அவனும் அமல்ராசும் கிழவியின் ஊனுகம்புக்கு எட்டாத தூரத்தில் பத்திரமாகப் பதுங்கிக்கொண்டார்கள். ”கம்ப தூக்கிட்டு ஓடிருவமா? “அமல்ராஸ் குசு குசுத்தான். “ஏ பாத்துடா, மாட்டுனமுன்னா அன்னைக்கி ஊச்சி மூக்கனுக்கு உழுந்த மாதிரி உழுந்துரும்” அமல்ராஸ் பூனைபோல எட்டெடுத்து வைத்து


நேரக் கொடுமை

 

 தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக ஒலிக்கும் பட்சத்தில் நிறுத்திக் கேட்பதுண்டு. அநத் ரிமோட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் என் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்கும். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கூட அந்த ரிமோட் என் அருகிலேயே தலையணைக்கு பக்கத்திலேயே இருக்கும். யாரேனும் எடுத்துவிட்டால் அவ்வளவு தான். என் உள்மனம் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் என்னிடம் இவ்வாறு கூறும். “ஐயோ உனது வலது


பரமசிவம்

 

 ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே கருப்பை அப்பிக் கிடந்தது அந்தக்காடு. கண்ணுக்கு புலப்படாத ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் இரண்டு புறமும் மண்டிக்கிடந்த புதர்களில் இருந்து ஓயாமல் வந்துகொண்டிருந்தது சில்வண்டுகளின் க்ரீச் க்ரீச் ஒலி. அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டு நாய்களின் குரைப்பும், ஓனாய்களின் ஊளையும் கேட்டுக்கொண்டு இருந்தது. மணித்துளிகள் நடு நிசியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. செல்போன் வெளிச்சத்தில் மணி 11:45ஐ பார்த்து விட்டு இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கிறது என்றான் அந்த ராட்சத பாறைக்கு பின்னாலிருந்து


வேறுவேறு மனிதர்கள்

 

 அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை உதிர்த்து விழுந்த முன்பக்க வழுக்கை, எப்போதும் சலவை மணம் மணக்க உடுத்தும் வெள்ளை உடை. இவைகள்தாம் ஜேக்கப் வாத்தியாரைப் பெயர் சொல்லி யாரையும் அழைக்கவிடாமல் ‘சார்’, ‘தலைவரே’, ‘அய்யா’ என்றெல்லாம் அழைக்க வைத்தது. அவருடைய எஸ். ஆர். புத்தகம், பி. எப், ஆர். டி., பென்ஷன் எல்லாம் சரிபார்த்து, கணக்கு டேலி ஆகிக்கொண்டிருந்தபோது நான் அந்த ஸ்கூலில்


நோக்கப் படாத கோணங்கள்

 

 இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன். ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல


கொத்தமல்லிக்குடிநீர்

 

 அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது. இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே


சுமைகள்

 

 தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த நாட்டோடு தனக்கிருந்த மதிப்புப் போம் என்று நிச்சயமாகப் பாடியிருப்பார்கள். அப்படியொரு கேவல நிலைக்கு வந்து விட்டேனே என்ற நினைப்பு வரும்போதெல்லாம் அவரையும் அறியாமல் கண்கள் குளமாகிவிடும் துரைரட்ணத்துக்கு. என்ன துரைரட்ணம் மகள் டெலிபோன் ஏதாவது எடுக்கிறவளோ? என்று கேட்கும் நண்பர்களின் கேள்வியில் தொனிப்பது ஏளனமா ? அல்லது இரக்கமா? என்று அவருக்குப்


காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்

 

 **சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை** காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன்


குட்டான்

 

 விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன்.அடுத்த


நீ, நான், நேசம்

 

 நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை.