Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 2, 2012

9 கதைகள் கிடைத்துள்ளன.

உறவு, பந்தம், பாசம்…

 

 இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை.


செம்மங்குடி (தன் ஊர் தேடல்)

 

 என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை வழி மூதாதையர் அநேக தலைமுறைகள், சமீபகாலம் வரை, இந்த ஊரில் வீடு, சொத்து, சுதந்திரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள். கர்நாடக சங்கீத உலகில் மிகவும் புகழ்பெற்று, இப்போது இருக்கும் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ அய்யரையும், காலஞ்சென்ற பிடில் வித்துவான் நாராயணசாமி அய்யரையும், அகால மரணம் எய்திய அவர் குமாரன் கலியாணசுந்தரத்தையும் தெரியாதவர்கள் மிகச் சிலரே, அவர்களும் இவ்வூர்காரர்களே. ஒரு


சுந்தரி

 

 கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப்பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்துவிட்டேன். ஆனால் என் தலையை உதறிக்கொண்டால், பரிதாபம் ‘ சிரமங்கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படியவைத்த எனது அழகான கிராப் தலைமயிர்


முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

 

 ‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம் அடிக்கப்பட்டதாக, நீலப் பூக்கள் நான்கு முனைகளிலும் வரையப்பட்டு அந்த பெட்டி இருந்தது. அவர் யாரைப் போலவும் இருந்ததாக யோசித்துக் கொள்ளமுடியும். ரயில் பெட்டியின் நெரிசலில் தூங்கிக் கொண்டே எதிரே வருகிறவர். சாராயக் கடை வாசலில் மேலும் குடிப்பதற்கு காசின்றி நிற்பவர். கல்யாணப் பந்தியில்