கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை

 

 தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல். சாராயநெடி தெருவெங்கும் பனிமூட்டமாய் இறங்கி, உற்சாகமூட்டிக் கொண்டிருந்த சாயங்காலத்தில் ஜப்பான் கிழவன் கிழக்குப் பார்த்துக் கும்பிட்டு தெருவிறங்கினான்.  “நானும் வரேன் தாத்தா.” என்ற குரலை அலட்சியப்படுத்தினான். “வேட்டைன்றது எனக்கும் காட்டுக்குமான சண்டை” என்ற குரல் அலட்சியத்திற்குள் புதைந்திருந்தது. இனி அவன் மட்டும்தான். எல்லாமும் அவனுக்கு அலட்சியம்தான். வெகுநாட்களாகவே துயருற்றிருந்தான். துயரம் அவன் பேச்சை உறிஞ்சி விட்டிருந்தது.


உன்னோடு சேர்ந்து

 

 முட்டித் தள்ளியதில் கீழே விழுந்து இருப்பேன். நல்ல வேலை சமாளித்துவிட்டேன். அலுவலக நேரத்தில் பயணம் செய்வது இவ்வளவு கடினமா என்று யோசிக்கையில் ஏற்கனவே வியர்த்து இருந்ததோடு சேர்த்து சற்று அதிகமாய் வியர்த்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இப்படி ஒரு பயணத்தைதான் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கவலை அதிகரித்தது. அப்பாவுக்கு நான் ‘MBA’ படிக்க வேண்டும் என்ற கனவு. வெற்றிகரமாய் ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டன. இப்பொழுது சென்று கொண்டு இருக்கும் அலுவலகத்தில் என்னுடைய Project ஐ


குதிரை

 

 நான் சியாமளாவின் வீட்டைத்தேடிக் கண்டு பிடித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில்தான் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு எண் என்ன என்று எதுவும் மனதில் இல்லைதான். ஆனால் வீதி ஆரம்பத்தில் இருக்கும் போஸ்ட் ஆபீசும் அதன் நீட்சியாக நீண்ட அந்தச் சாலையும் மட்டும் நினைவில் இருந்தன. வீட்டு வாசல் முன்னால் வண்டியை நிறுத்தியபோது, வெளியே வெறுமே கொண்டிதான் போடப்பட்டிருந்தது. உள்ளே போகலாம் என்று எண்ணியவனாய் நுழைந்தேன். ஏதேனும் நாய் குரைக்குமோ என்ற தயக்கம் பிறந்தது.


அம்மை

 

 நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க” என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். “ஆமா… டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி நின்னுட்டேன்” அதை உறுதிப்படுத்துவது மாதிரி சொல்லிச் சிரித்தேன். “என்ன அம்மை போட்டுடுச்சா?” தலைமயாசிரியர்களுக்கு யார், யார் எதற்கு விடுமுறை எடுப்பார்கள் என்பதில் ஒரு தீர்மானம் இருக்கத்தான் செய்தது. “நின்னுட்டேன். மறுபடியும் இங்க வருவேன்னு நினைச்சுகூட பார்க்கல” “என்ன கருணாகரன் ஸார். எவ்ளோ பெரிய பிஸினஸ்மேன் நீங்க? இவ்வளவு சாதாரணமா நின்னுட்டேன்னு சொல்லிட்டீங்களே…


புதிய நந்தன்

 

 1 நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப்புடம் போட்ட பின்னர் வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர் சந்தோஷ – அல்லது துக்க – சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய்மறந்தது. இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதிகூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந்தூக்கம். இப்பொழுது ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன், வெற்றிலை பாக்குக் கடை என்ற ஷாப்பு, காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்துவிட்டன. எப்படி வந்தன என்ற சமாசாரம் யாருக்கும் தெரியாது. ஆனால், நந்தன் பறைச்சேரியில்


கருப்பு வெள்ளை

 

 தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில் அப்படியொரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் அவனை ஏங்க வைத்து விட்டது அவனது தோலின் நிறம். அவன் இருளில் நடந்து வரும் பொழுது சிரித்தாலன்றி அடையாளம் கண்டு கொள்வது கடினம். இருளோடு இருளாக பிரிக்க முடியாத ஒரு இணைப்பாக ஒன்றியிருப்பான். தினசரி 4 வேளை பல் துலக்குவான். அந்த பல்லை தும்பைப் பூ போல் வெண்மையாக வைத்துக்


கடிகாரம்

 

 சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை ஒரு எலக்ட்ரிக் கடைக்காரன் வாடகைக்கு எடுத்து குடௌனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். ஒரு கோடை காலத்தின் சாயந்திர வேளையில் எங்கள் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையை இதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். கான்கிரீட் தளம் சூடேறி, வெக்கையானது எங்கள் கிளப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பாதாம் மரத்தின் இலைகளில்கூட துளியும் அசைவில்லை. காற்று ஸ்தம்பித்து


லொல்லிம்மாவின் சொத்து

 

 ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும் இருக்கா என்ன? புத்தகப்பை, விட்டா என்னோட துணிகளுக்கு நடுவே, இல்லன்னா என்னோட புத்தகங்களை வைக்கிற இடம் இதுக்குள்ளதான் பதுக்கி வைக்க முடியும். இந்த இடமெல்லாம் அப்பாவுக்குத் தெரியாதா என்ன? காலையில அவரு ஷிப்டு போற அவசரத்துல கட்டாயம் தேட மாட்டாருங்கிற தைரியத்துல அதை தற்காலிகமா பதுக்கி வைக்கிற இடமான தலையணை உறைக்குள்ள வைச்சிருப்பேன். ஆனா எந்நேரம்


கடைசித் தகவல்

 

 மென்மையாக உரசிச் சென்றது காற்று. கன்னக் கதுப்புகளில் பட்டுச் சென்றது காற்றா பட்டுத் துணியா என்று கேட்டால் முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போவான் அவன். அப்படியொரு மென்மை, தலைமுடிகளுக்குள் அந்த தென்றல் புகுந்து விளையாடும் பொழுது அவனுக்குத் தோன்றியது இதுதான். அது நிச்சயமாக தேவதையின் கைகளாகத்தான் இருக்க வேண்டும். அது மட்டும் அருவமாக இல்லாவிட்டால். அதனுடன் கைகோர்த்துக் கொண்டு விளையாடுவான். என்னவொரு இனிமையான மணம் அது. எங்கிருந்து வீசுகிறது அது. உலகின் அத்தனை மலர்களையும் சேர்த்து வைத்து,


காற்றின் தீராத பக்கங்கள்

 

 இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது கேவலமாய் ஒதுங்கிப் போவார்கள், ஏதேனும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டவும் கூடும், அது அவரவர் தரத்தின் வெளிப்பாடாய் அமையும். அதற்கு, தான் காரணமாக அமையும் நிலை எழும். வலிய ஒரு வெற்றுச் சூழலை ஏற்படுத்திய நிலையில் இதில் ஆகப்போவது என்ன? அவனவனுக்கு அவனவன் கஷ்டங்கள். அவரவர் உணர்தலின் வெளிப்பாடாகவும், செயலுாக்கமாகவும் அமைகின்றன. இது வேண்டும், வேண்டாம்