Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 4, 2012

66 கதைகள் கிடைத்துள்ளன.

குருடர்கள் எவ்வளவு?

 

  ஒரு நாள், மன்னர் அக்பர் ஒரு ஐயத்தை எழுப்பினார். ”உலகத்தில் குருடர்கள் தொகை எவ்வளவு?” இந்த வினாவுக்குச் சபைலிருந்தவர்களுள்பெரும் பகுதியினர், உலத்தில் குருடர்களின் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். ஆனால், கண் பார்வை உள்ளவர்களைவிட கண்பார்வையற்றவர்கள் தொகை மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும் என்னும் கருத்தைத் தெரிவித்தனர். அக்பர், ”பீர்பால் ! உம் கருத்து என்ன?” எனக் கேட்டார். பீர்பல் எழுந்து, ”மன்னர் பெருமானே ! இப்போது இங்கு சொல்லப்பட்ட கருத்தே குருட்டுத்தனமானதாகும். உலகத்தில்


மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

 

 அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர். ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார். அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை. மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார். ‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?’


பழமும் இல்லை! தோலும் இல்லை!

 

  அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார். அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினை கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார். ‘பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்துக் கொண்டேன்! நீங்களே வந்து விட்டீர்கள் இங்கே பார்த்தீர்களா? இலையில் வைத்திருந்த அனைத்து வாழைப் பழங்களையும்


ஆயிரம் முட்டாள்கள்

 

  பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார். வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு. அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ”நமக்காக என்ன கொண்டு வந்தீர்?” என்று கேட்டார். ”ஆயிரம் முட்டாள்கள்” என்றார்


படிப்பு எதற்கு?

 

  அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும். ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார். என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார். பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி