Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2012

42 கதைகள் கிடைத்துள்ளன.

கமலி

 

 மலைகள் நடுநடுங்கும் கானல். தோட்டத்தில் வாழையும் கத்தாழையும் உச்சி வெயிலில் தனிப் பச்சை விட்டன. வடக்கே பார்த்த வாசல். வீடு, ரொட்டி அடுப்பாய் வெந்தது. ஆனால், கொல்லை ரேழி மட்டும் ஊட்டியோடு உறவாடிற்று. கொல்லை ரேழி மாமியாருக்கு மானியம். மதியம் அங்கு கட்டையை நீட்டிவிடுவார். நீட்டியாச்சு! தூளிக் கயிற்றை பங்கா மாதிரி இழுத்துக்கொண்டு சிவாமி கூடத்தில் புழுங்கினாள். மின்விசிறி கூடத்தில் அனலைக் கடைந்தது. அறையில் அனந்து, அண்டை வீட்டு, பின் வீட்டுக் குட்டிகள் தூங்கவொட்டாமல் ஏதோ கொட்டமடித்துக்கொண்டு


பச்சைக் கனவு

 

 முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு


பிம்பம்

 

 மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் – பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். ‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’. அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது. “எதிரே


பாற்கடல்

 

 நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே


நெற்றிக்கண்

 

 [ஓம் ' பூர்வ கதையில், பகவானானவர், பவித்ரனான தம்மைப் பழித்துக்கொண்டு, ஆணவம் பிடித்து அலையும் தாருகாவனத்து ரிஷிகளைப் பங்கப்படுத்துவதற்குப் புறப்பட்டார்.] பனிமலையில், சதா யோக நித்திரையிலேயே விறைத்திருந்த அவ்வுள்ளத்தில், பூவுலகின் ரஸமி புகுந்ததும், அது இளகிப் புளகித்தது. நடைவழியிலேயே, அவனது சிருஷ்டியின் சிறப்பு அவனையே பிரமிக்கச் செய்த்து. வண்டுகள் தேனைப் பூக்கிண்ணங்களினின்று வாரி வாரிக் குடித்துவிட்டு, அவனது காதருகே சென்று, ரீங்காரம் செய்தன. அத்துடன் புட்களின் கானமும் சேர்ந்து இழைந்தது. ஆநிரைகள் அமைதியாய், பச்சைகளை மேய்ந்தன. வேளையின்