கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 18, 2012

9 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு இயந்திரங்கள்

 

 பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை. இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான். கடையின் முன் கட்டி தொங்க விடப்பட்ட பத்திரிகைகள் உயிருக்குப் போராடுவதுபோல் படபடத்துக் கொண்டிருந்தன. எழுத்தைக் கூட இங்கே விற்கிறார்கள் என்ற வினோத எண்ணம் ஏனோ எழுந்தது. தோளில் பையும் முகத்தில் களைப்பையும் மாட்டிக்கொண்டு வேலை முடித்து நிறைய பேர் போய்க் கொண்டிருந்தார்கள். நின்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து ஒரு பெண் வெறித்து பார்த்தபோது, இவன் பக்கத்தில் நின்றிருந்தவன் அவசர


கண்ணாடி உலகம்

 

 விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பதில் கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு வா என்றபடி என்னை அடிக்கடி அழைத்து செல்ல வரும் என் வெளிநாட்டு அத்தையிடம் மறுப்புகளை மட்டுமே பதிலாய் வைத்துவிட்டு பாட்டியுடனே அந்த விழுதுகளை ரசித்தபடி வாழத்தான் எனக்கு விருப்பம். நிதமும் என்னைத் தலைகோதி உறங்க வைக்க வெவ்வேறு வித கதைசொல்லியாகவே மாறிவிடுவாள் பாட்டி. அப்படித்தான் ஒரு


சினிமாவுக்கு..

 

 அந்த மூன்றாவது அடுக்கில் 20 சேலைகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையின் பார்டர் நிறம் பச்சையாக இருந்ததால் 7வது முறையாக நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் அடர் நீலநிறமாக இருந்திருந்தால் கடவுள் கருணையின் பெயரில் என் மனைவி ஒரு முடிவுக்கு வந்திருப்பாள். ஆனால் துரதிஷ்டம் துரத்தி அடிக்கும் பொழுது என்ன செய்ய முடியும்? 3 முறை குட்டித் தூக்கம் போட்டாகிவிட்டது. வழக்கமாக அலுவலகத்தில் நடைபெறும் விஷயம்தான் என்றாலும் விடுமுறை நாளான இன்றும் அலுவலக நினைவை ஏற்படுத்தும் இந்த குட்டித்


இலக்கிய ‘அறிவுஜீவி’

 

 விண்ணைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது இந்த விண்கலம். என்னைச் சுற்றி வெள்ளை நிறத்தில் வேற்று கிரகவாசிகள். நடுவில் அமர்ந்திருக்கிறேன் நான். அமர்திருக்கிறேன் என்றா சொன்னேன். இல்லை அமர்த்தப் பட்டிருக்கிறேன். கடத்தப் பட்டிருக்கிறேன். முதன் முதலாய் பூமியிலிருந்து விண்வெளியின் ஏதோ ஒரு கிரகத்திற்கு கடத்தப்படும் முதல் மனிதன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமைதான். நான் தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கியவாதி. இதுவரை மூவாயிரத்து இருநூற்று இருபத்தாறு பக்கங்களில் ஒரு குறுநாவலும், தலா ஐயாயிரத்து சொச்ச பக்கங்களில் இரண்டு


பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்

 

 இவன் கட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் போகாமலிருந்ததில்லை. ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், மாநாடு, ஆர்ப்பாட்டம், தர்ணா என, எல்லாவற்றுக்கும் – பல நிகழ்ச்சிகள் இவனுக்கு நேரடியாக சம்பந்தமற்றவை என்றாலும்கூட – எல்லாத் தோழர்களையும் சந்திக்க, அளவளாவ ஒரு வாய்ப்பு என்று தோளில் பையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். மாநாட்டில் பேராளராகக் கலந்து கொள்வது என்பது பெரும் வாய்ப்புதான் என்றாலும் இந்த மாநாட்டில் இவனால் கலந்து கொள்ளமுடியவில்லை. அலுவலகத்தில் தணிக்கை நடந்து கொண்டிருந்தது.