கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 13, 2012

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பகல் ஒரு இரவு

 

 ஒரு பகல். சுண்டு விரல் கனமே ஆன கம்பிகள் அவன் அறையின் சன்னலுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன. துருப்பிடித்த ஹைதர் அலி காலத்துக் கம்பிகளாக இருந்தாலும் காலையில் சூரியன் துணிச்சலுடன் உள்ளே வந்து வணக்கம் சொல்லியது. அது வரும் போது நிச்சயமாக அவன் கண்விழித்திருக்கவில்லை. வேறு வழியில்லை. அவன் வணக்கத்திற்கு கதிரவன் காத்திருக்கத் தான் வேணும். எழுந்தவுடன் கண்ணைக் கசக்கிவிட்டு வணக்கம் சொல்வதற்கு யத்தனித்தான். தூக்கக் கலக்கத்தில் மங்கலாகத் தெரியும் சன்னலுக்கு நேரெதிர் இருக்கும் சுவற்றைப் பார்த்தான். பழைய


எது நிஜம்?

 

 இரவு நேர புழுக்கம் நித்திரையைத் தாலாட்டாமல் எழுப்பியது. இப்படி கொஞ்சநாளாக கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை. அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும். காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரிப் பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்லத் தொடங்கி விடும். இதோ தொடங்கி விட்டது. அக்கம் பக்கம்


விட்டு விடுதலையாகி…

 

 இரவு நேரம் பதினோரு மணி சுமார் இருக்கும். சாவடியின் மையப்பகுதியில் திம்மைய நாயக்கர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அந்த பாடாவதி தூங்கி வழியும் சாவடியில் அவரைச் சேர்ந்த ஆட்கள் கம்பீரம் தெறிக்க உட்கார்ந்ததும் நின்று கொண்டும் பரபரப்பாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். அது ஒரு மாநகரமும் இல்லாமல் சிற்றூரும் இல்லாத ஒரு பேரூராட்சிக்கு அடுத்தபடியான ஒரு ஊர். பிராது இதுதான். சுடுகாட்டில் குழி தோண்ட வேண்டிய, பிணம் பொசுக்கவேண்டிய இனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஒரு இளைஞன் நாயக்கமார் சமூகத்தைச்


வலி உணர்ந்தவன்

 

 கல்லூரிகள் எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம்களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப் போய்க் கொண்டிருக்க, அல்லது கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, இவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல் பூக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது. அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் இன்னும் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டி


என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

 

 பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள். “உன் கை காலு சுருங்கி நீ குள்ள பிசாசு போல ஆயிடுவே” “உன்னோட கண்ணுலாம் சிவந்து முகம் கறுத்து நீ கொள்ளிவாய் பிசாசு போல பூச்சி போல கெடப்பெ” “நீ ரத்தம் குடிச்சி, உன் வயிறு உப்பி, வெடிச்சி நீ பூச்சாண்டியா ஆயிடுவே” அசரீரிகளின் குரல்கள் எனக்கு சாதகமாகவும் முரணாகவும் எனக்காக


அம்மா x அப்பா = நான்

 

 அம்மா அப்பாவுக்குள்ள எப்பவும் சண்டைதான். எதுக்குத்தான் சண்டை வருதுன்னு சொல்லவே முடியாது. எப்பப் பார்த்தாலும் சண்டைதான். ஏதாச்சும் ஒன்றை அம்மா சொல்ல, அதை அப்பா மறுத்துப் பேச அல்லது அப்பா சொல்ல அதை அம்மா முடியாதுங்க, சண்டை வந்துடும். அப்டியே பேச்சுக்குப் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தைன்னு வளர்ந்திட்டேயிருக்கும். எதுக்காக இவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தோணும். ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடணும்னு எங்கேயாவது, யாராவது சேருவாங்களா? அல்லது சேர்த்துதான் வைப்பாங்களா? சந்தோஷமா, ஒத்துமையா வாழணும்னுதானே கல்யாணம்


கிழவன் இந்நேரம்…

 

 இப்போது இந்த நகரத்தில் நான் எங்கே இருக்கிறேன்? இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் இங்கே வந்து இறங்கிய பஸ் நிலையம் எங்கே இருக்கிறது? எதுவும் தெரியவில்லை; இலக்கற்று நடந்து கொண்டிருக்கிறேன். விளக்குகளின் பிரகாசமான ஒளியில் தெரு வெறிச்சோடிக்கிடக்கிறது. கடைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. எப்போதாவது சிலர் வாகனங்களில் என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். சில பாதசாரிகள் தென்பட்டார்கள் என்றாலும் அவர்களும் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விட வேண்டும் என்ற அவசரத்துடனேயே நடக்கிறார்கள். பெரிய பாரத்தை சுமந்து செல்வது போல இரவு


விசுவாசம்

 

 சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். பின் சத்தம் வேறு மாதிரி இருக்கவே அது பற்றி ஆறிய ஆவல் கொண்டவர்களாகத் தங்கள் குடியிருப்புகளின் தட்டிப்படல்களையும், சாக்குப் படுதாக்களையும் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். ஒட்டிய வயிறுகளுடன்


ஆச்சரியமான ஆச்சரியம்

 

 இது புரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான் சாப்பிடுவான். அவன் 9 மணிக்குமுன் படக்கையைவிட்டு எழுந்ததேயில்லை. அவன் பல்துலக்கியதே இல்லை. அவன் தலையில் எண்ணெய் தேய்த்ததேயில்லை. ஆனால், அவன் பள்ளிக்கு தவறாமல் செல்கிறான். ஏனெனில் பள்ளிக்கூடம் சென்றால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆம் அன்றுதான் நான் அவனை புரிந்து கொண்டேன். அவனது எதிர் செயல் எனக்கெதிராகத்தான்


வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்

 

 விடுமுறையன்றும் வழக்கம் போலவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது நியூயார்க்கின் அந்த சாலை. வாகனத்தின் இரைச்சல்கள் சுவர்க்கோழிப் போல் ஓயாமல் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. அருணுக்கு மெல்ல விழிப்பு வந்தது. கண்ணைத் திறக்க விருப்பமில்லாமல் மெதுவாய்த் திறந்தான். நேரம் பத்தைத் தாண்டி பதினொன்றை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. “என் செல்லக் குட்டி எழுந்திருடா” என்று அம்மாவின் கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து வரும் சொற்கள், “கூ கூ” என்று ஏதோ ஒரு மரத்திலிருந்து கூவும் குயிலின் ஓசை, எப்போதுமே ஆரத்