Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2012

42 கதைகள் கிடைத்துள்ளன.

ஊமைப்பட்டாசு

 

 தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே ‘கங்கா ஸ்நான’த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெருமுழுவதும் விரவிக் கிடந்தன. யாரோ ஒரு சிறுவன் — வயது பத்துப் பன்னிரண்டுக்கு மேல் ஆகியுங்கூட அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் அணியாத, அணிய முடியாத சிறுவன் — கோழி குப்பையைக் கிளறுவதுபோல அந்தக் குப்பைகளைக் காலால் கிளறுவதும், வெடிக்காத பட்டாசு ஏதாவது கிடைத்தால் அதைக்


பூனைக்குட்டி

 

 மருத்துவமனைச் சீருடையைக் களைந்து விட்டு வீட்டிலிருந்து அம்மா கொண்டு வந்திருந்த வெளிர்நீல நிறப்பின்னணியில் மஞ்சள் பூப்போட்ட கவுனை அணிந்து கொண்டாள் வைதேகி. முன்பெல்லாம் உடலை இறுக்கிப் பிடித்தபடி இருக்கும் கவுன் இப்போது தொளதொளவென்றிருந்தது. நிமிர்ந்ததும் அவள் பார்வையை சட்டெனத் தவிர்த்து சன்னல் பக்கமாக வேப்பமரங்களைப் பார்ப்பதுபோல யாருக்கும் தெரியாதபடி விழியோரம் தேங்கத் தொடங்கிய கண்ணீர்த் துளிகளை விரல்களால் துடைத்துக் கொண்டாள் அம்மா. வைதேகியின் அருகில் நெருங்கிச் சென்ற அப்பா முதுகுப்பக்கமிருந்த கொக்கிகளைப் பொருத்தினார். பிறகு அவரே தலைமுடியை


மண்ணாங்கட்டித் தாத்தா

 

 தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட அசையவில்லை. ஒரே புழுக்கம். மரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி மண்ணாங்கட்டித் தாத்தா படுத்திருந்தார். தூக்குவாளியைக் கீழே வைத்துவிட்டு, ‘தாத்தா சாப்பாடு எடுத்தாந்து இருக்கேன். ஆயா குடுத்துட்டு வரச் சொல்லிச்சி…’ என்றேன். பார்வையை என் பக்கம் திருப்பிய தாத்தா, மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘தாத்தாவுக்குப் பசிக்கலை ராஜா, எனக்கு வேணாம்ப்பா…’


குமாரவனம்

 

 தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக் கொள்கிற சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பது போல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீர் அலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட்படுத்தாமல் சில கணங்கள் வேகவேகமாக


வேஷம்

 

 வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு. முடித்து விடுவீர்களா