கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

287 கதைகள் கிடைத்துள்ளன.

என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

 

 பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள். “உன் கை காலு சுருங்கி நீ குள்ள பிசாசு போல ஆயிடுவே” “உன்னோட கண்ணுலாம் சிவந்து முகம் கறுத்து நீ கொள்ளிவாய் பிசாசு போல பூச்சி போல கெடப்பெ” “நீ ரத்தம் குடிச்சி, உன் வயிறு உப்பி, வெடிச்சி நீ பூச்சாண்டியா ஆயிடுவே” அசரீரிகளின் குரல்கள் எனக்கு சாதகமாகவும் முரணாகவும் எனக்காக


அம்மா x அப்பா = நான்

 

 அம்மா அப்பாவுக்குள்ள எப்பவும் சண்டைதான். எதுக்குத்தான் சண்டை வருதுன்னு சொல்லவே முடியாது. எப்பப் பார்த்தாலும் சண்டைதான். ஏதாச்சும் ஒன்றை அம்மா சொல்ல, அதை அப்பா மறுத்துப் பேச அல்லது அப்பா சொல்ல அதை அம்மா முடியாதுங்க, சண்டை வந்துடும். அப்டியே பேச்சுக்குப் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தைன்னு வளர்ந்திட்டேயிருக்கும். எதுக்காக இவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தோணும். ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடணும்னு எங்கேயாவது, யாராவது சேருவாங்களா? அல்லது சேர்த்துதான் வைப்பாங்களா? சந்தோஷமா, ஒத்துமையா வாழணும்னுதானே கல்யாணம்


கிழவன் இந்நேரம்…

 

 இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம் எங்கே இருக்கிறது? எதுவும் தெரியவில்லை; இலக்கற்று நடந்து கொண்டிருக்கிறேன். விளக்குகளின் பிரகாசமான ஒளியில் தெரு வெறிச்சோடிக்கிடக்கிறது. கடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. எப்போதாவது சிலர் வாகனங்களில் என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சில பாதசாரிகள் தென்பட்டார்கள் என்றாலும் அவர்களும் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விட வேண்டும் என்ற அவசரத்துடனேயே நடக்கிறார்கள். பெரிய பாரத்தை சுமந்து செல்வது போல இரவு


விசுவாசம்

 

 சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன்


ஆச்சரியமான ஆச்சரியம்

 

 இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான். அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு எழுந்ததேயில்லை. அவன் பல்துலக்கியதே இல்லை. அவன் தலையில் எண்ணெய் தேய்த்ததேயில்லை. ஆனால், அவன் பள்ளிக்கு தவறாமல் செல்கிறான். ஏனெனில் பள்ளிக்கூடம் சென்றால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆம் அன்றுதான் நான் அவனை புரிந்து கொண்டேன். அவனது எதிர் செயல் எனக்கெதிராகத்தான்