கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

(அ) சாதாரணன்

 

 ஒரு முறை அவர் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நான் எழுந்து அவரை வரவேற்றேன். அவர் தம் ஷூக்களைக் கழற்றியபடியே என்னைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார். நான் பதிலுக்கு ஒரு மரியாதை கலந்த புன்னகையை அவர் பால் வீசியபடி என் அன்பை வார்த்தைகளால் விவரித்து அன்புடன் அவரைப் பார்த்தபடி இருந்தேன். எனக்கு பழைய நினைவுகள் எப்படி மேலெழுந்து வந்ததோ, அவருக்கும் அதேபோன்று ஒரு உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அறையின் உள் மெல்ல வந்து இருக்கையில் அமர்ந்தார். நான் வினவினேன்,


இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்

 

 ஒரு பிரபல சினிமா நடிகர் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை ஒரு குழு மடக்கி, “இந்தச் சினிமாவைப் பார்க்கலாமா ? கூடாதா என்று நீங்கள் சொல்லுங்கள்?” என்று மைக்கை நீட்டி, காட்சிப்பதிவு செய்தனர். நான் அந்தச் சினிமா கேவலமான சித்தரிப்புகளை மனித சமுதாயத்தின் மேல் சுமத்தி, காணும் ஒவ்வொருவரையும் அவமானமாக உணரும்படி செய்துவிட்டது என்று வெளிப்படையாகக் கூறுவதற்கு வெட்கப்படுபவன் என்பது அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. மற்றவர்களின் நம்பிக்கையைக் கெடுப்பதற்கு நான் யார் ? உண்மையை


பிறிது

 

 தேர்தல் 2060 ——– இந்த ஆண்டும் தமிழக தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் போட்டியிடும் கட்சிகளுக்கு ஆட்சி செய்ய உதவும் வகையில் வழிகாட்டுதலாக 1. கல்வி / மனித வளம், 2. இயந்திரம் / வியாபாரம், 3 . விஞ்ஞானம் / விவசாயம், 4. செயலாக்கம் என்ற பிரிவுகளில் செயல் திட்ட முன் வடிவங்களைக் கேட்டுப் பெற்றுள்ளது. இதில் இலவசம், முந்தைய கடன் ரத்து, ஒருசாராருக்கு உதவும்படிக்கு வாக்குறுதிகள் முதலியன தவிர்க்கப்பட்டுள்ளன. நாலாவது அம்சமான செயலாக்கத்தில் செலவினங்கள் குறைப்பு


ஒரு கடிதம்

 

 அன்புள்ள ஸ்நேகிதிக்கு, நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா ? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது? ஒரு சமயம் அம்மா,உடனே சகோதரி, சில சமயம் என் குழந்தை, என் பாட்டி என ஏதேதோ சொல்லத் தெரிந்த தெரியாத உறவுகள். உண்மை எப்போதுமே பழத்துள் விதை. சில சமயங்களில் ஒரு வாக்கியமோ, வார்த்தையோ அதன் வேளைக்கு முன் முளைத்துவிட்டால் அதன் பொருள் விளங்காது. முதலில் நீ என்னிடம் பேசிய வாக்கியம் “உம், வாங்க நீங்களும் எங்களோட சேர்ந்தாச்சு.” ஒரு


மாயமான்கள்

 

 அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள் இரண்டு மூன்றாகத் தெரிந்தன. எத்தனை சுருக்கமான வரிகள். அதன் பொருள் எவ்வளவு விரிவானது என்று அவளுக்குத் தெரியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அவளும் கிடுகு பின்னப் போனவள் தான். அம்மாவும் தானும் சேர்ந்து உழைத்தே சமாளிக்க முடியாமல் இருந்த வீட்டுப் பிரச்சனைகள். அதுவும் நாடு அவ்வளவு குழப்பம் இன்றி இருந்த நேரம்.


துரத்தும் நிழல்

 

 தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது? கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து தகவலும் இல்லை. அவன் தங்கி யிருக்கும் ‘லேபர் கேம்பிற்கு’ போன் பண்ணிக் கேட்ட போதும் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.எங்கு போய்த் தொலைந்தான்? இவர்கள் கம்பெனி விசாவில் இருந்து கொண்டே வேறெந்த


இண்டியானா ஜோன்ஸ்ம் அப்பாவு வாத்தியாரும்

 

 ”இண்டியானா ஜோன்ஸ்” இந்த பெயரை முதல் முறை கேட்ட போது ஏதோ சாப்பிடுகிற ஐஸ்கீரிமின் பெயர் என்று தான் நினத்தேன்.ஆனால் இந்த பெயரும்,இதை எனக்கு அறிமுகபடுத்தியவரும் என் வாழ்வில் மிகமுக்கியமான மாற்றங்களுக்கு காரணமாயின.ஏன் எங்கள் பள்ளியில் படித்த பலரிடம் இவையிரண்டும் பல விதமான மாற்றங்களை உண்டு பண்ணின.அதுவரை வெறும் 45 சதவீதமாக இருந்த பள்ளியின் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு 80 சதவீதமாக உயர்ந்தது உட்பட. அதுவரை கற்கால மனிதனையும்,ஹரப்பா,மொகஞ்சதாராவையும் இடைநிலை வகுப்புகளுக்கு போதித்து


சொல்லக்கூடாதது…?

 

 ‘அவுங்கள நம்பி இம்புட்டுத் துணிய வாஷ் பண்ணி, கஞ்சி போட்டு எடுத்து வச்சிருக்கேன். இப்போ பாருங்க…ஆளைக் காணல…? – சுமதியின் சலிப்பு மனதில் பொங்கும் கோபத்தை வெளிப்படுத்திற்று எனக்கு. நான் பதில் எதுவும் பேசாமல் நின்றேன். எது சொன்னாலும் அது நிச்சயம் அவளுக்கு உகந்ததாக, சமாதானமளிப்பதாக இருக்கப் போவதில்லை. அவளுடைய கோபத்தைத் தணிப்பதாகவும் அமையப் போவதில்லை. பின் எதற்குப் பேசுவது? என்ன பேசுவது? ஏதோ பேசிவிட்டேன் என்றுதானே இப்போது பிரச்னையே…!? என்னால்தான் இந்தச் சங்கடம் நிகழ்ந்தது என்று


ஏழுமலை ஜமா

 

 சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது. எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே


மஞ்சுவிரட்டு

 

 ஒரு பச்சைக்கலர் தகரப்பேட்டி, கண்கள் குழிக்குள் கிடக்கிற பசி, துணைக்குச் சித்தப்பா. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அந்த ஊர் இன்னும் வறட்சியாகத் தெரிந்தது. வழி நெடுகக் கடந்து போன பொட்டல் காடுகளும் வேலிக்கருவேல மரங்களும் அது வரை பதிவு செய்யப்பட்ட சினிமாக் கிராமங்களை கிழித்துப் போட்டிருந்தது. வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்ததிலிருந்து அவன் வேற்று மனிதனாகிப் போனான். ஊதாரி, உருப்படாதவன் என்கிற பிம்பம் உடைந்து அரசாங்க முத்திரை குத்தப்பட்ட மரியாதை அவன் மேல் பதிந்தது. ரெட்டைப் போஸ்ட்டுக்கு வழியனுப்ப