Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 4, 2012

66 கதைகள் கிடைத்துள்ளன.

கிடைத்ததில் தர்மம்

 

  ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில் எவ்வளவு தருமம் செய்வீர்?” எனக் கேட்டார் அக்பர். ‘நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்’ என்றார் பீர்பால். சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ! ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், ”நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு ரூபாயிலிருந்து நான்கின் ஒரு பகுதியை தர்மம் செய்துவிடும்’


மேலும் கீழும் உள்ள கை

 

 அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது இருக்கும் என்பதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?” என்று கேள்வியைக் கேட்டார். சபையோர் குழப்பத்தோடு பார்த்தனர். ”ஒரு போதும் அப்படி இருக்காது” என்று கூறி விட்டனர். அக்பர் பீர்பாலைப் பார்த்து, ”உம்முடைய


கண்ணால் காண்பது பொய்யா?

 

 அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து ‘கண்ணால் கண்டது பொய் ஆகுமா?” என்று வினவினார். ‘பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்” என்றார் பீர்பால். ”இதற்கு என்ன ஆதாரம்?” எனக் கேட்டார் அக்பர். சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால். ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால். அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார். அடுத்து, படுக்கை


பீர்பால் வீடு எது

 

 நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, ‘அமைச்சர் பீர்பால் வீடு எது?” என்று கேட்டார். அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார். பீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, ‘அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்’ எனச் சுட்டிக்காட்டினார். அந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் சிறிது


நச்சுனு ஒரு காதல் கதை

 

 “டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா”. Outlook-ல் pop-ஆன “This evening special Dinner” click செய்து, “எவ அவ” என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி. ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ஆனந்த் ஆறு வருடமாகவும், ரவி இரண்டு வருடமாகவும் ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவி வெளிநாடுகளில் ஐந்து ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு, தாயகத்தில் குப்பைகள் அகற்ற (!) மற்றும் பெற்றோர்களுக்காக (!!) இந்தியா