Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 5, 2012

6 கதைகள் கிடைத்துள்ளன.

பிறவா வரம் தாரும்

 

 கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த ஒரு கடமையும் பாக்கி இல்லை. சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்தாகிவிட்டது. ஒன்றல்ல… இரண்டல்ல.. அறுபது ஆண்டுகள் தீர்க்க சுமங்கலியாய் வாழும் இந்த சந்தோஷ நொடிகள் அற்புதமானவை. இந்த ஆனந்தத்தை அனுபவித்தபடி இறுதி மூச்சை விட்டு விட வேண்டும். இவள் கடந்தவைகள் நாற்றம், அழுக்கு, துன்பம். ஆனால் இத்தனையைக் கடந்தும் இவள் இன்னமும் மணக்கிறாள் என்றால்


உறவு வரும், பிரிவு வரும்

 

 லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு வருகிறபோது, அது தன்னுடைய வேலையைக் காட்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்னி ஷோவுக்குப் போகலாமென்று கிளம்புகிற போது, பாதி தூரத்தில் ஆஃப் ஆகிவிடும். வேகாத வெயிலில் ஸ்கூட்டரோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டி ருப்பேன். ஸைடு கதவைக் கழட்டி, பெட்ரோல் ஓட்டத்தைச் செக் செய்து, ஸ்பார்க் ப்ளக்கைக் கழட்டித் தேய்த்துத் தேய்த்துத் திரும்ப மாட்டி, உதையோ உதையென்று உதைத்து… இத்தனைக்கும்,


நினைவுத் தீண்டல்கள்

 

 மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடும் தற்போதைய நகர (நரக) வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது குழந்தைப்பருவத்தின் நினைவுகள் நெஞ்சைத் தழுவிச்செல்லும்போது இனம்புரியாத ஏக்கம் உருவாகிறது, அந்த வாழ்க்கையே தொடர்ந்திருக்கலாமோ என்று. நானொன்றும் நகரத்தின் அழுத்தமான வாழ்க்கையில் என்னை வெகுவாக அமிழ்த்திக் கொண்டவனல்ல. ம்ஹும்…அதெல்லாம் அந்தக்காலம் என்று பெருமூச்சு விட்டுப் பேச வயதில் பழுத்த பழமும் அல்ல. இருந்தாலும் என்னுடைய குழந்தைப்பருவம் எனக்குத் தந்து சென்ற நினைவுகள் இன்றும் ஆழ்நெஞ்சில் சுகமான வடுக்களாய் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது அவை மேல்மனத்திற்கு


நசிந்தப் பூக்கள்

 

 “..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,”என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக தொலைபேசியை அணைத்து அதனிடம் மட்டும் காட்டமுடிந்த தன் கோவத்தைக்காட்டி இயலாமையை பூசிக்கொண்டான். தான் அடிக்கடி விரும்பிச்சாப்பிடும் மிளகாய் பஜ்ஜி கடை பக்கத்திலிருந்தும் இவன்யிருந்த பீச்சில் யாருமில்லாததைப் போலவே தெரிந்தது, உலகமே இவனை தனித்துவிட்டதுப்போல தெரிந்தது. வர வெள்ளி கல்வி அமைச்சர் வரதால அன்றே தன்னோடைய ‘நசிந்தப் பூக்கள்’ நூல வெளியிடலாம்னு யோசிச்சான் அதனால இலக்கிய சபா வழியா


எரிமலை வாசல் பூ

 

 உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?’ என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. ‘ஸ்பீக்கிங்’ என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, ‘வணக்கம் சார், என்னை உங்களுக்கு